எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

நான் சிவகாமி....!!!

நான் சிவகாமி.. ஆம் .. மாமல்லனின் காதலி.. விரிந்த தோள்களும் பரந்த மார்புமாய் மல்லர்களை ஜெயித்த நரசிம்ம வர்ம பல்லவன்தான்.. காத்திருக்கிறேன் அவனுக்காய்.. ஆம்பலும் குவளையும் கொட்டிக் கிடக்கும் வாவியில் அவன் காலடித்தடங்களை வருடியபடி..

எனக்காய் எத்தனை வீரத்தழும்புகள் அவன் மார்பில்..தேடி வந்தானே என்னைத்தேடி..சாளுக்கியரை அழித்து., நாகமான நாகநந்தியை நசுக்கி..

என் தந்தை ஆயனச்சிற்பியுடன்..மகேந்திரரின் அநுக்கிரகத்தில்... எங்கள் கலை சார்ந்த வாழ்வு .. நான் நடனமாட..என் தந்தை என் எல்லா அபிநயங்களையும் சிலைகளாக செதுக்கி.. எத்தனை பாவங்கள்.. எத்தனை சிலைகள்..
சிலைகளோடு சிலைகளான உயிரோட்டமான வாழ்வு..அத்யந்தத் தோழன் நரசிம்மன் வருகை.. என் எல்லா உணர்வுகளையும் ., நயனபாஷைகளையும் முழுக்க அறிந்தவன் அவன்.. உளியின் ஓசையும் சிலம்பின் சிணுங்கல்களுமாய்.. சித்திரமான வாழ்வு..

நலம்விரும்பி போல வந்தான் நாகநந்தி.. என்னை .,என் தந்தையை ஏமாற்ற.. கலை விரும்பியாய்.. கடத்தியே சென்றான்.. நரம்பு வெடித்து இரும்படித்துக் கிடந்த அவன் கரங்கள் இப்போதும் கூட அச்சமூட்டுவதாய் .. அஜந்தாவின் ஓவியங்களில் ., கலவைகளில் பரிச்சயம் அவனுக்கு.. புத்த பிக்குவாய் மட்டுமில்லாமல் பித்துவாயும்.. குகைக்குள்ளே வாழ்ந்து குறுகியவனாய்.,
வர்ணக் கலவைகளுடன் வாழ்ந்துவந்த அவன் எண்ணம் கருப்பாய்....
பூநாகமாய்.. ஓநாயை ஒத்த முகம்..

வாழ்வென்பது ஒரு நெறி சிலருக்கு... நாட்டியப் பெண்கள் மனதின் ராணிகளாகலாம்.. மஹாராணிகளாக முடியாது.. இது புரியும் போது நான் சிறைப்பட்டு இருந்தேன்.. நரசிம்மன் என்னைக் காப்பாற்ற மதுரைப் படை வேண்டி மணமாகி இருந்தான்..

அவன் வருவான் .. படையெடுத்து மீட்டுச் செல்வான் என்று சூளுரைத்தேன்..தினம் வரும் சூரியனைப் போல அவன் வரவை எதிர்பார்த்து..காதலும் ., காந்தலும்., காந்தமுமாய் அவன் வந்தான்.. என்னால் தாங்க முடியாத நெருப்பாய்.. தடுப்பாய்..மணமான நிலையில்..

விடுபட்டுவிட்டேன்.. விடுபடாத மனநிலையோடு.. காலடி எடுத்து வைத்தேன் மீண்டும் நான் விட்டுச் சென்ற பாதையில் ..அன்னையைப் போன்ற ஆயனரும்., உள்மனம் போன்ற நரசிம்மனும் இல்லாத வாழ்வில்.. பாகலும். பாம்பின் விஷமும் கூட கசப்பு இல்லை நமக்கானவர் இல்லாத வாழ்வில்..

சபதம் மட்டுமே என் வாழ்வு.. சாதித்தது என்ன.. ??

அன்பு கொண்ட நரசிம்மனின் மனச்சிம்மாசனத்தில் நான் .. நான் மட்டுமே என்ற அகந்தையோடு..

சிலசமயம் ஆற்றாமையால் வாழ்வு பிடிக்கவில்லை எனக்கு..

உண்மைக் காதலென்பது உடல் சார்ந்ததல்ல... மனம் சார்ந்தது.. அதுவே போதும்..என்ற நிறைவு..

அம்புலியின் பால் கிரணங்களில்.. ஆவலோடு வந்து பாரிஜாதங்களையும் ., பவள மல்லிகளையும்.. ஒதுக்கி என் காலடித் தடம் வருடுகிறானே.. நான் இல்லாத வாழ்வில்.. எங்கள் சிரிப்பலைகள் போல மென்மையாய் விரிந்து கொண்டே இருக்கிறது வாவி.. என் சிலம்பும் ., அவன் சிரிப்புமாய்..இருக்கிறது கண்ணுக்குத் தெரியாத சில்வண்டின் சத்தங்கள்..

டிஸ்கி..:- என்னை கனவே கலையாதே என்று ஒரு தொடர் பதிவு எழுத அழைத்து இருந்தார் நாய்க்குட்டி மனசு.. மன்னராட்சியில்., மன்னராகவோ., ராணியாகவோ., ப்ரஜையாகவோ நினைத்துக் கொண்டு எழுத வேண்டும் என்பது விதி.. இதை யார் வேண்டுமானலும் தொடரலாம்.. நல்லா இருக்கா சொல்லுங்க மக்காஸ்..:))

27 கருத்துகள்:

  1. உண்மைக் காதலென்பது உடல் சார்ந்ததல்ல... மனம் சார்ந்தது.. அதுவே போதும்..என்ற நிறைவு..]]


    எக்காலத்துக்கும் ...

    பதிலளிநீக்கு
  2. // நான் இல்லாத வாழ்வில்.. எங்கள் சிரிப்பலைகள் போல மென்மையாய் விரிந்து கொண்டே இருக்குறது வாவி.. என் சிலம்பும் ., அவன் சிரிப்புமாய்..இருக்கிறது கண்ணுக்குத் தெரியாத சில்வண்டின் சத்தங்கள்...//

    தொடர்பதிவா அக்கா...

    மடை திறந்த வெள்ளம் போல் கவிதை...
    ரொம்ப நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  3. அசத்தல்...... சரளமாக எழுதி இருக்கீங்க....

    பதிலளிநீக்கு
  4. வாவியில் காலடித்தடம்! பொருட் பிழையில்லையா?

    பதிலளிநீக்கு
  5. //உண்மைக் காதலென்பது உடல் சார்ந்ததல்ல... மனம் சார்ந்தது.. அதுவே போதும்..என்ற நிறைவு..//

    தத்துவம் முப்பத்தி மூணாயிரத்து முப்பது

    பதிலளிநீக்கு
  6. அன்பு கொண்ட நரசிம்மனின் மனசிம்மாசனத்தில் நான் .. நான் மட்டுமே என்ற அகந்தையோடு..//


    possessiveness ஐ அழகாக வெளிப்படுத்தும் வரிகள்
    நன்றி தேனம்மை, ஒரு சரித்திரக் கதை எழுதலாமே?

    பதிலளிநீக்கு
  7. ’..அன்னையைப் போன்ற ஆயனரும்..’
    என்ன ஒரு அற்புதமான வரிகள். சிவகாமிக்க்கு அன்னை இழந்த வலி தெரியாமல் அவளிஅ வள்ர்த்த ‘தாயுமானவரல்லவா ஆயனர்?’

    பதிலளிநீக்கு
  8. நான் சிவகாமி...
    அழகான கற்பனை.

    பதிலளிநீக்கு
  9. வித்யாசமான புராண நினைவுகளுடன் பிரம்மிக்க வைக்கிறது...வாழ்த்துகள் தேனக்கா...

    பதிலளிநீக்கு
  10. ”நான் சிவகாமி” என்ற அபாரமான கற்பனையுடன் , புலிப்பாய்ச்சலாய் வரிகள்..அபாரத் திறமையுடன், படைப்பூக்கத்தின் உச்சியில் இருந்து செயல் பட்டுக் கொண்டு இருப்பதாக எனக்குப் படுகிறது..தொடரட்டும் தங்கள் படைப்பாக்கம்..வாழ்த்துக்கள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  11. ////பாகலும். பாம்பின் விஷமும் கூட கசப்பு இல்லை நமக்கானவர் இல்லாத வாழ்வில்..///

    வழிமொழிகிறேன்..அருமை தேனம்மை

    பதிலளிநீக்கு
  12. தேனக்கா...உண்மையிலேயே சிவகாமி நீங்கதானோ..!

    பதிலளிநீக்கு
  13. ரொம்பவே அருமையாயிருக்கு

    பதிலளிநீக்கு
  14. அட அட தேனக்கா இப்பிடி அசத்துறீங்களே..!!



    இண்ட்லி சட்னியாகிடுச்சு ஓட்டு போட முடியல

    பதிலளிநீக்கு
  15. மிக அழகு. அந்தக் கதையும் படித்துள்ளேன். அதற்க்கு மாறாக எழுதாமல் அருமையாக எழுதி உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  16. ஆஹா!சிவகாமி மீண்டும் வந்தாளே. மீண்டும் கண்ணில் நீர்.
    அவதிப்படும் பெண்களின் மொத்த வடிவம் அவள். எல்லோருடைய வாழ்க்கையிலும் சிவகாமியின் தடம் இருக்கும். அவளைத் தவிக்க விட்ட கல்கியின் மேல் எனக்குக் கோபம் கூட உண்டு.:( ஆனால் சீதையும் தான் பூமிக்குள் போனாள். :( Fantastic dream.

    பதிலளிநீக்கு
  17. அசத்தல், உங்களுக்குள் ஒரு சாண்டில்யை (சாண்டில்யனின் பெண்பால்) இருப்பது இவ்வளவு நாட்களாக தெரிய வில்லையே.

    பதிலளிநீக்கு
  18. அக்கா.. சூப்பர்.. சொன்ன அனைத்தும் கண் முன் விரிவது போல், வரிசையாய் வரிகள்..
    அருமை அருமை... கலக்கிட்டீங்க... ;-)))

    பதிலளிநீக்கு
  19. நல்ல கனவு கலையாமல் தொடர்பதிவு எழுது உள்ளிர்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  20. அருமை அக்கா.

    கனவுகளை காட்சிகளாக விரியச் செய்து அசத்தியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  21. கனவு கலையாமல் அழகா எழுதியிரிகிங்க ..ரொம்ப நல்லா இருக்கு மேடம்

    பதிலளிநீக்கு
  22. நன்றி ஜமால்., குமார்., நேசன்.,சித்து., அறிவன்..( ஆவிக்கு ஏது வாவி எல்லாம் .. தண்ணீரில் கூட தேடலாம் அல்லவா ) நசர்..( இது ரொம்ப ஓவரு..:)))) ., ராஜ்.,(முயற்சிக்கிறேன்) .,ஆம் ராமமூர்த்தி..,அம்பிகா., கலாநேசன்., கனி.,வெற்றி., ஹேமா., மஹி.,ஜெய்., பாலா சார்., கார்த்திக்.,வல்லி சிம்ஹன்., ராம்ஜி.,ஆனந்தி., செந்தில் குமார்., அக்பர்.., விக்னேஷ்வரி., சந்தியா..

    பதிலளிநீக்கு
  23. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.
    என்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...