எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தமிழாய் தமிழுக்காய்..


கூழுக்காய்., பாலுக்காய்.,
வேலைக்காய்., வெட்டிக்காய்.,
அலையாய் அலைந்ததில்லை.,
தமிழாய் தமிழுக்காய்..
ஆங்கிலமா ..அரபியா
அனைத்துக் கலப்பிலும்
அணையாமல் காத்துவிடு
தமிழாய் தமிழுக்காய்..
ஊற்றுமொழி தேற்றுமொழி
ஊனுயிரோடு யாத்தமொழி
எழுத்தாணி கோத்தமொழி
தமிழாய் தமிழுக்காய்..
ஆதிகுடிகளின் அரிச்சுவடி.,
ஒலைச்சுவடிகளில் பொறித்தபடி
நீதிநெறிகளில் நின்றபடி
தமிழாய் தமிழுக்காய்..
வாலைக்குமரியாய் வளப்பமடி
வாழும்தாயாய் நெருக்கமடி
வந்தாரையெல்லாம் வாழவைத்தபடி
தமிழாய் தமிழுக்காய்..
எது(கை)கொண்டு சேர்த்தாலும்
எத்திக்கும் இணைந்தபடி
என்னே கனிவு.. கம்பீரம்,, காந்தம்..
தமிழாய் தமிழுக்காய்..
என் செய்தாயெனக் கேட்காமல்
என்றுமான பாசத்தால்
எங்கேயும் எப்போதும் எல்லாமும்
தமிழாய் தமிழுக்காய்..
உலகைக் கண்விரியப் பார்த்து.,
கை கோர்த்தலைந்து.,
மெய்விதிர்த்ததிர்ந்து.,
வலைப்பூவில் வாழுகிறோமே
தமிழாய் தமிழுக்காய்..
டிஸ்கி:- இது நண்பர் மணிவண்ணனை ஆசிரியராகக் கொண்டு கொங்கிலிருந்து வெளியாகும் புதிய “ழ” வில் இந்த மாதம் வெளியாகியுள்ளது..

20 கருத்துகள்:

  1. கே.ஆர்.பி.செந்தில் to me
    show details 12:37 AM (15 minutes ago)


    கே.ஆர்.பி.செந்தில் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"தமிழாய் தமிழுக்காய்":

    பாராட்டும் வாழ்த்தும்... தமிழுக்கும், உங்களுக்கும்

    பதிலளிநீக்கு
  2. புதிய ழ' கவிதை சிற்றிதழும் 'தகிதா' பதிப்பகமும் இணைந்து நடத்தும் கவிதைப்போட்டி தலைப்பு :'தமிழாய் தமிழுக்காய் ' வரிகள் : 16

    அப்போட்டிக்கு யான் யாத்தளித்த வெண்பா



    தமிழாய் தமிழுக்காய் தாழா துழைத்து
    அமிழ்தாய் பொழியு மழகு வழியில்
    மொழியாம் தமிழை முழுதாய் மொழிந்து
    பிழையின்றி வாழப் பழகு.


    சூழவரும் சூழ்ச்சிகள் சூழா தமிழாய்
    வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்
    வழிகள் பிறழாது வாழ்வாய் தமிழாய்
    இழியும் பழியும் இழுக்கு.


    ஒழுக்கம் தழுவி அழுக்குக் கழுவி
    விழுப்புண் விழைந்திட வாழ்வாய் தமிழுக்காய்
    வாழும் தமிழென வாழ்த்தும் வழியும்
    சூழும் புகழ்ச்சி சுழலும்.


    மொழியை அழித்தல்; முழியை மழித்தல்
    விழியை இழந்தால் வழியை ஒழிந்தாய்
    மொழியைப் பழித்தல்; மழையை இழந்து
    உழவு ஒழிந்த கழனி.



    'கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)
    அபு தபி (இருப்பிடம்)
    .

    பதிலளிநீக்கு
  3. Kavidhai miga arumai.
    Mobilil irundhu ulavugiren. Tamilil eludhida iyalavillai. Adhanaldhan tamilukkai angila eluthil pinnoottam.

    பதிலளிநீக்கு
  4. ழ - வில் சிறப்பான கவிதைப் பங்களிப்பை தந்த தேனம்மைக்கு வாழ்த்து. அதை பிரத்யேகமான தங்கள் இணையத்தில் வெளியிட்ட உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான பகிர்வு நன்றி தேனக்கா...

    பதிலளிநீக்கு
  6. தமிழாய் தமிழுக்காய்....
    கவிதை மிக வும் நல்லாயிருக்குங்க..... பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. கவிதை அருமை தேனக்கா.. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. ரசித்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. தமிழாய் தமிழுக்காய்

    தேனாய் தேனக்காவிடமிருந்து

    வாழ்த்துக்கள் அக்கா

    வாழ்த்துக்கள் மணிவண்ணன்

    வெண்பா அருமை கலாம் சார், வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  10. வலைப்பூவில் வாழுகிறோமே
    தமிழாய் தமிழுக்காய்..


    ...... :-)

    வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  11. அருமையான கவிதை தொகுப்பு...........................உங்களை போன்ற தமிழாய் தமிழுக்காய் தமிழாராய் வாழ்பவர்கள் உள்ளவரை தமிழ் செழித்து வாழும்

    பதிலளிநீக்கு
  12. //எது(கை)கொண்டு சேர்த்தாலும்
    எத்திக்கும் இணைந்தபடி//

    எது கைகொண்டு சேர்த்தாலும்
    எதுகை கொண்டு சேர்த்தாலும்
    எத்திக்கும் இணைந்துகொள்ளும் தமிழ்!!

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள்

    //
    எங்கேயும் எப்போதும் எல்லாமும்
    தமிழாய் தமிழுக்காய்..
    //

    மிக ரசித்த வரிகள்

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துகள்!

    [[ஊற்றுமொழி தேற்றுமொழி
    ஊனுயிரோடு யாத்தமொழி
    எழுத்தாணி கோத்தமொழி]]

    அழகு

    பதிலளிநீக்கு
  15. அருமை அக்கா நன்றாக உள்ளது உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. எங்கெங்கும் தமிழ் மணம் பரப்பும் தேனக்காவிற்கு வந்தனங்கள்!!!

    பதிலளிநீக்கு
  17. நன்றி செந்தில்.,கலாம்., ரமேஷ்.,மணி., கனி., கருணா., ஸ்டார்ஜன்., கலாநேசன்., விஜய்., சித்து., தஞ்சைமைந்தன்., ஹுஸைனம்மா., வேலு ., ஜமால்., சசி., நியோ

    பதிலளிநீக்கு
  18. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  19. Kindly go through the following links for the history of letter 'zha' and a linguistics article:
    http://lingeswaran-ise.blogspot.com/2010/08/blog-post_22.html

    http://lingeswaran-ise.blogspot.com/2010/08/blog-post_19.html

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...