”கம்பன் வீட்டுக் கட்டுத்தறி கவிபாடும்” என்றால் கம்பனை சிறுவயது முதல் நேசிக்கும் ஒருவரின் வாக்குமூலம் கேளுங்கள் .,”கம்பர் விழாவுக்குப் போவதற்காக புத்தகத்தை எடைக்குப் போட்டுவிட்டு என். சி. சி .காம்ப் போவதாக சொல்லிவிட்டு கம்பர் விழா பார்க்க வந்ததாக சொன்னவர் வேறு யாரும் அல்லர் .. தமிழ் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே தேடிப் போக வேண்டும் என்ற உந்துதல் பள்ளிப் பருவத்திலே ஏற்பட்டுவிட்டதால் .....இங்கும் (அதாவது கம்பர் விழாவிலும்.). இப்போதும் இருப்பதாக சொன்னவர் ...தமிழை இன்றும் நேசித்துக் கொண்டிருக்கும்., நமது தினமணியின் ஆசிரியர் ..திரு வைத்யநாதன் அவர்கள் ..
தேர்ந்த வார்த்தைகளால் அன்று அவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பாக அமைந்து இருந்தது ..ஊடும் பாவுமாய் வார்த்தைகள் வந்து நெசவுக் கோர்வையாய் செம்மையாய் இருந்தது
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கி வைத்து கலந்து கொள்வது பிறவிப்பயன் என்றும் கம்பன் அளித்த வரம் என்றும் கூறினார்.
கம்பனுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த கம்பன் அடிப்பொடி., தோழர் ஜீவா., தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான்., நீதியரசர்கள்
மு.மு. இஸ்மாயில்., மகராசன்.,பேராசிரியர்கள் ஏ.சி பால்ராஜ் நாடார்.,எஸ். ராமகிருஷ்ணன் ., எழுத்தாளர்களான கி.வா.ஜ., அ. ஸ்ரீநிவாச ராகவன் .,கண்ணதாசன் அனைவரின் சேவையையும் பாராட்டினார்.
தினமணி தொடங்கிய 5 வது ஆண்டில் கம்பன் விழா தொடங்கியது..தினமணியின் பவளவிழா ஆண்டுமலரில் முதல் ஆண்டுவிழா பற்றிய செய்தி இடம் பெற்றதாம்.. எல்லா தினமணி ஆசிரியர்களும் ஏ. எல் சிவராமன் உட்பட கலந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மதுரையில் தீண்டாமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த வைத்தியநாத ஐயரின் சிலை பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என்ற செய்தி தினமணியில் வந்தவுடன் முதல்வர் அதை சரிப்படுத்த உடன் நடவடிக்கை எடுத்ததாகக் கூறிய அவர் செம்மொழி மாநாட்டிலும் கம்பனுக்கு நாம் எதிர்பாராத இடம் தரப்படும் ..முதல்வர் மூலம் என நம்புவதாகக் கூறினார் ..
இராம காதையில் 700 திருக்குறளுக்கு மேல் இருப்பதாகவும் திவ்யப் பிரபந்தமும் இருப்பதாகக் கூறினார்..கவியரசரின் கருத்தே தமது கருத்தும் என்றார்.புதுச்சேரி கம்பன் விழாவில் ”கம்பனின்
கவிதையன்றி கன்னித்தமிழில் வாழ்த்துமில்லை” கம்பன் சீதைக்குத் தமிழ்நாட்டில் சேலை கட்டிவிட்டான் “என்று கவியரசர் புகன்றது பகி்ர்ந்தார்,
காந்தத்தால் கவரப்பட்டவர்களைப் போல இருந்ததாகவும் “கம்ப ராமாயணம் சமய இலக்கியம் மட்டுமல்ல.. சமரச சன்மார்க்க
சிந்தனை இருக்கிறது கம்பனுக்கு” என்றும் “பல்பெரும் சமயத்துள் கடலில் கலக்கிறதே”என்று எல்லா சமயத்திலும் இழுத்து அடைத்து விடுகிறான். என்றும் ஒழுக்க சீலனின் கதை இது என்றும் கூறினார். காட்சிக்குக் காட்சி காமிராக்கள் கொண்டு பார்க்கின்றான் கம்பன்... திருமணக்காட்சியில் ”நம்பியைக் காண ஆயிரம் நயனம் வேண்டும்” என்று கவிதை., காப்பியம்., மட்டுமல்ல நாடகமாகவே பார்க்க வைக்கிறது என்றார்..
நெல்லையில் ஜஸ்டிஸ் சிவராசனும் இவர் தந்தையும் பேசி அளவளாவும் ’முதல் நாள் போர்’ பற்றி சிலாகித்தார்.. ரசிகமணி டி கே சி யும் “சாம்புகிறான்” என்ற பதத்தை ( கத்திரிக்காய் சுடுவது போல அது ) சிலாகித்துக் கூறியதைக் கூறினார்.
சத்ருக்னனைன் பாத்திரப் படைப்புப் பற்றிப் பேசும் போது அவனுக்கு அதிகமாக இடம் இல்லை என்றும்., ஒரு 3 அல்லது 4 இடங்களில் மட்டும் தான் வருவதாகவும் குறிப்பிட்டார்..எதிரிகளை அழித்தான் அவ்வளவுதான்...
மற்றோரிடத்தில் இலக்குவனும் சத்ருக்னனும் சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள், கடைசியில் பேசும் பேச்சுத்தான் அவனை மிக உயர்ந்த இடத்துக்குக் கொண்டு வைக்க கம்பன் செய்தது எனக் கூறினார். பரதன் சத்ருக்னனிடம் “இதோ பார் சத்ருக்னா நான் சிதை மூட்டிக் கொள்வேன், நீ அயோத்தி ராசாவாக முடி சூட்டிக் கொள்க “எனும் போது கொந்தளித்து எழுவான் பாருங்கள் சத்ருக்னன்,
”காணாத நிலமகளைக் கைவிட்டுப் போன
ராமனைக் காத்து போனவர்கள் வரும் நேரம்
போய்விட்டது என்பதால்” ஒருவன் காட்டுக்குப் போனான் . நீ சிதை ஏறிவிடு.. நான் இழிந்தவன் எனவே அயோத்தி ராசாவாக வேண்டுமா? உனக்கு அடிமையாக உன்னைப் பின் தொடர்ந்தேனல்
லவா..?” என்பான் அப்பா.. அப்பப்பா.. கம்பனுக்கு நிகர் கம்பனேதான் ..!!
”உவமைகள்., கவிநயம்., கதாபாத்திரங்களை உருவாக்கி புதிய பரிணாமங்களுக்குள் நிலை நிறுத்துவது இதெல்லாம் கம்பனுக்கே உரியது” என்றார் கம்பனில் கரைந்து ..
தினமணியில் கட்டுரை எழுதிய சேதுபதியின் நூல் வெளியானதை வாழ்த்தி .,”என் வாழ்நாளில் நானும் இந்த விழாவில் கலந்து கொண்டது எண்ணி வாழ்நாளில் மகிழ்வேன் .. சிற்றெறும்பு வெல்லக்கட்டியை உண்டு மகிழ்வது போல” என்றார். வரும் வருடங்களிலும் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தி தன்னுரையை நிறைவு செய்தார்..
கம்பன் வாழ்க..!
கம்பன் புகழ் வாழ்க..!!
கன்னித் தமிழ் வாழ்க.,,!!!

மிக்க நன்றி தேனம்மை!. அவர் பேசியது ஒரு புறம் இருக்க, அதை ரத்'தின மணி' சுருக்கமாய் கட்டுரை வரைந்த உங்களுக்கு ஒரு தனி பாராட்டுதல்கள்!!
பதிலளிநீக்குகம்பன் விழாவில் திரு.வைத்தியநாதன் பேசியதை சுருக்கமாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள். நான்காண்டுகள் தினமணியில் பணியாற்றிய அனுபவத்தில் எங்கள் ஆசிரியருடன் ஓராண்டுகள் பழகும் வாய்ப்பு இருந்தது. நல்ல திறமைசாலி, நல்ல பேச்சாளர்.
பதிலளிநீக்குகம்பன் விழாவை சுவைபட சொல்லியமைக்கு நன்றி.
//ஊடும் பாவுமாய் வார்த்தைகள் வந்து நெசவுக் கோர்வையாய் செம்மையாய் இருந்தது//
பதிலளிநீக்குஅழகு வர்ணனை தேனக்கா...
அருமையான பகிர்வுக்கு நன்றி...வாழ்க வளர்க....
கம்பன் சீதைக்குத் தமிழ்நாட்டில் சேலை கட்டிவிட்டான் “என்று கவியரசர் புகன்றது பகி்ர்ந்தார்//
பதிலளிநீக்குஇதை விளக்கி எழுத முடியுமா?
ஊடும் பாவுமாய் நெசவுக் கோவை...வார்த்தைகளை நெய்திருக்கிரீர்கள்..
கம்பன் எல்லா கதாப்பாத்திரங்களையுமே ரொம்ப கண்ணியத்துடன் கையாண்டிருப்பார் எழுத்தில். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவர்ணனைக்கு நன்றி அக்கா.
பதிலளிநீக்குமிக நல்ல பகிர்வு தேனம்மை. அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குகம்பனுக்கு பின்னும் பாரதிக்கு பின்னும் கவி என்று யாருமே இல்லை
பதிலளிநீக்குசிற்றெறும்பு வெல்லக்கட்டியை உண்டு மகிழ்வது போல” //
பதிலளிநீக்குஉங்கள் பதிவு வாசிக்கும் பொது அப்படித்தான் இருந்தது.
”என் வாழ்நாளில் நானும் இந்த விழாவில் கலந்து கொண்டது எண்ணி வாழ்நாளில் மகிழ்வேன் .. சிற்றெறும்பு வெல்லக்கட்டியை உண்டு மகிழ்வது போல” என்றார்.
பதிலளிநீக்குஇந்த பதிவை படித்ததன் மூலம்- எனக்கும் அதே மகிழ்ச்சி.
அருமையாக தொகுத்து தந்திருப்பதிலேயே, நீங்கள் எவ்வளவு ரசித்து இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.தெரியாத செய்திகளை அறியத்தந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குநல்ல பதிவு,உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅழகான பகிர்வு அக்கா!!
பதிலளிநீக்குநல்லபகிர்வு அக்கா. நன்றி.தமிழை நேசிக்கும் உங்களுக்கு அந்த தமிழ் புகழ் சேர்க்கும்.
பதிலளிநீக்குNice info thenammai.Tamil is still living bcz of the festivals of Kamban & people who keep Tamil alive.
பதிலளிநீக்குநன்றி V உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும்
பதிலளிநீக்குஅப்படியா குமார் அவரை சந்தித்தேன் ஆனால் மறுநாள் செய்தியை அனுமதிக்க வேண்டிய அவசரத்தில் இருந்தார் ..எனவே கிளம்ப வேண்டியதாகி விட்டது
பதிலளிநீக்குநன்றி சீமான்கனி உங்க வாழ்த்துக்கும் வரவுக்கும்
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் ...பாண்டிச்சேரியில் நடந்த ஒரு கம்பன் விழாவில் கவியரசர் இப்படி சொன்னதாக தினமணி ஆசிரியர் வைத்யநாதன் சொன்னார்
பதிலளிநீக்குநன்றீ மயில் ராவணன் உங்க கருத்துக்கும் வரவுக்கும்
பதிலளிநீக்குநன்றி சை கொ ப உங்க வாழ்த்துக்கு
பதிலளிநீக்குநன்றீ ராமலெக்ஷ்மி உங்க கருத்துக்கு
பதிலளிநீக்குஎரியும் மௌனம் அருமை பத்மா
பதிலளிநீக்குநன்றி ராஜ் உங்க கருத்துக்கு
பதிலளிநீக்குநன்றி ரமேஷ் உங்க கரி நாக்கு இடுகை அருமை
பதிலளிநீக்குசித்ரா செல் கிடைச்சுதா பிள்ள
பதிலளிநீக்குஸாதிகா தோஹா மியூசியம் அருமை
பதிலளிநீக்குநன்றீ சசி உங்க அவார்டுக்கும் அன்புக்கும் நன்றி
பதிலளிநீக்குநன்றீ சசிகா கேபேஜ் சாலட் அருமை
பதிலளிநீக்குநன்றி அக்பர் நல்லா கதை சொல்றீங்க
பதிலளிநீக்குநன்றி முனியப்பன் சார் லட்சன் கதை சோகம்
பதிலளிநீக்குவலைப் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்
பதிலளிநீக்கு