எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 3 செப்டம்பர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.


1001. வெள்ளன்னவே - சீக்கிரமாகவே. விடியற்காலையிலேயே, அதி விரைவாக.

1002. தொட்டுக்க - இட்லிக்கு சாதத்துக்குத் தொட்டுக்க வைக்கும் பதார்த்தைக் குறிப்பது. வெஞ்சனம், துவையல், அவியல், குருமா, சாம்பார், பச்சடி, சட்னி, குழம்பு,  அல்லது க்ரேவி போல.  


1003.அவங்காய்ந்தது - காணாததைக் கண்டது போல் நடந்துகொள்பவர்களைக் குறிப்பது. குறிப்பாக உணவு கிடைக்கும்போது.,  உணவுக்கில்லாமல் பட்டினி கிடந்தது போல் நடந்து கொள்ளும் முறை. வரட்சி, தீசல் பிடித்தது. 


1004. அண்டசாரல - பத்தவில்லை. ஒருவருக்கு எதையாது கொடுக்கும்போது அதை அவர் போதாது என கொடுத்தவரை உணர வைத்தல். அல்லது உணர்தல். ஒரு பொருள் எவ்வளவு உண்டாலும் அல்லது கிடைத்தாலும் ஒருவருக்கு அதில் திருப்தி இல்லை/பத்தவில்லை. அல்லது அது உடம்பிலோ மனசிலோ சாரவில்லை என்றும் கொள்ளலாம். 


1005. பச்சைவாடை அடிக்குது - குழம்பு கொதிக்கும்போது பச்சைவாடை போகும் வரை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கச் சொல்வார்கள். மசாலா வேகாத வாடைதான் ”பச்சை வாடை”. குழம்பில் மல்லித்தூள் பச்சை வாடை அடிக்கும் எனவே புளி சாம்பார்ப்பொடி போட்டு நன்கு கொதித்த பின் இறக்கச் சொல்வார்கள். வெங்காயக் கோஸ், குருமா போன்றவற்றிலும் தேங்காய் வரமிளகாய் சோம்பு மசாலா நன்கு கொதித்த பின் இறக்கவேண்டும். இல்லாவிட்டால் பச்சை வாடை அடிக்கும். உண்ண முடியாது. 





1006. நைநைன்னு நச்சுப்புடுவா - படுத்தி எடுத்தல். ஒரு பெண் தான் நினைத்த காரியத்தைச் செய்து முடிக்க நை நை என்று திரும்பத்திரும்ப அனத்துவதைக் கூறுவது. 

1007.வெள்ளாவி - உடுப்புகளை ஒரு பாத்திரத்தில் உவர் மண்ணுடன் போட்டுக் கொதிக்க வைத்துத் துவைத்து எடுப்பது வெள்ளாவி. 

1008. விராட்டி - மாட்டுச் சாணத்தை வைக்கோல், சிரட்டைத்தூள், ரம்பத்தூள் போன்றவை கொண்டு பிசைந்து சுவரிலோ தரையிலோ வட்டமாகத் தட்டிக் காயவைத்து எடுப்பது விராட்டி/ராட்டி எனப்படும். 

1009. மட்டுப்படுதல் - கண் தெரிதல், புரிபடுதல், ( கண் மட்டுப்படல என்பார்கள். ) வந்திருப்பவர் இன்ன உறவு முறை என்று புரிபடுதல், 

1010. கண்டமேனிக்கி – மனம் போன போக்கில். கன்னாபின்னாவென்று, ஒழுங்கற்றது, காணும் போக்கில், இஷ்டப்படி, சுய விருப்பப்படி,

1011. சள்ளக்கடுப்பு – உடல் வலி, கடுக்கும் வலி, கைகால் வலி, தீராத வலி.

1012. கெள – ஒத்துப் போதல். கிளை , சேர்ந்து கொள்ளுதல், சகாக்கள் கிளைவிட்டுக்கொள்ளுதல், ரொம்பக் கெள என்றால் ரொம்ப ஒத்துமை என்று அர்த்தம்.

1013. சாமாஞ்சட்டு – வீட்டில் இருக்கும் பாத்திரம் பண்டம்.  

1014. ஒவகாரம் – உபகாரம், உதவி, கை உதவி.

1015. ஒவத்ரியம் – உபத்திரவம், தொல்லை. கஷ்டம்,

1016. தாவலை – தேவலை, பரவாயில்லை, சரியாகிவிட்டது.

1017. வெரசா – விரைவாக, சீக்கிரமாக, அவசரமாக, உடனடியாக,

1018. மறுவடி – மறுபடி, அடுத்து, இன்னொருதரம்.

1019. சொருகுசட்டி – தூக்குச் சட்டி. சொருகும் மூடி போட்ட சட்டி.  

1020. ஆகாவரி போகாவரி – எதற்கும் ஆகாதது. போகாதது. வேஸ்ட் ஐட்டம், வீணாப் போனது. கழிவு., பழசுபட்டை, உதிரி.  


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம். 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 


85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.










டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள். 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

3 கருத்துகள்:

  1. எங்கள் பக்கம் பேசும் சொல்வழக்கும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கோமதி மேம்.

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...