7.5.86.
28.
*காற்றைக் கீறும்
குருவியின்
கீச்சலாய்
காலத்தைக்
கீறும்
கடிகாரச்
சத்தம்.
*காலத்தின்
சாவிற்காய்
மணிக்கொருதரம்
ஓலமிடும்
கடிகாரம்.
*கடிகாரம்
முட்கைகளால்
காலத்தை
வெளித்தள்ளும்..
*ஆனால்
காலமோ
உயிர்த்தெழுந்து
அழைப்பு
மணியடித்து
கடிகார
வீட்டுக்குள்
கதைசொல்லிக்
கேள்விகேட்டு
வேதாளமாய்ப்
புகுந்துகொள்ளும்.
*கடிகார
விக்ரமாதித்தம்
பதில்சொல்ல
ஆரம்பிக்கும்
வேதாளம்
துரத்த.
அருமை
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குஅருமை சகோ! எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் சகோ! வரும் ஆண்டுக்ள் எல்லாம் நீங்கள் வெற்றிகள் பல கண்டிட வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குநன்றி கல்யாண்
நன்றி துளசி சகோ & கீத்ஸ் :) உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் சகோஸ் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!