”இதழில் எழுதிய கவிதைகள் ” அப்பிடின்னு தில்லா புத்தகம் போட்டவர் நம்ம வலை உலக சகோ சதீஷ் சங்கவி. ( மனைவி விமலா ரொம்ப ரொம்ப நல்லவங்க .. ) சங்கவிகிட்ட உங்க முதல் காதல் எதுன்னு கேள்வி கேட்டு பதில் வாங்கிப் போட்டுருக்கேன். என்ன அக்குறும்புன்னா புள்ளயோட அப்பிராணி மாதிரி போஸ் கொடுத்துட்டு இருக்கிற சங்கவி ஒரு புள்ளய சுத்திச் சுத்திக் காதலிச்சுருக்காரு. இப்ப இல்ல.. அட அது சின்ன வயசுலப்பா..
உங்க முதல் காதல் எது..?
பதில்:
இதற்கு பெயர் தான் சொந்த செலவில் சூன்யம் வெச்சிக்கிறது.. உன் முதல் காதல் எது என்றால் அப்படியே ப்ளாஷ் பேக் ரிங்காரமிடும்... பட் இப்ப கல்யணம் ஆகி புள்ளை குட்டியோட இருக்கும் போது இதற்கு பதில் அளிக்கும் போது குடும்பம் குத்தாட்டம் போடாமல் பதில் சொல்லனும்.. கேள்வியை கேட்டது தேனக்கா என்பதால் உண்மைய பொட்டுன்னு போட்டு உடைச்சிடணும்...
அப்பவெல்லாம் தினமும் பள்ளிக்கு நடந்து செல்கையிலே அவளைப்பார்ப்பதும், பின் பள்ளிக்குள் அவள் எதிரே நடப்பது. அவள் பார்ப்பது போல் நடப்பது, அவள் பெயருக்கு ஏற்றவாறு நிற உடைகளை அணிவது, அவளைச்சுற்றி சுற்றி சுற்றி வீதிக்குள் ஓடுவது என எப்போதும் அவள் நெனப்புத்தான். இத்தனை சுத்தியும் அவள் திரும்பி பார்த்ததாளா என்றால் நிச்சயம் இல்லை.
அவளை இம்ப்ரஸ் செய்வதற்காக நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல ஆனாலும் அவள் என்னை திரும்பி பார்க்கவில்லை. ”கரைப்பார் கரைச்சா கல்லும் கரைரையும்” என்று கேள்விப்பட்டதால் தினமும் கரைக்க முயலுவேன்..
இப்படி இருக்கையில் ஒரு நாள் சைக்கிள் ஓட்டி பழகியவள் என் முன்னே விழுந்துவிட்டாள். ஓடி போய் தூக்கி விடலாம் என்று யோசிப்பதற்குள் அவுங்க சித்தப்பா தூக்கிவிட்டுட்டார்.
இப்படியே போன எப்படி காதலை சொல்வது என்று நண்பர்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி அவளுக்கு பிடிச்ச கலரான மஞ்சள் கலர் துணி அணிந்து கொண்டு எப்படி காதலை சொல்லாம் என்று யோசித்து,” எனக்கு உங்கள பிடிச்சிருக்கு, உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா, நான் உங்களை காதலிக்கிறேன்..” என ஒரு வரியை தயார் செய்து கொண்டு ஒரு மாதமாக சொல்ல முடியாமல் தவித்தேன். கடைசியில் பந்தயம் கட்டி காதலை சொல்ல போனேன்.
“ ஏனுங்க உங்ககிட்ட பேசனும்.” என்றேன்..
”என்ன பேசனும்..? நான் போட்டு இருக்கற இந்த துணி எங்க வாங்கியதுன்னு தெரியனுமா..? வரும் போது நிறைய பேர் கேட்டாங்க அந்த சந்தேகம் தான உனக்கு..” என்றதும், நான் தயாரித்த ஒற்றை வரி மறந்தது.” இல்லங்க., அடுத்து எங்க படிக்கபோறீங்க..”ன்னு கேட்டேன் என சமாளித்து கொஞ்ச தூரம் பேசி வந்ததில் அப்படியே ஓடிப்போய் ஆத்துக்குள்ள குதிக்கனும்., சந்தோசத்தை வெளிப்படுத்தனும் என இருந்து..
அன்று முதல் தினமும் காலை எப்படியும் அவளுடன் ஒரு முறையாவது பேசி விடுவேன். காதலை பின்பு சொல்லலாம் என்று தள்ளிப்போட்டேன்.. அப்படியே நாட்கள் நகர நகர முழுப்பரிட்சையும் வந்தது, பரிட்சை எழுதி முடிந்ததும் இன்று காதலை சொல்லிவிடவேண்டும் என்று முடிவு கட்டினேன்..
பரிட்சை முடிந்ததும் அன்று ஆசிரியர் கூப்பிட்டார்.” எல்லாரும் நல்லா படிச்சீங்க, நல்ல ஒழுக்கத்துடன் இருந்தீங்க இனி மேல படிக்கும் போதும் நம்ம பள்ளிக்கூடத்து பேரை காப்பாத்ததணும். இனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படிச்ச நீங்க ஆறாம் வகுப்புக்கு உயர்நிலைப்பள்ளிக்கு பக்கத்து ஊருக்கு போறீங்க நல்லா படிக்கனும்” என்று வழி அனுப்பினார்....
அதற்கப்புறம் என்னை விடுதியில் படிக்க தள்ளிட்டாங்க.. சோ முதல் காதல் மனதிலேயே ஓடுச்சு ரொம்ப நாள்.. எப்படியும் சொல்லிவிடவேண்டும் என்று பல வருடம் கழிச்சு கிடைச்ச சந்தர்ப்பத்தில் சொல்ல முயன்று சொன்னேன்.. சிரிச்சா பாருங்க ஒரு சிரிப்பு... இன்னும் மனதில் ஒடுகிறது... ( நான் சொன்னது அவ கல்யாணத்துக்கு அப்புறம். அதனால் தான் சிரிப்பு மழை)... இப்ப 3 குழந்தைகளுக்கு அம்மாவாக சந்தோமாக குடும்பம் நடத்துகிறாள்...
---- ////கேள்வியை கேட்டது தேனக்கா என்பதால் உண்மைய பொட்டுன்னு போட்டு உடைச்சிடனும்...//// என்னது... அஞ்சாம் க்ளாஸ்லேயே காதலா.. சின்ன வயசிலேன்னா இம்புட்டுச் சின்ன வயசிலேவா.. ஹாஹாஹா.. நல்லவேளை தம்பி இப்பியாச்சும் சொன்னியே.. அவ தொண்டு கிழவியாகி பேரன் பேத்தியோட வரும்போது சொல்லாம.. இப்பிடிப் பல காதல் கதைகள் சொல்லப்படாமலே மனுஷங்க மனசுல சினிமாவா ஓடிட்டு இருக்கு.
நன்றி தம்பி உங்க முதல் காதலை உண்மையா பகிர்ந்துகிட்டதுக்கு. இதுல என்ன ஜாலி இருக்குன்னு கேக்கிறீங்களா மக்காஸ். இந்த வீக் எண்ட் இத விமலா பார்த்தாங்கன்னா அப்புறம் ஒரே ஜாலிதான் நமக்கு.. அவங்ககிட்ட கோர்த்துவிட்டா நல்லா பொழுது போவுமுல்ல.. :)

அவர் என்ன செய்வார்...? மறக்க முடியவில்லை... மறைக்காமல் உண்மையை பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள் சங்'கவி' அவர்களுக்கு...
பதிலளிநீக்குகோர்த்துவிட்டாலும் சமாளிப்பார்...!
சுவாரஸ்யமான கேள்வி
பதிலளிநீக்குஅருமையான பதில்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ஐந்தாம் வகுப்புலயேவா அது சரி... அதுதான் இதழில் எழுதிய கவிதையெல்லாம் எழுத வச்சிச்சு போல... கோர்த்துவிட்டாச்சுல்ல... இனி திருமதி சதீஷ் பார்த்துப்பாங்க...
பதிலளிநீக்குபள்ளிக் காதலாக இருந்தாலும் மறைக்காமல், இது காதலே அல்ல இனக்கவர்ச்சி என்று ஒதுக்காமல் வெளிப்படையாகத் தெரிவத்தமைக்குப் பாராட்டுக்கள் சங்கவி....
பதிலளிநீக்குமறக்காத பள்ளி காதல்......
பதிலளிநீக்குநன்றி தனபால் சகோ
பதிலளிநீக்குநன்றி ரமணி சார்
நன்றி குமார் :)
நன்றி ஸ்கூல் பையன்
நன்றி வெங்கட் நாகராஜ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!