ஊமையன் கோட்டை
என்றொரு நாவல் வானதி பதிப்பகத்தில் வெளியாகி இருக்கிறது. இதை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்
அவர்கள்.
/// "ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார்
கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருக்கும்
ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப்
பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார்.
கதையின் நாயகனான ஊமைத்துரை இருந்தபோதும்,
வீரத்தேவன் என்ற மறவர்குல இளைஞனை
சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. இந்நாவலின்
காட்சிகள், அனைத்தும் கண்முன் நடப்பது போன்ற
தோற்றமும் வாசிப்போருக்கு ஏற்படுகிறது."///
திருமயம் கோட்டைதான்
ஊமையன் கோட்டை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கே கட்டபொம்மன் ஒளிந்திருந்த இடம்
என்று உறவினர் கூறினார். ஆனால் இது ஊமைத்துரை ஒளிந்திருந்த இடம் என்று கூகுள் சொல்கிறது.
ஆனால் இக்கோட்டை இன்று காதலிப்பவர்கள் ஒளிந்திருக்கும் இடமாக மாறி வருவது வருத்தத்துக்குரியது.
நம்ம தலைவர் மேலேறிச்
சென்று அங்கே ஒரு பாறை இடுவலில் புகுந்து அட்வென்சரஸாக வெளியே போய்விட்டார்.
நானும்
திகைத்துப் பின்வாங்கி தயங்கிப் பின் உள்ளே குனிந்து வளைந்து சென்றேன். அடடா அந்தப்பக்கம் இரும்பு கிராதிகளுடன் சின்ன கேட். அதன்முன் ஒரு யுவனும் யுவதியும் தோளில் கைபோட்டு விச்ராந்தியாக அமர்ந்திருந்தார்கள்.
அவர்களை மீறிப்
பார்க்க முடியாதால் மேலும் இருட்டாக இருந்ததால் அங்கே என்ன இருக்கு எனக்கேட்டேன். உள்ளே
தூண்கள் கொண்ட மண்டபம் இருப்பதாகச் சொன்னார்கள். இங்கேதான் ஊமைத்துரை தஞ்சமடைந்திருந்தாரோ.
பாசறை வாழ்க்கை என்கிறார்களே இதுதானோ எனத் தோன்றியது.
பாறைக்குப் பாறை
மறைவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் காதலர்கள்.
மருதமலை, கோவை ரேஸ்கோர்ஸ், மெரினா பீச் போல ஊமையன் கோட்டையும் காதலர்கள் தஞ்சம் புகுந்த இடமாக ஆகிவிட்டது.
தனித்தனியே வரும்
பதின்பருவ ஜோடி இளையர்களுக்கு டிக்கெட் வழங்கும் இடத்திலேயே செக் வைப்பது நல்லது.
காதலர்கள் தனித்திருக்க இடம்பிடித்தால் அங்குமா ....!
பதிலளிநீக்குஅடப்பாவிகளா... குடியும் குடித்தனமும்...
பதிலளிநீக்குwhat is wrong in two young adults being together in a pubic place? it seems like you went along with your husband.. so why would it bother seeing others as couple?
பதிலளிநீக்குBALA SIR AVANGKA MUGAM THERIYAMATHANEY PADAM POTIRUKEN. :)
பதிலளிநீக்குAAMAA DD SAGO
VEETUKU THERIYAMA VANTHATHUNALATHANEY OLIYIRANGKA. ENGKE VEETUKU THERINCHU VARA SOLUNGKA PARPOM. -- UNKNOWN.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அருமையான இடமாகத் தெரிகிறதே!!! படங்களும் அழகு
பதிலளிநீக்குaamam Geeths :) Thanks :)
பதிலளிநீக்கு