ஆஸ்த்ரேலியாவிலிருந்து வெளிவரும் மெல்லினத்தில் நம் அபிமானத்துக்குரிய நடிகர். ( என்னுடைய முகநூல் நண்பரும், என்னைத் தன் மகளாகக் குறிப்பிடும் மதிப்பிற்குரிய தந்தையுமாகிய ) திரு. டெல்லி கணேஷ் அவர்கள் எழுதி வரும் தொடர் “ இது ஒரு நிலாக்காலம் “ படிக்க ஒரு அரிய வாய்ப்பு.
அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். நடிப்பைப் போலவே ஹாஸ்யத்தோடு சரளமாகத் தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்தவற்றைப் பகிரும் விதம் அருமை. சில நெகிழ வைத்தது.சில கசிய வைத்தது. சில புன்முறுவல் பூக்க வைத்தது. சில சிந்திக்க வைத்தது.
சாம்பிளுக்குச் சில
/// மக்கள் கூட நல்லவர்கள்தான். இந்தக் காவிரிப் பிரச்சனைக்குப் பிறகுதான் அவர்களுக்கு நம்மீதும் நமக்கு அவர்கள் மீதும் தேவையில்லாத மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது. அரசியல் நமக்கு அளித்த வரப்பிரசாதம் இதுதான். ///
/// வைரமுத்து பொறப்பான்னு
வயிற்றில் நீ சுமந்ததில்லை.
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு///
/// ARE YOU SIVAJI GANESAN OR GEMINI GANESAN..?
I AM ORDINARY GANESAN SIR///
///இன்று கூட ”தமிழ்” “ தமிழர்” என்றெல்லாம் அடிக்கடி கோஷமிடுகிறார்கள். ஆனால் ஆட்டோ ஓட்டும் அத்துணை தமிழர்களும் மார்வாடியிடம்தான் போய் ஆட்டோ வாங்க வரிசையில் நிற்கிறார்கள்.///
/// அந்த வேப்பமரங்கள் இன்னும் இருக்கின்றன. அவை வீரபாகுவும், சிவராமகிருஷ்ணனும்தான். . பள்ளியின்’ முதல் மாணவர் தலைவர்கள். ’
/// சாமி இல்லை, கடவுள் இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள் என்ற குரல் அதிகம் ஒலிப்பது தமிழகத்தில் மட்டும்தான். அதிக சாமி சிலைகள்/ அதிக கடவுள்கள்/ அதிக கோயில்கள் இருப்பதும் தமிழகத்தில்தான்.///
///அவன் தமிழன், இவன் மலையாளி, இவன் இந்தியன், அவன் அமெரிக்கன், இவன் பணக்காரன், நாம ஏழை, என்ற மனப்பான்மை வந்து கள்ளங்கபடமில்லா நல்ல வாழ்க்கையை இழந்துடுறோம். ///
இன்னும் நச்சென்ற தலையங்கள், ஆய்வுக் கட்டுரைகள், சினிமா செய்திகள், சமையல், கவிதை, கட்டுரைகள், விளையாட்டு எனப் பகிர்வுகள் அநேகம். என்னுடைய பெண் மொழிக் கட்டுரைகளும் தொடராக வந்து கொண்டிருக்கின்றன. சகோ வெங்கடேஷ் மஹாதேவனின் பாடல் தந்த பரவசமும் அருமை. தொடர்ந்து இதழை சிறப்பாகக் கொண்டுவரும் கலை, மணிமாறன், பாண்டிமாதேவி, சிவகங்கை சகாதேவன் மற்றும் ஆசிரியர் குழாமுக்குப் பாராட்டுகள். ஒரு வருடம் முடிந்து அடுத்த இரு இதழ்களும் வந்து விட்டன.
மெல்லினத்துக்கு வயது இரண்டு என்ற இந்த இடுகையையும் பாருங்கள்.
36 ஆவது புத்தகத் திருவிழா சென்னை நந்தனம் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 11 ஆம் தேதியில் இருந்து ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடை எண் . 43 & 44 டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நமது மெல்லினம் இதழ்களை விற்பனைக்கு /விளம்பரத்திற்கு வைக்கப்பட்டுள்ளன. டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கு நன்றிகள்.
அங்கேயே வாங்கிப் பார்க்கலாம். மேலும் சந்தாதாரரும் ஆகலாம்.நன்றி.:)
அடடே தகவல். அவசியம் டிஸ்கவரிக்குச் செல்லும் போது இதைப் பார்த்து படித்து ரசிக்கிறேன். தகவலுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும என் இதயம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி கணேஷ். உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு