7.5.86.
32.
*சில பறவைகள்
சிறகை
இழந்தபின்னும்
பறந்துகொண்டிருக்கும்
பிரம்மையில்
*சில
கிளைகள்
தாம்
வெட்டி எறியப்பட்டது
‘வேறொரு
இடத்தில்
நடப்படுவதற்கென்ற’
நினைப்பில்.
*நிஜமென்னும்
கொசுக்கள்
நுகத்தடி
மாட்டும்,
மனசுப்
பெண்ணின்
சந்தோசத்
துளைக்குள்.
*விடியல்
வரும்
என்ற
எதிர்பார்ப்பில்
காகங்களும்
சேவல்களும்.
*செடிகள்
பசியடைக்க
சூரிய
இரைக்காய்க்
காத்திருக்கும்.
*மனசு
கனவுகளில்.
மாடுகளோ
கொட்டில்களில்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!