எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 26 மே, 2024

சோகி சிவா சொல்வழக்கு - 2.

3.

பொக்குன்னு - சீக்கிரமாக

பனிக்கொடம் - கர்ப்பப் பையில் குழந்தையைச் சுற்றி அமைந்திருக்கும் நீர்ச்சத்து

ஆத்தா சிவகாமி - பெண்குழந்தைகளைத் தாய் என்ற அர்த்தத்தில் ஆத்தா என்று பிரியத்துடன் விளிப்பது வழக்கம்.

 

4.

ஐயாக்க வீட்டுப் பங்காளிக - பங்காளிகளில் கூடிக்கிற பங்காளிகள், ஐயாக்க வீட்டுப் பங்காளிகள் என்று பிரிவு உண்டு. ஒரே ஐயாவுக்குப் பிறந்த பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் வாரிசுகளை ஐயாக்க வீட்டுப் பங்காளிகள் என்பார்கள்.

சிவபதவி - இறைவன் அடி சேர்தல், இறப்புக்குப் பின் சிவனின் திருவடியை அடைதல்,

சனிச்சா - கருவில் உருவானாள்.

ட்ரங்கால் - முன்பே பதிவு செய்து பேசும் தொலைபேசி அழைப்பு.

இந்தக் கணக்கு - ஒரு கணக்கு என்பது ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை நீடிக்கும். அயலுக்குக் கொண்டு விக்கப் போகும் ஆண்மக்கள் ஒரு கணக்கு முடித்து அடுத்த கணக்கை அங்கே யாரிடமாவது ஒப்படைத்துத் திரும்புவார்கள்.

பொட்டியடி - வெளிநாட்டில் கொண்டுவிக்கப் போகும் மக்கள் கிட்டங்கிகளில் கூட்டாகப் பொட்டியடி வைத்து வட்டிக்குக் கொடுத்து வாங்குவார்கள். ஒவ்வொரு பொட்டியடிக்கும் மேலாள்., அடுத்தாள், எடுபிடிப் பையன், சமையற்காரரர்கள் ஆகியோர் பணிபுரிவார்கள்.

மேப்பாத்துக்க - கணக்கு வரவு செலவை மேற்பாத்தல்.

முட்டாய்த்தட்டு - குழந்தை பிறந்தால், பெண் சமைந்தால் மிட்டாய்த்தட்டு வைத்து உறவினர்களை அழைப்பார்கள்.

சுண்டைக்காய் சூப்பு - சுண்டைக்காயில் செய்யப்படும் சுவையான சூப்.

பட்டாலை - செட்டி நாட்டு இல்லங்களில் ஆண்கள் அமரும் பகுதி. முகப்புக்கு அடுத்துப் பட்டாலை அமையும். இங்கே பெட்டியடி, சாய்வு மேசை, திண்டு, குறிச்சி ஆகியன இருக்கும்.

கெட்டிக்குழம்பு - சாம்பாருக்கும் இளங்குழம்புக்கும் முன்பு பருப்பு/தேங்காய்/மசாலை அதிகம் போட்டு செய்யப்பட்ட கெட்டிக் குழம்பு என்ற ஒரு குழம்பு செட்டி நாட்டு விருந்துகளில் பரிமாறப்படும்.

கருவாட்டுப் பொரியல் - வாழைக்காயை எண்ணெயில் கருவாடு போல வறுத்துச் செய்யப்படும் பொரியல்.

பிசினரிசி - ஜவ்வரிசி

நத்தம்தானே - ரத்தம்தானே

சங்கூதும் இடம் - அக்காலத்தில் ஆலைகள் இருக்கும் இடங்களில் சங்கூதுவது உண்டு. அதே போல் சில ஊர்களில் நகர சபையே சங்கூதும் இடம் அமைத்துக் காலையிலும் மதியத்திலும் சங்கொலிக்கச் செய்வார்கள்.

ஆல்வீடு  - வளவுக்கும் இரண்டாம்கட்டுக்கும் இடைப்பட்ட பகுதி. குளிர்காலங்களில் இங்கே கிச்சென்று இருப்பதால் அனைவரும் இங்கே உறங்குவார்கள்.. குழந்தை பெற்றவர்கள் இருக்கும் இடம் இது.

அமர்த்துதல் - கைக்குழந்தைக்குப் பால் கொடுத்தல். ( பசியை அமர்த்துதல் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...