ஒளி காட்டும் வழி.
********************
கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்து
கிட்டாதோரையும் களிப்பாக்கிச் செல்வதே
மனிதமெனும் ஒளி காட்டும் வழி.
உயிர் வாழும் நாளெல்லாம் உண்டி கொடுத்து
உயிரற்றபோது உடலுறுப்பைத் தானம் கொடுப்பதே
இன்னொருவர் வாழ்வின் ஒளி காட்டும் வழி.
நேயமிக்க உறவு மட்டுமல்ல
பிரபஞ்சம் முழுமைக்கும் அன்பு செலுத்துவதே
படைத்தவனின் பேரருள் பெறும் ஒளி காட்டும் வழி .
அன்பைக் கொடுப்பது மட்டுமல்ல
சரி விகிதத்தில் எடுத்துக் கொள்வதும்
சரிசமம் அனைவருமென எண்ணுவதுமே
சமதர்மத்தின் ஒளி காட்டும் வழி.
ஓரிரு உயிர்களுக்கு மட்டுமல்ல
உலகம் முழுதுமுள்ள உயிர்களையும்
தன்னுயிராய்க் கருதுவதே
தாய்மையெனும் ஒளிகாட்டும் வழி..
டிஸ்கி:- ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்காக எழுதியது.
********************
கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்து
கிட்டாதோரையும் களிப்பாக்கிச் செல்வதே
மனிதமெனும் ஒளி காட்டும் வழி.
உயிர் வாழும் நாளெல்லாம் உண்டி கொடுத்து
உயிரற்றபோது உடலுறுப்பைத் தானம் கொடுப்பதே
இன்னொருவர் வாழ்வின் ஒளி காட்டும் வழி.
நேயமிக்க உறவு மட்டுமல்ல
பிரபஞ்சம் முழுமைக்கும் அன்பு செலுத்துவதே
படைத்தவனின் பேரருள் பெறும் ஒளி காட்டும் வழி .
அன்பைக் கொடுப்பது மட்டுமல்ல
சரி விகிதத்தில் எடுத்துக் கொள்வதும்
சரிசமம் அனைவருமென எண்ணுவதுமே
சமதர்மத்தின் ஒளி காட்டும் வழி.
ஓரிரு உயிர்களுக்கு மட்டுமல்ல
உலகம் முழுதுமுள்ள உயிர்களையும்
தன்னுயிராய்க் கருதுவதே
தாய்மையெனும் ஒளிகாட்டும் வழி..
டிஸ்கி:- ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்காக எழுதியது.
அருமை... நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...
பதிலளிநீக்குபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ஒளிகாட்டும் வழியறிந்து எழுதிய கவிதை
பதிலளிநீக்குமனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்
வணக்கம்
பதிலளிநீக்குதங்களின் கவிதை கிடைத்து விட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்....
போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகிய கவிதை...
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமை. வெற்றி கிடைத்ததா?
பதிலளிநீக்குஅருமை. வெற்றி கிடைத்ததா?
பதிலளிநீக்குநன்றி தனபால்
பதிலளிநீக்குநன்றி ரமணி
நன்றி ரூபன்
நன்றி சௌந்தர்
சேகர் முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
யாதும் ஊரே யாவரும் கேளீர்.
பதிலளிநீக்கு