எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 8 மே, 2017

பூபாளமும் செந்தாமரையும்.

பூபாளமும் செந்தாமரையும்.

எண்பத்தியாறுகளில் வந்த சில இலக்கியச் சிற்றிதழ்கள் வைகறை, சிப்பி, புதியபார்வை, நம்வாழ்வு ஆகியன.

நாங்கள் கல்லூரியில் ஐந்து பேர் ( மீனாட்சி, கே ஆர் கே கீதா, சுபத்ரா, நான், )சேர்ந்து புரவி ( பெகாஸஸ் ) என்ற சைக்ளோஸ்டைல் இதழ் ஒன்றை வெளியிட்டோம். காலாண்டிதழ் என்று நினைவு, இதில் மீனாட்சியின் எழுத்து ஷார்ப்பாக இருக்கும். ஆனால் அவள் தற்போது எழுதுவதில்லை. .

சில நூல்கள் கையெழுத்துப் பிரதிகளாகவும் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று பூபாளம். கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாமா மனோகரன் என்பவரால் வெளியிடப்பட்ட பூபாளத்தில் நானும் ஓரிரு கவிதைகள் எழுதி உள்ளேன்.

85’ஃபிப்ரவரி கல்கியில் வெளியான கிராமத்துத் திருவிழா என்ற கவிதையை ஏப்ரல் மாதம் ( விலைக்குப் போட எடுக்கும்போது :) ) படித்து விட்டு  எனக்குக் கடிதம் எழுதி வாழ்த்துத் தெரிவித்து தனது பூபாளம் இதழுக்கு படைப்புகள் அனுப்புமாறு கூறியிருந்தார் திரு மனோகரன்.

பூபாளத்துக்குப் படைப்புகள் கேட்டு எழுதப்பட்ட கடிதம்தான் இது.


சில கவிதைக்கெனவும் ப்ரத்யேகமாக வெளியாகி இருக்கின்றன. புதுவை மாநகரிலிருந்து “ செந்தாமரை “ என்ற இதழ் கவிதைக்கெனவே வெளியாகவிருப்பதாகவும் அதற்குப் படைப்புகள் அனுப்பக் கேட்டும் வந்த கடிதம்.

கவிதைக்கென இப்போதும் ஓரிரு இதழ்களே வெளிவருகின்றன. இன்றைக்கும் தனிப்பட்ட கவிதைத் தொகுப்பு வெளியிடுவது என்பது விஷப்பரிட்சை ஆகவே இருக்கிறது.

துணிந்து அன்றைக்கும் கைக்காசைச் செலவழித்துக் கவிதை இதழ்கள் வெளியிட்ட இவர்களைப் பாராட்டத் தோன்றுகிறது.  ஆகவே இவற்றை ஆவணப்படுத்தி இருக்கிறேன். காலம் கடந்த வாழ்த்துகள் மனோகரன் & முரளீதரன்.

தொடர்ந்து வெளியிட முடியாவிட்டாலும் சிற்றிலக்கிய உலகில் உங்கள் பத்ரிக்கைகளுக்கெனவும் தனி இடம் உண்டு. முயற்சிகளுக்கும் வாய்ப்பளித்தமைக்கும் வாழ்த்துகள்.& நன்றிகள் :)


2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...