எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 3 அக்டோபர், 2013

7 ஆம் அறிவும், நான் அறிந்து கொண்டதும்..

Fifth element, The Sixth Sense, இதுபோல ரிதமிக்கா இருக்கு 7 ஆம் அறிவு.

முதல்ல என் அறிவுக்குப் புரிஞ்சது கொஞ்சம்..:)

1. போதிதர்மரின் இன்னொரு பெயர் தாமு

2. சீனர்களுக்கு குங்ஃபூவைக் கத்துக் கொடுத்தவர் போதி தர்மர்.

3. சர்க்கஸ்ல வேலை பார்க்கிறவங்களுக்கு எல்லாம் குங்ஃபூ தெரியும்.


4. இந்தியர்களின் பெருமையை உலகத்துக்குச் சொன்னவர் சுபா ஐ மீன் கமலோட பொண்ணு.  உலக நாயகன் வாரிசு.

5. நம்ம எல்லாரோட டி என் ஏ விலேயும் வீரம் இருக்கு.

6. ப்ளேக் மாதிரி ஆறாம் நூற்றாண்டு வியாதியை 21 ஆம் நூற்றாண்டுலயும் எழுப்ப முடியும்.

7. அதே போல ( ஜாம்பவான் திறமை மாதிரி ) மனுசங்களோட திறமையையும் வெளிக் கொணர முடியும்.

8. சாமி மாதிரி தண்ணீல ஊறவச்சா நம்ம பழைய ஜென்ம ஞாபகம் எல்லாம் முளை விடும்.

9. சினிமால நடிக்கிற எல்லாப் பொண்ணும் எவ்ளோ திறமையா இருந்தாலும் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அதில நடிக்கிற ஈரோவைக் கட்டாயம் காதலிக்கும்.

10. காதலிக்கிறவங்க எல்லாம் தான் காதலிக்கிறவங்களப் பத்திப் பேசி செல்ஃப் வீடியோ எடுத்து வைச்சிருப்பாங்க.

11. மூலிகை மருந்தைக் கண்டுபிடிச்சு மக்களைக் குணப்படுத்துவார் போதி தர்மர். டாங்க்லீயை ஒதைச்சு மக்களோட வியாதியை முறியடிப்பார்  அரவிந்த.

12. ஞானிங்கன்னா அடுத்தவங்க விஷம் வைச்சாலும் தின்னுட்டு சாகணும்.

13.  நம்ம திறமையை சீனாவுக்குக் கத்துக் கொடுத்து பின்னே  நாமளே மலிவு விலை சரக்கு மாதிரி வாங்கிக்குவோம்.

14. கண் திருஷ்டி ( நோக்கு வர்மம் ) பொல்லாதது.

15. ஜீனோம் ஆராய்ச்சிக் கூடம் மளிகைக் கடை மாதிரி ஷட்டர் போட்டு மூடி இருக்கும்.

16. கல்லூரி ஆராய்ச்சிக் கூடத்துல டி வி வித் சானல் கனெஷன்ஸ் இருக்கும்.

17. ஆராய்ச்சி பண்ற பொண்ணுங்க வீடும் ஆராய்ச்சிக் கூடம் மாதிரி இருக்கும்.

18. ஹீரோவை ஆராய்ச்சி பண்ணனும்னா முதல்ல குரங்கை ஆராய்ச்சி பண்ணனும்.

19. ஈரோவும் ஈரோயினியும் காதலிக்க ஏர்செல்காரங்கதான் பஸ் ஸ்டாப் வச்சுக் கொடுப்பாங்க.

20. முக்கியமா இன்வெஸ்டிகேட்டிங் / த்ரில்லிங் படங்களை கன்னாபின்னான்னு அசந்தர்ப்பமா காதல் பாட்டு போட்டு வீட்டுக்குப் போயிடலாமான்னு  மக்களை அப்செட் ஆக வைக்கணும். அட.. வீட்டுலதானே இருக்கோம் .. எங்கே போறதுன்னும் கொழம்ப வைக்கணும்.

------ ஹாஹாஹா ஜாலி, கிண்டல், கேலி எல்லாம் முடிஞ்சுது..

இனி ரியலா மேட்டருக்கு வரேன்.

நல்ல படம் இது . நிறைய நல்ல மெசேஜஸ். ஆனா அங்க அங்கே பாட்டு, சின்ன சின்ன எர்ரனு கடுப்பேத்துரார் மை லார்ட்.

சூர்யாவோட சிக்ஸ் பேக், சுருதியோட எனர்ஜி, சீனாவின் அழகு, எடுத்துக்கிட்ட சப்ஜெக்ட் எல்லாம் சூப்பர். மேலே சொன்ன சில விஷயங்களால முழுசா ரசிக்க முடியாம நொந்து நூடுல்ஸான பொது ஜனத்தோட கருத்து இதுவாதான் இருக்கும்.

இனி இந்த மாதிரி நல்ல விஷயங்களைச் சொல்ற படங்களில் தயவு செய்து பாட்டு ஏதும் வைச்சிடாதீங்க. இந்த அசந்தர்ப்பப் பாட்டுக்கள் தமிழ் சினிமாவின் சாபக்கேடுன்னே சொல்லலாம். படத்தோட இணைஞ்ச ஒரு பாட்டுன்னா ஓகே.. டென்ஷனா நகத்தைக் கடிக்கிற நேரத்துல பாட்டுன்னா..விரலையே கடிச்சிடுவோம்போல.

அப்போ அப்போ சுருதியும், சூர்யாவும், தமிழுக்காகவும், இந்தியர்களுக்காகவும் நம் பெருமைக்காகவும் குரல் கொடுப்பது அருமை. இதுக்காகவே என் முகநூல் நண்பர் முருகதாஸைப் பாராட்டுறேன்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 


7 ஆம் அறிவு. நிஜமாகவே நாம்  நினைத்ததைச் சாதிக்க முடியும்னு சொன்ன படம். நம் முன்னோர்களின் எண்ணங்களின், நல்லனவற்றின் கடத்தியாக நாம் இருக்கிறோம். நம்மாலும் சாதிக்கமுடியும்னு சொன்ன படம்.

8 கருத்துகள்:

  1. ஓஹோ... நேற்று தான் படம் பார்த்தீர்களா,,,?

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான விமர்சனம்....ரொம்ப லேட்டா வந்தாலும் லட்டா இனிக்குது
    நீங்கள் ஏன் புதுப் படங்களுக்கும் விமர்சனம் எழுதக்கூடாது...? நல்ல நகைச்சுவை உங்கள் பதிவில் இருக்கு....

    பதிலளிநீக்கு
  3. ஏழாம் அறிவுக்கு விமர்சனம்...
    ம்... நல்லா இருக்கு...

    பதிலளிநீக்கு
  4. நான் படம் பார்க்கவில்லை. ஆனால் விமர்சனம் Ha...Ha...Haa

    பதிலளிநீக்கு
  5. முன்று வருஷம் கழிச்சு விமர்சனம் எழுதிய நபர் நீங்கள மட்டும் தான் இருக்க முடியும்

    பதிலளிநீக்கு
  6. இவ்வளவு நகைச்சுவையுடன் நன்றாக எழுதுகிறீர்கள். இதை படமெடுத்த டைரக்டர் படித்தால் இனி சினிமா எடுப்பது சந்தேகமே!

    vote: +1

    பதிலளிநீக்கு
  7. நன்றி தனபாலன் சகோ ஆமாம்.

    நன்றி முத்தரசன். முயற்சிக்கிறேன் :)

    நன்றி குமார்

    நன்றி ஹேமா

    நன்றி வேலுமணி.. டிவில பார்த்தேன் எழுதினேன். :)

    நன்றி நம்பள்கி.


    பதிலளிநீக்கு
  8. தேனம்மை அக்கா!! இன்னொரு விஷயம்!! இதையும் உணர்ந்தால் உண்மை.. !! திடீரென்று உலகில் உள்ள எல்லா பகுதிகளில் சிலவற்றில் சிறிய ஜுரம், சளி, இருமல் இது போன்று கடுமையாக தாக்கப் பட்டு வருகிறது.. இதை நம் மக்கள் விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு ன்னு சொல்றாங்க.. ஆனா. இந்த படத்தை பார்த்த பிறகுதான் எனக்கு அச்சமே வர ஆரம்பித்திருக்கிறது... இதுவும் உள்நாட்டு மற்றும் அண்ணிய நாட்டின் சதியாக கூட இருக்கலாம் அல்லவா.. மெய்யாலுமே இருக்கலாம் அல்லாவா!!! இந்த படம் சரியாக உணர்ந்ததால்.. இதையே இன்று வரை சிந்திக்க வைக்கிறது...
    .
    எல்லாம் இறைவன் செயல்!!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...