அவரவரே நிரம்பிய
அட்சய பாத்திரமாயிருக்க..
அடுத்தவரிடம்
பிட்சைப் பாத்திரம் ஏந்தி..
குத்திய முள் எல்லாம்
பிடுங்கிப் போட்ட பின்னும்
தொடர்ந்து வந்து
கொண்டு வலி மட்டும்...
பரமபதப் பாம்புகளால்
ஏறுதலும் இறங்குதலுமான
வாழ்வில் எது குறிக்கோள்..?
எய்தது என்ன..?
ஏதோ ஒரு உடல் மினுங்க
பட்டுப்புழுவாய் இலை விழுங்கி
கூடு செய்து
கூண்டோடு கொடுத்து...
செக்கைச் சுற்றும் மாடாய்
அச்சைச் சுற்றும் பூமியாய்
வீட்டைச் சுற்றும் மனைவியாய்..
வேலையோடு போராடும்
என் பின்னால் உன் பார்வை
துளைத்து துளைத்து
ராஜ பிளவை..
போகப் பொருளுக்கென்ன..
அன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்..
டிஸ்கி :- இது சென்ற வார 21 . 8 . 2010 இளமை விகடனில் வெளி வந்துள்ளது ..
அட்சய பாத்திரமாயிருக்க..
அடுத்தவரிடம்
பிட்சைப் பாத்திரம் ஏந்தி..
குத்திய முள் எல்லாம்
பிடுங்கிப் போட்ட பின்னும்
தொடர்ந்து வந்து
கொண்டு வலி மட்டும்...
பரமபதப் பாம்புகளால்
ஏறுதலும் இறங்குதலுமான
வாழ்வில் எது குறிக்கோள்..?
எய்தது என்ன..?
ஏதோ ஒரு உடல் மினுங்க
பட்டுப்புழுவாய் இலை விழுங்கி
கூடு செய்து
கூண்டோடு கொடுத்து...
செக்கைச் சுற்றும் மாடாய்
அச்சைச் சுற்றும் பூமியாய்
வீட்டைச் சுற்றும் மனைவியாய்..
வேலையோடு போராடும்
என் பின்னால் உன் பார்வை
துளைத்து துளைத்து
ராஜ பிளவை..
போகப் பொருளுக்கென்ன..
அன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்..
டிஸ்கி :- இது சென்ற வார 21 . 8 . 2010 இளமை விகடனில் வெளி வந்துள்ளது ..
வாழ்த்துக்கள் அக்கா.
பதிலளிநீக்குகுமுறும் உள்ளத்தின் வெளிப்பாடு. விகடனில் வாசித்து விட்டிருந்தேன்.
பதிலளிநீக்கு//பரமபதப் பாம்புகளால்
ஏறுதலும் இறங்குதலுமான
வாழ்வில் எது குறிக்கோள்..?//
சிந்திக்க வைக்கும் இக்கேள்வி எல்லோருக்கும் பொருந்தும். அருமை.
போகப் பொருளுக்கென்ன..
பதிலளிநீக்குஅன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்..]]
பின்றிங்க போங்க ...
////போகப் பொருளுக்கென்ன..
பதிலளிநீக்குஅன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்////
அசத்தல் தேனம்மை..எப்படி இதெல்லாம்.. தமிழாய் தமிழுக்காய் என்று தங்களின் கவிதை ‘ழ” இதழில் பார்த்தேன்.. நீங்கள் தான் தமிழாய்..தமிழுக்காய் இருப்பது போல் தெரிகிறது.. மற்றுமொரு நல்ல கவிதை
போகப் பொருளுக்கென்ன..
பதிலளிநீக்குஅன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்..
//
நல்லாயிருக்கு ..
வாழ்த்துக்கள், அக்கா!
பதிலளிநீக்குநல்ல கவிதை தேனம்மை.
பதிலளிநீக்குஇளமை விகடனில் படித்தேன் வாழ்த்துக்கள்!
விகடனின் படித்தேன். வாழ்த்துகள் தேனம்மை.
பதிலளிநீக்கு// வேலையோடு போராடும்
பதிலளிநீக்குஎன் பின்னால் உன் பார்வை
துளைத்து துளைத்து
ராஜ பிளவை..
போகப் பொருளுக்கென்ன..
அன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்..//
பட்டென அறுபடுகிறது ஆண்மை! மக்கா, நல்லாருக்கு.
போகமும்,மோகமும்
பதிலளிநீக்குபோதுமென்றாலே,
யோகமும்,ஞானமும்,
வந்து சேருமே!!
அன்பன்,
ஆர்.ஆர்.ஆர்.
வாழ்த்துக்கள் தேனம்மை
பதிலளிநீக்குவிகடனில் படித்தேன் உடன்
பதிவேற்றிருக்கலாமே
very nice,congrats akka!!
பதிலளிநீக்குvery nice, thanks for sharing
பதிலளிநீக்குநல்லாருக்குப்பா!
பதிலளிநீக்குதேனக்கா அருமை.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//போகப் பொருளுக்கென்ன..
பதிலளிநீக்குஅன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்..//
பின்றீங்க தேனம்மை :-))
இளமை விகடனில் வாசித்திருந்தேன்.நல்லதொரு கவிதை...எப்பவும்போல தேனக்கா.
பதிலளிநீக்குவேதனையுடன் முடியும் கவிதை.
பதிலளிநீக்குநல்லாயிருக்கு அக்கா.
சூப்பர் கவிதை
பதிலளிநீக்குஅருமையான கவிதை... வாழ்த்துகள் தேனக்கா..
பதிலளிநீக்குசெக்கைச் சுற்றும் மாடாய்
பதிலளிநீக்குஅச்சைச் சுற்றும் பூமியாய்
வீட்டைச் சுற்றும் மனைவியாய்..
நல்ல வரிகள்.
இங்கும் அங்கும் அலையும் மனதின் குமுறல் நல்ல முறையில் வெளியிட்டு இருக்கிறீர்கள். மிகவும் பிடித்த வரிகள் ''பார்வையால் உண்ட ராஜ பிளவை.''
பதிலளிநீக்குஅருமை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Standing Ovation to the Last three lines.
பதிலளிநீக்குஅருமையான கவிதை.வாழ்த்துகள்
பதிலளிநீக்குராமலக்ஷ்மி சொன்னது…
பதிலளிநீக்குகுமுறும் உள்ளத்தின் வெளிப்பாடு. விகடனில் வாசித்து விட்டிருந்தேன்.
//பரமபதப் பாம்புகளால்
ஏறுதலும் இறங்குதலுமான
வாழ்வில் எது குறிக்கோள்..?//
சிந்திக்க வைக்கும் இக்கேள்வி எல்லோருக்கும் பொருந்தும். அருமை.
repeattttttt
அருமை அக்கா
பதிலளிநீக்கு//குத்திய முள் எல்லாம்
பதிலளிநீக்குபிடுங்கிப் போட்ட பின்னும்
தொடர்ந்து வந்து
கொண்டு வலி மட்டும்...//
அக்கா என்ன சொல்வது என்று தெரியவில்லை....
கவிதை அருமை...
விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
கடைசி 2 பேராவும்.... பா.ரா. சொன்னதும் தான் என் கருத்தும் :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனக்கா... :)
பதிலளிநீக்குஅருமையா இருக்கு..
அருமையா இருக்கு..
பதிலளிநீக்குவிகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அக்கா....
பதிலளிநீக்குநன்றி சை கொ ப., ராமலெக்ஷ்மி., ஜமால்., வெற்றீ., வெறும்பய., சித்ரா., கோமதி அரசு.,ஜோதிஜி., பாரா., ஆர் ஆர் ஆர் ., சக்தி ., மேனகா., ராம்ஜி., அருணா, ஆசியா., அமைதிச்சாரல்., ஹேமா., அக்பர்., ஜெய்லானி., ஸ்டார்ஜன்., இளம் தூயவன்.,வல்லி சிம்ஹன்., ஜெரி., டி வி ஆர்., கணேஷ்., சசி., குமார்., அஷோக்., ஆனந்தி., கமலேஷ்., செந்தில்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!