எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 15 ஜூலை, 2017

டேனிஷ் கோட்டையில் மறைவாய் சில பீரங்கிகள்.



வியாபார நிமித்தமாக வந்து இந்தியாவை ஆக்கிரமித்த கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களில் டச்சுக்காரர்கள் ப்ரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள் இந்த வரிசையில் டேனிஷ்காரர்களுக்கும் ஓரளவு பங்குண்டு.

பதினாறாம் நூற்றாண்டில் தரங்கம்பாடிக்கு வந்த அவர்கள் ( முதன்முதலில் ஈழத்து சாய்ந்தமருதுவில்தான் இறங்கி இருக்கிறார்கள் ) தஞ்சையை ஆண்ட இரகுநாத நாயக்கரிடம் ஒப்பந்தம் பெற்றனர். ஓவ் கிட் என்ற அதிகாரி மூலம் 1620 இல் கட்டப்பட்டதாம் இந்த டேனிஷ் கோட்டை.

இங்கே ஒரு விடுமுறை நாளில் சென்றபோது அங்கேயும் கோட்டைக்கு விடுமுறை தினம் எனத் தெரிந்தது. விடுவோமா நாம சுத்தி சுத்தி  கோட்டையை எடுத்திடமாட்டோமா.



இரண்டு நூற்றாண்டுகள் மட்டுமே அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த இக்கோட்டை வியாபாரச் சரிவு, அலைகளில் மீளமுடியாத கலங்கள், காலனி ஆதிக்கத்தின் அரசியல் நெளிவுசுளிவுகளில் சிக்கித்தவித்தது, மன்னரின் ஆணையாலும் ஆதரவின்மையாலும் வியாபாரத்தை நிறுத்தியது, நட்டத்தில் ஓடிய வியாபாரம் என பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் விற்க நேரிட்டது.





பொதுவா உப்புக்காற்றால் அரிக்கப்படும் கோட்டை என்பதால் அதற்கேற்பக் கட்டப்பட்டிருக்கு. சாலையில் இருக்கும் அந்தக்கால அலங்கார விளக்குகள் கூட துருவாகாமல் இருக்க வார்ப்பிரும்பில் அமைக்கப்பட்டிருக்கின்றன.  




பூந்தோட்டம் உள்ள . மாளிகை அழகாகக் காட்சி அளிக்குது



2001 இல் மறுபதிப்பு செய்யப்பட்டுக் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் கொஞ்சம் புதிது போல் இருக்கு அதன் காம்பவுண்ட் சுவர்கள்.






பதினாறாம் நூற்றாண்டின் மிகப்பெரிய கோட்டை இதுதானாம். படையினர் தங்குமிடமாக கீழ்த்தளமும், மதகுருமார்களும் ஆட்சியாளர்களும் தங்குமிடமாக மேல்தளமும் அமைக்கப்பட்டிருக்கு. ஆளுநர் இல்லம் தேவாலயம் எல்லாமே இதுக்குள்ள இருக்காம்.




மாசிலாமணிநாதர் கோயிலும் கடற்கரையை ஒட்டி  இருக்கு. அதை இன்னொரு இடுகையில் போடுவேன் J




கடற்கரையோரம் பூரா கருங்கற்கள் போடப்பட்டு அலையின் சீற்றத்தை எதிர்கொள்ளத் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கு


சுத்தி வரும்போது ஆஹா இதென்ன தலைவர் தலைக்குமேல ஒரு பீரங்கி மறைவா இருக்கே !



கோட்டையின் மதில் சாய்ந்தாற்போல் அமைக்கப்பட்டிருக்கு. மேலும் அதை சப்போர்ட் செய்யும்வண்ணம் சுவர்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.



ஆனா என்னமா அழகா கலை ரசனையோட இக்கட்டிடங்களை எல்லாம் கட்டி இருக்காங்க அவங்க.

எல்லாம் நம்மாளுங்களை வைச்சு அவங்க கட்டிடக்கலை பாணியில் கட்டி இருக்காங்க. !



அட இதென்ன அடுத்து அடுத்து பீரங்கிகள். யப்பா வியாபாரம் செய்ய வந்தீங்களா இல்ல யுத்தம் செய்ய வந்தீங்களா. 





அதே பீரங்கி க்ளோசப்புல.




கோட்டை வாயில் போக மேலேறிச் செல்ல அல்லது தப்பித்துச் செல்லத் தனிப்பட்ட படிகளும் இருக்கு போல.



எத்தனை பீரங்கி இருந்து என்ன . எவ்ளோ தைரியமா ரெண்டு ஆடுகள் டேனிஷ்காரன் கோட்டையில உக்கார்ந்து ஓய்வெடுக்குது பாருங்க.

கேட் ஹவுஸ், முகில்ட்ரூப் மாளிகை, போர்ட் மாஸ்டர் பங்களா, ரிகிலிங் மாளிகை போன்றவை அமைக்கப்பட்டிருக்கு. ஆங்கிலேயர் ஆட்சி, அதன் பின் சுதந்திர இந்திய ஆட்சி, இப்போது தொல்பொருள் துறை என மாறிவிட்டதால் இவை மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருக்கலாம்.



இவர் ஓவ் கிட்டா இல்ல வேறு யாரும் ஆட்சியாளரா/ஆங்கிலேயரான்னு தெரில. எல்லாம் ஒரே மாதிரிதானே கண்ணுக்குத் தெரியிறாங்க J




திரும்பும் வழியில் டேனிஷ் பாணிக் கட்டிடம்



தேவாலய மணின்னு நினைக்கிறேன். சரியா தெரில. காரிலிருந்து க்ளிக்கியது.



என்னமோ போங்க மிஷினரீஸ், மர்ச்செண்ட்ஸ் அப்பிடீங்கற பேர்ல பலர் நம்ம நாட்டுக்கு வந்திருக்காங்க. பல நூற்றாண்டுகளா நம்மைப் பல்வேறு ஆக்கிரமிப்புக்கும் அவதிக்கும் ஆளாக்கி இருக்காங்க. அப்புறம் இருந்த இடம் தெரியாம போயிடுறாங்க. அவங்களோட மிச்சம் எச்சம் எல்லாம் சுமந்து நமது கடற்கரைகள்தான் ரொம்பப் பாழாப் போயிருக்குங்க. நாம வேற்றுமையில் ஒற்றுமைன்னு எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு செகுலார்னு கொடி பிடிச்சிட்டு கூலா இருக்குறோம் J

3 கருத்துகள்:

  1. அழகான படங்கள் மற்றும் தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  2. THANKS VENKAT SAGO

    KATAYAM POI VAANGKA BALA SIR


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...