வேண்டாம் தட்சணைகள்..:- ***************************** “நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின” - எங்கே கனவிலா?
“ நல்ல விலை கொண்டு நாயை விற்பார்” - இதில்
உடன்பாடில்லை. “ நல்ல விலை கொடுத்து நாயையும்
கொடுப்பார்” - இதுதான் சரி. இங்கே நடப்பது கொடுக்கல்,
வாங்கல் வியாபாரமில்லை. கொடுக்கல், கொடுக்கல் மேலும்
கொடுக்கல் விவகாரம். கி.மு. 12,000 க்கு முன் பெண்களெல்லாம் துர்க்கையாக
இருந்தார்கள். ஆண்கள் அவர்கள் காலின் கீழ் அரக்கர்களாய்
மிதிபட்டு அடங்கிக் கிடந்தார்கள். ஆண்கள் அந்த அன்பின் உக்கிரம் தாங்காமல் அந்த
உருவத்தைப் படத்தில் அடக்கி, இருட்டறைக்குள் கறுப்புச்
சிலைகளாய்ச் செதுக்கி விட்டார்கள். இப்போது கபாலிகர்களாய்
ஆண்களும் மண்டையோடுகளாய்ப் பெண்களும்..! பெற்றோர் நிச்சயித்த மணங்கள் மட்டுமல்ல, காதல்
திருமணங்களில் கூட இந்தக் கபாலிகர் மண்டையோட்டுப்
பிரச்சனைகள் உண்டு. இந்தியாவில் மட்டும்தான் இந்தக்
கபாலிகர்களின் குதறல்கள். இது வருந்தத்தக்கூடிய விஷயம்.
(ஆனால் வருந்துவது மட்டுமே நம்மால் முடிந்த
செயலாயிருக்கின்றது.) எந்தப் பணக்காரத் துரியோதனர்களோ கட்டி வைத்த இந்த
வரதட்சணை மாளிகைக்குள், ஆகுதீயுன் அவிர்ப்பாகமாய்
எத்துணை ஏழைப்பாண்டவர்கள். ( பெண்ணின் அப்பாக்கள்.) சமூக சீர்திருத்த மணங்கள், ஓர் ஏழைக்கும், இன்னொரு
ஏழைக்கும், ஒரு அனாதைக்கும், இன்னொரு அநாதைக்கும்
மட்டுமே நடந்திருக்கிறது.. நடந்து கொண்டிருக்கின்றது. பணக்காரர்கள் வேண்டுமானால் இருக்கின்ற பணத்துக்குத்
தட்சணைகள் கொடுத்துக் கொண்டிருக்கட்டும். நடுத்தர
ஏழை வர்க்கங்களுக்கு இது தேவையா..? மதில்மேல்
கால் பதித்துவிட்டு இந்தப் பக்கம் அந்தப் பக்கமென்ற
குழப்பமேன்..? கீழ்த்தட்டு வர்க்கங்கள் பாதிக்கப்படுவது
வரதட்சணையினாலல்ல. வேறு குடும்பப் பாதிப்புக்களால். இந்த அந்தகாரங்கள் தோன்றியது நேற்றா.. இன்றா.?
எனக்குள் யுகக் குழப்பம். நமக்கு வாழ்நாளெல்லாம்
அந்தகாரம்தாம். அந்தகாரத்துக்குள்ளேயே விடியலும்,
இருட்டும். நாட்டில் உண்ணலுக்கும், உறங்கலுக்கும்,
வார்த்தை உதப்பலுக்குமாகவே திரியும் அந்தகர்கள் நாம். பணச் செங்கோலுக்கு ( அல்ல.. சர்வாதிகாரத்துக்குப்)
பணிந்து போகும் நம்தலை, அன்புப் பிச்சைக்காரர்களின்
திருவோடு பார்த்துத் திரும்பிக் கொள்கிறது. இங்கே தேவை பரஸ்பரப் புரிந்து கொள்ளுதல்களே. பண
அஸ்திவாரங்களில் செய்யப்படும் திருமணங்கள் பாட்டரி
(BATTERY ) தீரும்வரை உழைக்கும் (COMPUTERS)
கம்யூட்டர்கள் போல. சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆண், வரதட்சணை
கொடுத்துப் பெண்ணை மணந்து கொண்டான். வரதட்சணை
போல வதுதட்சணையும் தவறே. திருமணம் என்பது
ஆணுக்கும் பெண்ணுக்கும் அளிக்கப்படும் கௌரவ
சிம்மாசனம். அடிமை சாசனமல்ல. பணத்துக்கும்
பணத்துக்கும் செய்யப்படுவது திருமணமல்ல.
வியாபார ஒப்பந்தம். மேலும் சொல்லப்போனால் MARRIAGE IS,NOT A CONTRACT BETWEEN A MAN &
WOMAN.IT'S A SACRED BOND. 1985 மார்ச் புதிய பார்வையில் வெளிவந்தது.
அசத்தல் தேனக்கா.
பதிலளிநீக்குஇன்றும் சீனா-வில் ஆண்தான் பெண் வீட்டாருக்குப் பணம் தந்துப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
பதிலளிநீக்குஆனால் இந்தியாவில்தான், இப்படி கொடுமை. கட்டாய வசூல்.!! கவுரவப் பிரச்சினை. சட்டத்திற்கும், உண்மை நிலைக்கும் நிறைய இடங்களில் முரண்பாடு உள்ளது.
நன்றி சாந்தி
பதிலளிநீக்குநன்றி தெம்மாங்குப் பாட்டு. உண்மைதான்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!