கவிதைப் பட்டறை -சில ஆளுமைகள் - சில புகைப்படங்கள்.
தமிழ்நாடு
இயல் இசை நாடக
மன்றத்தில் நடந்த கவிதைப் பட்டறை நிகழ்வில் ஃபிப் 28 , 2011 அன்று கலந்து கொண்டேன்.
ஓவியர் திரு. ட்ராட்ஸ்கி
மருது, கவிஞர் திரு. விக்கிரமாதித்யன், எழுத்தாளர் திரு. அழகிய பெரியவன், பேராசிரியை
திருமதி நிர்மலா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
உரையை சிறுகுறிப்பு எடுத்து
வைத்திருந்தேன். எங்கே எனத் தெரியாததால் படங்கள் மட்டுமே.
இயல் இசை நாடக
மன்றத்தின் செயலாளர் திரு இளைய பாரதி, அன்புத்தோழி திருமதி உமா ஷக்தி ஆகியோர் நிகழ்வை
ஒருங்கிணைத்தார்கள்.
கவிஞர் சக்தி
ஜோதி
|
அன்று எடுத்த புகைப்படங்களை
ரொம்ப தாமதமா இப்போ பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
பேராசிரியை நிர்மலா ( என்று
நினைக்கிறேன் ) கனிமொழியின் எழுத்துக்கள்
பற்றியும் தமிழச்சியின் வனப்பேச்சி பற்றியும் சுகிர்தராணி குட்டி ரேவதி ஆகியோரின்
எழுத்துக்கள் பற்றியும் சிலாகித்துச் சொன்னார். பெண்ணுடல் பற்றி பெண்கள் எழுதுவது
சரியானதுதான் என்றும். அவர்கள்தான் தங்களைப் பற்றிச் சொல்லப் பொருத்தமானவர்கள்
என்றும் சொன்னார். சீனப் பெண் கவிஞர் ஸூசு ( susu) வின் கவிதைகளுடன் ஒப்புமை
சொல்லி விவரித்தார்.
தமிழின் ஆகச்சிறந்த
ஆளுமைகளைப் பார்த்துப் பிரமித்துத்தான் போயிருந்தேன். ! இலக்கியவாதிகள், நடிகர்கள், பாடகர்கள் இவர்களின் புகைப்படங்களால் நிரம்பி இருந்தது அந்தக் கூடம்.
பெண் உடலரசியல் பற்றிய கவிதைகளை
பேராசிரியையும், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் எழுத்துகள் &
எழுச்சிக்கான கவிதைகள்பற்றி அழகிய பெரியவனும், ஓவியங்களும் கவிதைகளும் குறித்தான
பார்வை பற்றி ட்ராட்ஸ்கி மருது அவர்களும், இயற்கை போல் இயல்பாய் தெறித்துவரும்
தனது கவிதைகள் பற்றி விக்கிரமாதித்தன் அவர்களும் பகிர்ந்து கொண்டார்கள்.
மொத்தத்தில் அன்று மலர்ந்தது ஒரு அழகிய கவிதைப் பூங்கொத்து. J
பதிவிட இத்தனை நாளா?
பதிலளிநீக்குaamaa Bala sir late aayittu :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!