எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 26 அக்டோபர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். டெய்சி எட்வின் டாடி செல்லமா, மம்மி செல்லமா..

டெய்சி எட்வின் இவர் என் முகநூல் செல்லத் தங்கைகளில் ஒருவர். இவர் லண்டன் வானொலியில் ANCHOR AND RJ.  இவரது காதலா காதலா என்ற தலைப்பில் வரும் கவிதைகளும் குறும்பு கொப்பளிக்கும் ஸ்டேடஸ்களும் சோ ஸ்வீட். இவரிடம் நம்ம வலைப்பதிவின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. 

டெய்சி நீங்க அப்பா செல்லமா.. அம்மா செல்லமா. 


இது நான் பள்ளியில் படிக்கும் பொழுது நடந்த சம்பவம் அந்த சமயத்தில் மற்ற எல்லோரையும் போல காதல் என்றால் ஒரு பரவசம் நான் காதலிக்கா விட்டாலும், உதவி என்று கேட்டால் உயிரையும் கொடுப்பாள் டெய்சி என்று தம்பட்டம் அடித்துகொண்டு எனது senior - ஒரு பெண்ணை காதலித்தான் . நான் அவனுக்கு சப்போர்ட் செய்யும் பொருட்டு அந்த பெண்ணின் வீட்டை கடந்து போகும் போது எல்லாம் அவள் வெளியே இருந்தால் அண்ணி - என்று கூப்பிடுவது வழக்கம். அந்த பெண்ணும் சிரித்து கொள்வாள். இவர்கள் காதல் இருவர் வீட்டுக்கும் தெரியாது. 

இப்படி ஒரு நாள் நான் அண்ணி என்று கூப்பிட்டுவிட்டு சைக்கிளில் சென்று விட்டேன் அருகே அவள் அக்கா இருந்ததை பார்க்கவில்லை வீட்டிற்கு சென்று மதிய சாப்பாடு சாப்பிட்டிவிட்டு உறங்கி விட்டேன். 

மாலை 4மணி போல் இருவரும் என் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் புகார் செய்து கொண்டிருந்தனர்.!!

 சத்தம் கேட்டு சூழ்நிலையை புரிந்து கொண்டு உறங்குவது போல் நடித்து கொண்டிருதேன்.!!

அவர்கள் சென்ற பின் என் தந்தை என்னிடம் வந்து “ எந்திரி மகள்... அவர்கள் போய் விட்டார்கள்” என்றார்.

 பிறகு தான் தெரியும் அந்த பெண்ணின் அக்கா என் தந்தையின் மாணவி என்பது .என் அம்மா சரி திட்டு திட்டினார்கள் . 

நான் அப்பாவிடம் .... எனக்கு எப்படி தெரியும் அவங்க அக்கா உங்க  student ன்னு -பரிதாபமாக கேட்க அப்பா ,அம்மா. எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

அப்பா சொன்னங்க ”குறும்பு செய். ஆனால் அப்பாவிடம் உன்னை குறைசொல்லுமாறு குறும்பு செய்யாதே என்றார். ”

நான் அப்பாவின் செல்லமோ செல்லம்..  i love my dad :) :) :) 

--- நன்றி டெய்சி.. காதலுக்கு தூது போய் மம்மிகிட்ட திட்டு வாங்கினது எல்லாரும் செய்றதுதான். பட் டாடி சூப்பர். எல்லார் டாடியும் அப்படித்தான். :) தந்தைகள் வாழ்க. :) :) :)


7 கருத்துகள்:

  1. பெண் குழந்தைகளுக்கு என்றுமே டாடி சூப்பர் தான்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா... எல்லார் வீட்டிலும் மகள்கள் அப்பா செல்லங்கள் தான்... என் வீட்டிலும்...

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபால் சகோ. ஆம்

    நன்றி ஸ்கூல் பையன்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. பெண் குழந்தைகள் எப்பவும் அப்பா செல்லம்தான்...

    பதிலளிநீக்கு
  6. எனக்கு எப்படி தெரியும் அவங்க அக்கா உங்க student ன்னு -பரிதாபமாக கேட்க அப்பா ,அம்மா. எல்லோரும் சிரித்து விட்டார்கள்//// டைசி உங்கள் சேவை எங்களுக்கு தேவை :)

    பதிலளிநீக்கு
  7. ஆம் குமார் :)

    நன்றி ஸ்வாமிநாதன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...