இது காரைக்குடியில் உள்ள ஒரு அழகான இல்லத்தின் முகப்பு.
சில வீடுகளில் முன்னோர்களைக் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட இல்லம் ஒன்றில் அவர்கள் அப்பத்தாவின் புகைப்படத்தை எடுத்தேன்.
751*முன்னோர் வழிபாடு என்பது இன்றியமையாதது. நல்லதொரு நாளில் இல்லத்திலிருக்கும் ஆண்கள் ( திங்கள் அல்லது புதன் ) முன்னோருக்கு புத்தாடைகள் வாங்கிப் 752*போழையை ( பேழை ) எடுத்துத் 753*தடுக்குடன் கொண்டு சென்று குளத்தில் அலசிப் பறவைகள் நிழல் கூடப் படாமல் காயவைத்து மடித்து எடுத்து வந்து வீட்டில் வைப்பார்கள்.
753*சைவப்படைப்பென்றால் பெண்கள் பச்சரிச்சாதம் 754*பாற்சோறு பருப்பு நெய் மசித்து வாழைப்பழம் , கத்திரிக்காய் வாழைக்காய் அவித்து அப்பளம் பொரித்து வடை, 755*மரக்கறிக்காய் தோசை சுட்டுப் பாயாசம் 756*பால்பழம் வைப்பார்கள்.
757*அசைவப் படைப்பென்றால் 758*கோழிப் படைப்பாக இருக்கும். இத்தனையுடன் கோழியையும் சமைத்துப் படைப்பார்கள். முட்டை அவித்து வைப்பார்கள்.
சின்னஞ்சிறு குழந்தைகள் எண்ணெய் சீயக்காய் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள்.
இரவில் பாட்டையா பாட்டியாயா படங்களுக்கு முன் துவைத்த புது உடைகளை பாட்டையா பாட்டியாயா அல்லது இன்னபிற முன்னோர்களுக்காக வாங்கிய சட்டை போன்ற தனி உடைகளை தடுக்கில் நேர்த்தியாக அடுக்கி அதன் மேல் 759*ஆண்கள் என்றால் ருத்திராக்கம், மாலை, கவுடு, கைச்சங்கிலி சங்கிலி மோதிரம் போன்றவற்றை வைப்பார்கள். சிலர் புதிதாக வாங்கிய நகைகளையும் வைத்து அலங்கரிப்பதுண்டு.
760*பெண்கள் என்றால் சுமங்கலி என்றால் கழுத்துரு, தாலிச்சங்கிலிகள், வளையல்கள் மோதிரம், மிஞ்சி தோடு போன்றவற்றை வைத்து அலங்கரிப்பதுண்டு.
அலங்கரிக்கும் முன் நகைககளைக் கழுவித் துடைத்துதான் வைப்பார்கள். பூக்கள் , பூமாலைகளும் போட்டு அலங்கரிப்பார்கள்.
இரவில் பால்பழம் பாற்சோறு பாயாசம் ஆகியன ஒன்பது மணி வாகில் ரெடியானவுடன் சாமி வீட்டில் அலங்கரிக்கப்பட்ட உடைகள் நகைகள் முன்பு நுனி இலை போட்டுப் 761*பள்ளயம் போடுவார்கள்.
பள்ளயம் என்பது மேல் வரிசையில் காய்கறியும் கீழ்வரிசையில் நடுவில் பாற்சோறும் (அதன் நாற்புறமும் உரித்த வாழைப்பழங்களும்) அதன் இருபுறமும் வெள்ளைச் சோறும் அதில் பருப்பும் நெய்யும் ஊற்றி அவற்றின் நாற்புறமும் நான்கு வாழைப்பழங்களும் வெற்றிலை பாக்கு வைத்து படைப்பார்கள்.
சிலர் வீடுகளில் 762*படைப்புப் பணியாரமும் செய்வதுண்டு. இவற்றை எல்லாம் நெய்யிலேயே செய்வார்கள்.
763*வெளிவாசற்கதவைத் திறந்துவைத்து சாம்பிராணி தூப தீபம் காட்டி அனைவரும் வணங்கி சந்தனம் குங்குமம் விபூதி தரித்து உணவு உண்ணுவார்கள். கிட்டத்தட்ட பதினோரு மணி ஆகிவிடும்.
வீட்டில் வந்திருக்கும் விருந்தாளிகள் குழந்தைகளுக்கு சில இல்லங்களில் படைப்புவரை காத்திராமல் இரவுப் பலகாரங்களை ( இடியாப்பம் கோசமல்லி, கந்தரப்பம், இட்லி, கதம்பச்சட்னி )ஏற்பாடு செய்து வழங்கிவிடுவதுண்டு.
முன்பு அனைத்து ஐட்டங்களையும் சாமி வீட்டின் முன்பு 764*கோட்டை அடுப்பு அல்லது இரும்பு அடுப்பு வைத்து விறகு எரித்து 765*சிரட்டை போட்டுச் சமைப்பார்கள். இப்போது கேஸ் அடுப்புக்கு மாறிவிட்டார்கள்.
அதிலும் பல இல்லங்களில் அடுப்படியிலேயே வேலை செய்பவர் சமைத்து வைத்துவிட எடுத்து வந்து படைத்துவிடுகிறார்கள்.
நாமே செய்து படைக்க வேண்டும் என்ற சிரத்தை குறைந்துதான் வருகிறது. ( சிறிய வீடுகளிலேயே வெளியூரில் 766*புழங்கியவர்களுக்கு இந்த மாதிரிப் பெரிய வீடுகளில் ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கொருதரம் வருவதால் வேலை செய்யப் புரிவதில்லை. )
ஆனாலும் நாமே செய்து படைப்பது நல்லது. அனைவரும் சாப்பிடும் வரை 767*விளக்கெரிய வேண்டும்.
அனைவரும் சாப்பிட்டபின் இரவு மிஞ்சிய சாதத்தில் நீர் விட்டு வைப்பார்கள். நகைகளை மட்டும் அப்போதே எடுத்துவிடுவது உண்டு.
மறுநாள் 768*நீர்ச்சோத்துப் படைப்பு. பூக்களை எடுத்துப் பெண்டிர் அனைவருக்கும் கொடுப்பார்கள்.
769*அனுவல்காரர்கள் அந்த உடைகளை உடுத்திக் கொள்வார்கள். நீர்ச்சோற்றில் தயிர், சின்ன வெங்காயம், உப்புப் போட்ட கடாரங்காய் அல்லது நார்த்தங்காய் போட்டுப் பிசைந்து வைப்பார்கள்.
770* உப்புக் கண்டம் பொரித்து மரக்கறிக்காய் தோசை சுட்டு 771*வள்ளிக்கிழங்கை அவித்துத் தாளித்து 772*பருப்புத் துவையல் செய்வார்கள். இன்னும் மண்டி, பிரட்டல் போன்றவையும் செய்வதுண்டு.
இவற்றைப் படைத்துத் திரும்பக் கும்பிட்டு முன்னோர்கள் அருள் பெற்று அனைத்துப் பொருட்களையும் 773*யதாஸ்தானத்தில் வைப்பார்கள்.
வீட்டில் 774*குடிபுகுதல், திருமணம் போன்றவை நடக்கும் முன்பு முன்னோரின் ஆசி வேண்டிப் படைப்பதுண்டு.
775*சிலர் எளிமையாகப் பால்பழம் வைத்துப் பணியாரம் அல்லது தேன்குழல் ( எண்ணெய்ப் பலகாரம் ) செய்துவைத்து பூப்போட்டு வணங்குவதும் உண்டு.
இது கீழ் வாசலில் போடப்பட்ட ஒரு 776*திருமணக் கொட்டகை. இங்கே பந்தல் என்று சொல்லமாட்டார்கள். சுபகாரியத்துக்குப் போடப்படுவதன் பெயர் கொட்டகை. கல்யாணக் கொட்டகை என்றும் சொல்வார்கள்.
திருமணச் சடங்கில் பெண் அழைத்தபின் மாப்பிள்ளையும் பெண்ணும் 777*குலம்வாழும் பிள்ளை ( குலவாழும் பிள்ளை ) எடுத்தல் என்னும் சடங்கு நடைபெறும்.
அதற்கு மாப்பிள்ளை பெண் நிற்க இரண்டு தடுக்குப் போடுவார்கள். இங்கே 778*வெல்வெட்டில் தடுக்குப் போட்டிருக்கின்றார்கள்.
மாப்பிள்ளையின் மாமி 779*வெள்ளைப் பொங்கல் வைப்பார். அதை மூன்று இலைகளில் பள்ளயம் வைத்து ( சதுரமாக வைத்து ) நடுவில் வெல்லம் வைத்து நெய்யூற்றி நாற்புறமும் வாழைப்பழம் வைப்பார்கள்.
மூன்று புது பித்தளைப் பாத்திரங்களில் (ஒரு அண்டா இரு குடங்கள். ) நீர் நிரப்பி வைத்திருப்பார்கள்.
பெண்ணின் தாய்மாமாவும், மாப்பிள்ளையின் தாய்மாமாவும் பெண் மாப்பிள்ளையின் கைபிடித்து சுற்றி வந்து இந்தக் குடங்களில் மாப்பிள்ளை பெண்ணைக் கை விடச் சொல்வார்கள்.
இதில் ஏதோ ஒன்றில் இருக்கும் குழந்தை உருவத்தை மாப்பிள்ளை எடுத்துப் பெண் கையில் தரவேண்டும். மாப்பிள்ளை பெண் யார் எடுக்கிறார்கள் என்று சில சமயம் போட்டியாகவும் ஜாலியாகவும் இருக்கும் இச்சடங்கு :)
இதைச் செய்தபின் மாப்பிள்ளையும் பெண்ணும் நான்கு திசைகளிலும் திரும்பிச் சென்று இத்தடுக்குகளின் மேல் நிற்க மாமியார் 780*பெண்ணழைத்த சடங்கு செய்வார்.
அதன் பின் 781*வேவு இறக்குதல் நடைபெறும். மாப்பிள்ளை வீட்டுப் பெண்மணிகளும் பெண் வீட்டு ஆண்களும் ( பங்காளிகளும் உண்டு) வேவு இறக்குவார்கள். இவ்வேவு 782*பெண்ணழைத்த வேவு எனப்படும்.
இந்த 783*ஸ்லேட்டு விளக்கை மாப்பிள்ளையின் அப்பத்தா அல்லது அத்தை கொண்டு வந்து நிலைவாசலில் வளவு நடையில் கோலமிடப்பட்ட இடத்தில் வைப்பார்கள். பெண் வீட்டிலிருந்து 784*வெள்ளி வேவுக்கடகாமைக் ( பச்சரிசி வெல்லம் தேங்காய் வைத்திருக்கும் ) கொண்டு வருவார்கள்.
ஆண்கள் 785*தலைப்பா கட்டிக் கொள்ள பெண்கள் வந்து இறக்கி இருவரும் அதைப் பிடித்தபடி சென்று சாமிவீட்டில்வைத்து வணங்கி அமர்ந்து விபூதி பூசிக் கொள்வார்கள்.
786*இந்த வேவு பதினொன்று , பதினாறு, இருபத்தி ஒன்று என்ற அளவில் இரு வீட்டிலும் இருக்கும் ஆண் பெண்களைப் பொறுத்து அமையும்.
இந்த விளக்கை 787*நடையில் வைத்துவிட்டு வேவு இறக்கி முடியும்வரை குழந்தைகளோ அல்லது வேறு யாருமோ தட்டிவிடாமல் இருக்கவேண்டுமே என்று பதக் பதக் என்று இருக்கும் :)
நான்காம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற வள்ளல் அழகப்பரின் அண்ணன் மகள் வள்ளி ஆச்சியின் வீடு.
அதே ஊரில் அவர்களின் இல்லத்துக்குச் சிறிது அருகில் பராமரிப்பு இல்லாமல் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இல்லம்.
788*தண்ணீர் வெளியேறும் கால்வாய் ( கோயில் பாணியில் இருக்கிறது. ). கார் ஷெட்டும் துருப்பிடித்திருக்கிறது. சிலர் வெளிநாடு அல்லது வெளியூரில் செட்டிலாகி இம்மாதிரிப் பங்கு இல்லங்களைப் பராமரிப்பதே இல்லை என்பது பெருஞ்சோகம்.
ஆளில்லா வீட்டில் நடையில் குப்பைகளும் 789*செத்தைகளும் கிடக்க 790*குரங்குகள் குலைத்த ஓடுகள் ஒரு பக்கம்.
வள்ளி ஆச்சி வீட்டில் வள்ளல் அழகப்பரும் நேரு மாமாவும் உரையாடும் அரிய புகைப்படம்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

சுவாரஸ்யமான நடைமுறைகள். பராமரிப்பில்லாமல் இருக்கும் அந்த வீடு ஒரு காலத்தில் எப்படி இருந்திருக்கும்! வீடும் பெருமூச்சு விடும்!
பதிலளிநீக்குதம +1
பதிலளிநீக்குஎத்தனை தகவல்கள்.......
பதிலளிநீக்குaam Sriram
பதிலளிநீக்குenakku eeno blog il Tamil Manam box kanama pochu . enna aachunnu therila. so submit panna mudila
aam Venkat sago , niraiya nadaimuraigal undu :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!