எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 மார்ச், 2010

நதி மூலம் ரிஷி மூலம்

"பார்... நீ எவ்வளவு மோசமான ஆசாமியின்
எழுத்துக்களில் நம்பிக்கை வைத்து இருக்
கிறாய் பார். அந்த பிம்பத்தை உடைக்கிறேன்
பார்.... ஒரு நடிகை என்பவள் எந்த சமயத்திலும்
எல்லார் பார்வைக்கும் விருந்தானவள்.. அவளை
இப்படியெல்லாம் காட்டலாம்.. ஈனப்பிறவி...."
என்று எந்த விஷயத்தைப் போட்டாலும் நாலு
நாள் ஆனாலும் கூடத்தில் அமர்ந்து அதை
ரீவைண்ட் பண்ணிப் பண்ணிப் பார்த்து எதற்
காகவோ சந்தோஷப்பட்டு மகிழ ஆட்கள்
இருக்கிறது .. என்னுடைய டி ஆர் பி ரேட்டிங்
ஏற என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
என்ற ஊடகம் .. எல்லாவற்றிலும் ஒரு பொறுப்
பற்ற தன்மை.. இதை மார்பிங்க் என்று சொல்ல
ஒரு கூட்டம். அடுத்த பிரச்சனை ஆரம்பம்..



எழுத்துக்கள் மூலமே அறிந்து .."உங்கள் மகிழ்ச்சி
உங்களுக்குள்ளே இருக்கிறது.. அதை யாரும்
அழிக்க முடியாது".. என்ற வரிகளைப் படித்து
முடிந்தால் ஒரு முறை பிடதி செல்ல வேண்டும்
என நினைத்தது உண்டு ...கானலை உண்மை
என நம்பியது என் பிழை..அனுபவங்கள் கற்றுக்
கொடுத்துக் கொண்டிருக்கின்றன..

இன்றும் வயதுவந்த இருவர் என்ன வேண்டு
மானாலும் செய்யலாம்.. ஆனால் எல்லா
மதங்களாலும் புனிதமாக மதிக்கப்படும் காவியோ
வெள்ளுடையோ உடுத்தி அல்ல..

குழந்தைகளுக்கு சிலவற்றை போதிக்கிறோம்..அந்த
ஒழுக்கம் சார்ந்த எண்ணங்களை விதைக்கும்போது
அதை வலியுறுத்த ஒரு பிம்பம் தேவைப் படுகிறது..
விவேகானந்தரைப் பார் .. வள்ளலாரைப் பார் என்
கிறோம்.. அப்படி ஒருவரை நாம் சுட்டும்போது
அதில் அசிங்கம் இருந்தால் யாரை முன்மாதிரியாகக்
கொள்வது.. திருவோடு வைத்திருப்பதாலேயே பத்திர
கிரியாரை பட்டினத்தார் பணக்காரர் என்றாராம்..

.இன்று தங்க சிம்மாசனம்., ரதம் என்று ஹைடெக்
ஆஸ்ரமங்கள்.. ஓவ்வொரு தரிசனத்துக்கும் பல்லா
யிரங்கள் பணம் கட்டிப் பார்க்கிறார்கள்.. எங்கே
இருந்து வருகிறது இவ்வளவு பணம் ..

யாரையோ நம்பி அல்ல உன்னையே நம்பு ..
உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என
இனி மாற்றிக்கொள்ளலாம் என இருக்கிறேன்
நல்ல புத்திக் கொள் முதல்

37 கருத்துகள்:

  1. நதியின் மூலமும்., முடிவும் அசுத்தங்களிலே.. இங்கு நதியே அசுத்தமாயிருப்பது வேதனையே.. :(
    நன்று அக்கா..

    பதிலளிநீக்கு
  2. //உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என
    இனி மாற்றிக்கொள்ளலாம் என இருக்கிறேன்
    நல்ல புத்திக் கொள் முதல்//


    இதை மட்டும் நாம் கடைபிடித்தால், போலிகள் தானாகவே அடங்கும்.
    நல்ல முடிவு அக்கா.

    பதிலளிநீக்கு
  3. என்னங்க எப்படிங்க உங்களால இது போல எழுத முடியுது ஒண்ணுமே புரியலங்க, நானும் ஒரு கவிதை பதிவை போடலாம்னு நினைத்து யோசித்து யோசித்து பார்த்தால் கவிதை வரமாட்டேங்குது தூக்கம் தான் வருது உண்மையை சொல்லப்போனால் (யாரிடமும் சொல்லாதீங்க நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு பொண்ணுக்கு கொடுத்த கடிதமே என் நண்பன் தான் எழுதி கொடுத்தான்)

    பதிலளிநீக்கு
  4. "உங்கள் மகிழ்ச்சி
    உங்களுக்குள்ளே இருக்கிறது.. அதை யாரும்
    அழிக்க முடியாது"

    அருமையான கருத்து. நல்ல இடுகை

    பதிலளிநீக்கு
  5. புரியலை .. ஏன் இந்த இடுகை?

    பதிலளிநீக்கு
  6. அவர்களிடம் போனால் தீர்வு கிடைக்கும் என்று நம்பி போகிறவர்கள் இன்று ஆடிப் போயிருக்கிறார்கள். இறைவனுக்கும் நமக்கும் இடையே இடைத்தரகர்கள் அவசியமில்லை என்பது புரிந்தால் ஆன்மீகம் கேலிக் கூத்தாகாது.. நமது மீடியாக்களையும் சொல்ல வேண்டும்.. எந்த உச்சத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு போய் விடுகிறார்கள்.. எதையும்..

    பதிலளிநீக்கு
  7. யாரையோ நம்பி அல்ல உன்னையே நம்பு ..
    உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் //

    சரியா சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  8. புரிந்து விட்டது.. பிடதி செல்லும் அளவுக்கு நம்பினீர்களா? ஓக்கே.. :)

    பதிலளிநீக்கு
  9. ஒற்றை வரி ஓலையில் பார்த்து,பற்றுத்துறந்த பட்டினத்தாரை நினைத்தால் நமது சம்சாரம் கூட உறுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  10. ஒரு விதத்துல அஹம் ப்ரம்மாஸ்மி புரிய வைக்கிறாங்க:)

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் உருவாக்கிய தாக்கம் மறைவதற்கு இன்னும் வெகு நாளாகும். இது போன்றுதொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  12. //உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்//

    அது தான் உண்மை. நல்லது அக்கா.

    பதிலளிநீக்கு
  13. //அவர்களிடம் போனால் தீர்வு கிடைக்கும் என்று நம்பி போகிறவர்கள் இன்று ஆடிப் போயிருக்கிறார்கள். இறைவனுக்கும் நமக்கும் இடையே இடைத்தரகர்கள் அவசியமில்லை என்பது புரிந்தால் ஆன்மீகம் கேலிக் கூத்தாகாது.. நமது மீடியாக்களையும் சொல்ல வேண்டும்.. எந்த உச்சத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு போய் விடுகிறார்கள்.. எதையும்..//

    சரியாகச் சொன்னீர்கள் ரிஷபன்.. நன்றி..

    "உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என
    இனி மாற்றிக்கொள்ளலாம் என இருக்கிறேன்
    நல்ல புத்திக் கொள் முதல்"

    நல்லது அக்கா.. கவிதை அருமை..

    பதிலளிநீக்கு
  14. உங்க வலைத்தளம் load-ஆக, late-ஆகுது அக்கா.. தேவை இல்லாத widget-களை எடுத்தால் நன்றாக இருக்கும்..

    பதிலளிநீக்கு
  15. OLD AGE IS NOT THE PASSPORT FOR BAD MANNERS என்பார்கள்.அது போல் காவி உடையையை ஒரு SHIELD ஆக உபயோகப் படுத்தி இருக்கலாம்! இப்பொதெல்லாம் இது போன்ற NEWS அடிக்கடி பார்க்கிறோம். யார் குற்றம் இது?
    காவி உடையை உபயோகப் படுத்துபவர் மேல் குற்றமா? அவர் மேல் விழுந்து அவரது POPULARITY ஐ ஒரு நொடியில் கண்ணாடி சிதறல்கள் போல் சிதறி சுக்கல்களாக வீழ்த்தியவர் மேல் குற்றமா?
    கடவளுக்கும், நமக்கும் நடுவே ஒரு MEDIATOR/இடைத் தரகராக இவர்களை மாற்றி, தமது அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொண்ட பாமரன் மீது குற்றமா ? விழுந்தவனை பளிச்சென்று வெளிச்ச்ம் போட்டு காட்டி, VIEWERS ன் அத்தனை ஆழ் மனத்து வக்ர உணர்ச்சிகளையும் தூண்டி இழுக்கும் MEDIA க்கள் மீது குற்றமா ? இந்த கண்றாவியை மீண்டும்,மீண்டும் பார்க்கும் பாமரன் மேல் குற்றமா?
    யார் குற்றம் இது ?
    இந்த மாதிரி சமுதாயச் சீரழிவிற்குக் காரணம் யார்?
    நாம் ஒவ்வொருவரும் தான்!!

    பதிலளிநீக்கு
  16. வாழ்க்கை என்பது இதுதான். புரிதல்.. புரிந்த மாதிரி இன்று இருப்பத்து, நாளை மாறுகின்றது. ஓடுகின்ற நீரில் இருக்கும் மரக்கட்டை மாதிரி ஆகிவிட வேண்டும் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  17. உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என
    இனி மாற்றிக்கொள்ளலாம் என இருக்கிறேன்


    தவறு உங்களுடையது தானே.

    பதிலளிநீக்கு
  18. சில பெண்கள் பிரபலமானவர்கள் நெருங்கிய நட்பு கிடைத்தால் அதைப் பெருமையாக எண்ணி அதல பாதாளத்தில் விழுகிறார்கள். சில காவி உடைகள் கண்ணி வைத்து கன்னிகளை வீழ்த்துகிறார்கள். சில கன்னிகள் கண்களாலேயே கண்ணி வெடி வைத்து தகர்க்கிறார்கள். மொத்தத்தில் பரிதாபப்பட வேண்டியது இந்தக் காவிகள் மேல் நம்பிக்கை வாய்த்த பாமரன் தான்.

    பதிலளிநீக்கு
  19. உண்மை..உண்மை...
    என் மனத்திலும் ஓடிய எண்ணங்கள். அசோகர் மரங்கள் நட்டார், குளங்கள் வெட்டினார் என்று இவற்றையெல்லாம் பழங்கதைகளில் தேடுவது போல நல்லவர்களையும் பழைய காலத்தில்தான் தேட வேண்டும் போல...

    பதிலளிநீக்கு
  20. கருத்துக்களை சிதறிவிட்டு எல்லாம் தொட்டு சிறப்பாய்க் கொடுத்திருக்கிறீர்கள்..
    நடையில் உள்ள ஆளுமை எழுதியவர் கவிஞர் என்று காட்டுகிறது....
    இதற்குப் பதங்களைக் கண்டெடுத்து கவிதையாய்த் தொடுத்துக்காட்டாமல் எழுதவந்த வேகத்தோடு வார்த்தைகளை நேர்கோட்டில் சூடாக ஒட்டவைத்ததில் வேகமும் கோபமும் உணர்வு சிதையாமல் பரவுகிறது...
    மனமார்ந்த பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  21. உண்மையிலேயே வருத்தம்தான் சிவாஜி சங்கர்

    பதிலளிநீக்கு
  22. சசி நீங்க உங்க ப்ளாக்கில் மிக அருமையான விஷயங்களை வெளியிடுறீங்க ... கவிதையை விட அருமையா இருக்கு அது.. எனவே கவலைப்பட வேண்டாம்

    பதிலளிநீக்கு
  23. நன்றி நான் ரசித்த சில

    பட்டியன் அடுத்த முறை படிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  24. உண்மை ரிஷபன் மீடியாக்களும் இடைத்தரகர்களும்தான் காரணம்

    பதிலளிநீக்கு
  25. நன்றி புதுகைத்தென்றல்

    ஆமாம் பட்டியன் புத்திக்கொள்முதல்

    பதிலளிநீக்கு
  26. உண்மை சாந்தி காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே

    பதிலளிநீக்கு
  27. உண்மை வானம் பாடிகள்

    நன்றி ஜோதிஜி

    பதிலளிநீக்கு
  28. ஆமாம் அக்பர்


    நன்றி அண்ணாமலையான்

    பதிலளிநீக்கு
  29. நன்றி திவ்யா

    மிகச்சரியாகச் சொன்னீர்கள் ராம மூர்த்தி நாம் தான் காரணம்

    பதிலளிநீக்கு
  30. உண்மைதான் ராகவன்


    ஆமாம் தமிழ் உதயம்

    பதிலளிநீக்கு
  31. மிகச்சரியே நாய்க்குட்டி மனசு

    நானும் அதையேதான் நினைகிறேன் ராம்

    பதிலளிநீக்கு
  32. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்...!!!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ...!!!

    பதிலளிநீக்கு
  33. மீடியாக்கள் இது போன்ற பல அநியாயங்கள் அனுதினமும் செய்யும் அயோக்கிய அரசியல்வாதிகள் பக்கமும் தங்கள் கேமராவை திருப்பலாமே...

    முடியுமா.... முடியும்... ஆனா முடியாது...

    தினகரன் அலுவலகத்தின் 3 பேர் எரிப்பு என்ன ஆனது... நீதிபதி அந்த மூவரும் மின்சார குறைபாடு தாக்கியதால் எரிந்த ஏசியால் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்ததாக சொல்லி, அந்த வழக்கை மூடி விட்டனர்...

    பதிலளிநீக்கு
  34. experiance is only our guru all others are passing clouds be with nature...................coimbatorebalu

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...