எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

ஒரு வெறுத்தலின் முடிவில்..

பட்டியலிட்டுப் பார்க்கிறேன்
உன் அலட்சியத்தை.,
அகங்காரத்தை ., ஆணவத்தை.,
எள்ளலை ., கோபத்தை..
தேவையோ .,தேவையற்றோ.,
பூதக் கண்ணாடி கொண்டு விரித்து..
வெறுப்பதற்கான எல்லைகளை
வரையறுத்துக் கொள்கிறேன்..
நீ கீறியது ஒரு முறை..
நான் கிளறிக் கொண்டது பலமுறை..

யட்சிணியாய் நான் இருக்க
இராட்சசனாய் நீயும்
விழுங்கிய பின்னும்
மீதம் இருக்கிறோம்
விழுங்கப் படுவதற்காய்..
நீ விட்டுச் சென்ற சரங்கள்
பாதியிலேயே தொங்கிக் கொண்டிருக்க
நான் சூட்டும் மாலைகளையும்
நீ ஏற்காமல் ..
எங்கிருந்தோ வந்து
இரை தேடிக் கூடடையும்
பருவகாலப் பறவையாய்...
பறந்து சென்ற பின்னும்
மிச்சமிருக்கிறது உன் புன்னகையும்
சில பகிர்வுகளும்..
எல்லா சாத்தியக் கூறுகளையும்
கூறாக்கி விடாமல்..

26 கருத்துகள்:

  1. இன்னுமொரு அற்புத கவிதை..அருமை தேனம்மை..

    பதிலளிநீக்கு
  2. இன்னுமொரு அற்புத கவிதை..அருமை தேனம்மை..

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு அக்கா......வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதைக்கா..

    ரொம்ப பிடிச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  5. மீண்டும் விழுங்கப்படுவதற்காய் காத்திருக்கும் கவிதை அழகு சூப்பர் தேனக்கா...வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  6. ஒரு வெறுத்தலின் முடிவில்..

    மிச்சமிருக்கிறது உன் புன்னகையும்
    சில பகிர்வுகளும்..

    அக்கா, அதுமட்டுமே நினைவாய் போன வடுக்களாய் ...
    வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

    அருமை அக்கா.

    பதிலளிநீக்கு
  7. நன்றிகள், அருமை.

    ஒரு நாலு நிமிட சினிமா பாட்டிற்கு பொருத்தமான கவிதை.
    எந்த சினிமா பாட்டு மெட்டிற்கு (tune) இந்த கவிதை செட் ஆகும் என யோசித்து கொண்டு இருக்கிறேன்.

    போறாளே பொண்ணு தாயி டூயட் சாங் tune க்கு செட் ஆகும் போல

    பதிலளிநீக்கு
  8. வெறுத்துப் போய் எழுதிய கவிதையா?..

    பதிலளிநீக்கு
  9. பிரிவின் வலியை மிகவும் அழகாக உணர்த்துகின்றன கவிதையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் . அருமை . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. நீ கீறியது ஒரு முறை..
    நான் கிளறிக் கொண்டது பலமுறை..

    உண்மையில் நம் வாழ்வின் பல வேதனைகளுக்கு அஸ்திவாரமே இந்த வரிகள் சுட்டும் அர்த்தம்தான்.. என்ன அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  11. நிதர்சன வரிகள்......எனக்குள் ஏதோ உறுத்துகிறது......

    அன்புடன்
    ஆரூரன்

    பதிலளிநீக்கு
  12. //நீ கீறியது ஒரு முறை..
    நான் கிளறிக் கொண்டது பலமுறை...//

    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  13. மிக அருமையான வரிகள். உணர்வுக்குவியலாய்...

    சுதந்திர தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. //மிச்சமிருக்கிறது உன் புன்னகையும்
    சில பகிர்வுகளும்.. //
    சில நினைவுகளை மீட்டிச் செல்கிறது இவ்வரிகள்..
    நல்ல கவிதை அக்கா..

    பதிலளிநீக்கு
  15. நன்றி நேசன்., கண்ணன்., வெற்றி., குரு., கமலேஷ்., டி வி ஆர்., அம்பிகா., கனி., கலாநேசன்., கணேஷ்., ராம்ஜி., செந்தில்.,மோஹன்., சசி., ராமலெக்ஷ்மி., சங்கர்., ரிஷபன்., விஸ்வநாதன்., குமார்.,அக்பர்., பாலாஜி., கிருஷ்ணமூர்த்தி

    பதிலளிநீக்கு
  16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  17. வலிகளை சுமந்த கவிதை அக்கா
    எனக்குள் லேசான நெருடல்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...