எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

கண்கட்டு

நட்டுத் தண்ணீர் ஊற்றி
நாம் வளர்த்த சிறுவிதை
கட்டுக்குள் இருப்பதாய்
சட்டாம்பிள்ளைத்தனம்..

எங்குசென்று நீருரியும்.,
யாரிடம் பூத்தூவும்.,
எவருக்குக் கனி கொடுக்கும் என
அறிந்திராமல் உடன்..


பக்கத்து வீட்டுக்காரனோ
கரண்டுக்காரனோ வெட்டி
எறியும்போதுதான் தெரிகிறது.,

வேரோடிப் போயிருப்பதும்.,
புரையோடிப் போயிருப்பதும்.,
கிளை மீறிப் போயிருப்பதும்...

28 கருத்துகள்:

  1. ஆம் நாம் நட்டு வைத்த விதை என்ற அதீத நம்பிகைதான் ..எதிலும் அதீத நம்பிக்கை ஏமாற்றம் தான்..

    பதிலளிநீக்கு
  2. வேரோடிப் போயிருப்பதும்.,
    புரையோடிப் போயிருப்பதும்.,
    கிளை மீறிப் போயிருப்பதும்...//
    கவிதைக்கு ஆணிவேராய் கடைசி மூன்று வரிகள்.
    நல்லாயிருக்குங்க.

    பதிலளிநீக்கு
  3. \\வேரோடிப் போயிருப்பதும்.,
    புரையோடிப் போயிருப்பதும்.,
    கிளை மீறிப் போயிருப்பதும்...\\
    நிஜம்தான்.
    நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  4. கவிதை நல்லாயிருக்கு

    வேரோடிப் போயிருப்பதும்.,
    புரையோடிப் போயிருப்பதும்.,
    கிளை மீறிப் போயிருப்பதும்.

    பதிலளிநீக்கு
  5. இப்படி ஒரு நல்ல கவிதை வாசித்து பலநாளாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. எப்படி முடிக்கப் போகிறீர்கள் என்று ஆர்வமாய் படித்தேன்..
    கிளை மீறிப் போயிருப்பதும்...
    ஆஹா..
    கண்கட்டு இல்லை.. மனக் கட்டு.. நிகழ்ந்தது கவிதையில்.

    பதிலளிநீக்கு
  7. //நட்டுத் தண்ணீர் ஊற்றி
    நாம் வளர்த்த சிறுவிதை
    கட்டுக்குள் இருப்பதாய்
    சட்டாம்பிள்ளைத்தனம்..///

    நல்லா இருக்கு அக்கா.. :-)

    பதிலளிநீக்கு
  8. பக்கத்து வீட்டுக்காரனோ
    கரண்டுக்காரனோ வெட்டி
    எறியும்போதுதான் தெரிகிறது.,

    வேரோடிப் போயிருப்பதும்.,
    புரையோடிப் போயிருப்பதும்.,
    கிளை மீறிப் போயிருப்பதும்...


    ......அக்கா, இந்த வரிகளில் எத்தனை அர்த்தங்கள்..... பின்னிட்டீங்க! மிகவும் ரசித்து வாசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. வேர்களில் விஷம் எற்றிப்போன வீணர்களை என்ன செய்ய முடியும்???
    சிந்திக்க...வாழ்த்துகள் தேனக்கா...

    பதிலளிநீக்கு
  10. செடிகளை மட்டும் சொல்லவில்லை.
    நம் குடும்பத்து உறவுகளையும் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. நல்லா இருக்கு அக்கா!
    //எங்குசென்று நீருரியும்.,
    யாரிடம் பூத்தூவும்.,
    எவருக்குக் கனி கொடுக்கும் //
    ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  12. ||வேரோடிப் போயிருப்பதும்.,
    புரையோடிப் போயிருப்பதும்.,
    கிளை மீறிப் போயிருப்பதும்||

    செடி மட்டுமா

    வாழ்க்கையும் தானே

    பதிலளிநீக்கு
  13. உண்மைதான் அக்கா. நிறைய விஷயங்கள்ல நம்பி இருந்துடுறோம். அடுத்தவங்க சொல்லும்போதுதான் தெரியுது!!

    பதிலளிநீக்கு
  14. அக்கா சூப்பர் நல்லாயிருக்கு

    பதிலளிநீக்கு
  15. தேனக்கா,

    அர்த்தங்கள் பொதிந்த இறுதி வரிகள்...!

    பதிலளிநீக்கு
  16. //பக்கத்து வீட்டுக்காரனோ
    கரண்டுக்காரனோ வெட்டி
    எறியும்போதுதான் தெரிகிறது.,

    வேரோடிப் போயிருப்பதும்.,
    புரையோடிப் போயிருப்பதும்.,
    கிளை மீறிப் போயிருப்பதும்...//

    அருமையான வரிகள் அக்கா.
    நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  17. //நட்டுத் தண்ணீர் ஊற்றி
    நாம் வளர்த்த சிறுவிதை
    கட்டுக்குள் இருப்பதாய்
    சட்டாம்பிள்ளைத்தனம்////

    ஆரம்பமே அசத்தல்!

    கடைசி வரிகள் அதைவிடவும்! பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  18. அருமையான வரியமைப்பு நன்று தேனம்மை

    பதிலளிநீக்கு
  19. //எங்குசென்று நீருரியும்.,
    யாரிடம் பூத்தூவும்.,
    எவருக்குக் கனி கொடுக்கும் என
    அறிந்திராமல் உடன்..
    //

    உண்மையான வரிகள்

    நாம் நட்டவைதான் எனினும் எங்கு சென்று என்ன செய்யுமென்று புரியாமலே வளர்க்கிறோம்

    அருமை

    பதிலளிநீக்கு
  20. /வேரோடிப் போயிருப்பதும்.,
    புரையோடிப் போயிருப்பதும்.,
    கிளை மீறிப் போயிருப்பதும்./
    இதுக்குத் தனிப் பூங்கொத்து!

    பதிலளிநீக்கு
  21. நன்றி வெற்றி ., தூயவன்., கருணா., ராம்ஜி.,அம்பிகா., ராகவன்., ஜெரி., ரிஷபன்., ஆனந்தி., சித்ரா., முனியப்பன் சார்., கனி., கலா நேசன்., கணேஷ்., பாலாஜி.,கதிர் ., ஹுசைனம்மா., சசி., சத்ரியன்., கிருஷ்ண மூர்த்தி ., குமார்., ஷைலஜா., சக்தி., வேலு.,அருணா

    பதிலளிநீக்கு
  22. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

    பதிலளிநீக்கு
  23. ரொம்பவே கவர்ந்த கருத்துகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...