எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 மே, 2017

கூலம்:- மகளிர் தரிசனம்

கூலம்:-
***************

பூப்பெய்து கொண்டிருக்கிறது மழை
வண்ணச்சீரடியால் மண்ணளந்து
களைத்துக் கிடக்கிறது யௌவனம்

பற்களின் முத்துக்கள் இடையில்
காலில் தரைதட்டிக் கிடக்கின்றன

கோர்க்கவாவென ஒருவனும்
விற்கிறேனென ஒருவனும்
கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
முத்துக்கள் தேய்த்த தீப்பொறியில்
தேசங்கள் தலையிழந்த பனையாகின்றன

உமிழ்ந்துகிடக்கும் இளமையை
கருணை சுரக்காத கரங்களிடம்
ஒப்புவித்ததற்காக வருந்திக் கிடக்கிறது
வற்றுதலறியாத மாமேகம்

வியாகுலங்களை அனுகூலங்களாக்க
சீத்தலைச் சாத்தன் எழுத்தாணியால் கீற
மணிகளாய்க் கிளறி எழுகிறார்கள்
தருமபீடிகையிலிருந்து எண்ணற்ற மேகலைகள்.

டிஸ்கி:- கூலமென்றால் தான்யம்.
தான்யம் முளைவிடுவதுபோல தன்னம்பிக்கை மணிமேகலைகள் தோன்றுவது பற்றியது இக்கவிதை.

டிஸ்கி:- நன்றி மகளிர் தரிசனம். மார்ச் 2017. 

5 கருத்துகள்:

  1. கூலம் என்றால் தான்யம் என்று அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு. புதியதோர் வார்த்தையைத் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமை! கூலம்!! புதிய வார்த்தை! நன்றி சகோ/தேனு

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...