7.5.86.
33.
*வண்டிக்காரனை
ஏய்க்கும்
மாடு.
*கழுத்துமணித்
தாலாட்டில்
தூங்கவைத்து
அவனைக்
கடவெல்லாம்
இழுத்துச்
செல்லும்
வண்டிமாடு.
*கடிவாளக்
கைகளைத்
தளரவைத்து
கால்
போக்கில்
கடந்துபோகும்
ஒற்றைமாடு.
*நுகத்தடியைக்
கழற்றிவிட்டு
ஜோடி
தேடிக்
கொட்டில்
தோறும்
சுற்றிவரும்
காளை மாடு.
*சாட்டையசைப்பில்
கனவுகளை
உதறித்தள்ளி
சுதி
பார்த்துக்
கதி
எண்ணி ஓடும் மாடு.
*வண்டிக்காரனை
மேய்க்கும்
மாடு.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!