எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 1 ஜனவரி, 2013

சுயம் எனும் சக்தி.

பூக்கின்ற  புதுவருடத்திலும்
புண்ணியத்தலம் , சுற்றுலாத்தலம்,
பாக்கள் ஊறும் பாற்குளம்
எங்கள் வலைத்தல(ள)மே..

புன்னகையோ மென்னகையோ
பூப்பந்தோ அணுகுண்டோ
வலைவீசிப் பூப்பிடிக்கும்
வலைப் பூவரசிகள்.



எந்நோவும் உந்நோவும்
மண்நோவும் தீர்த்துவிட
பண்பட்ட பண்ணோடு
பறந்து வரும் பூங்குயில்கள்.

வல்லியளோ மெல்லியளோ
ஓர் கணிப்பில் இடையினளோ
இதழ் இதழாய் இடுகையிடும்
இல்லத்து இலக்குமிகள்

எச்சோர்வு என்றாலும்
எழுத்தாற்றல் பொங்கிவர
அச்சோவென அமராமல்
ஏட்டில் உரைக்கும் சரஸ்வதிகள்.

காலங்கள் உறவுகள்
கடமைகள் நட்புக்கள் காத்து
துரோகங்கள் தூர்க்கும்
சாந்தரூப துர்க்கைகள்.

அடுத்தடுத்தும் அலைகடலாய்
ஆர்ப்பரித்து செயல்படவும்
ஐஸ்வர்யம் ஆரோக்யமும்
அருள்க  என்றும் வைஷ்ணவியே.

எம்மோடு இயைந்திருக்கும் தமிழே
இன்னாரையும் இனியராக்கிடு
சொல்வடிவாய் செயல்முடிவாய்
ஜெகம்  ஜெயிக்கும் சக்தி கொடு.


5 கருத்துகள்:

  1. அருமை.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தேனம்மை:)!

    பதிலளிநீக்கு
  2. எம்மோடு இயைந்திருக்கும் தமிழே
    இன்னாரையும் இனியராக்கிடு
    சொல்வடிவாய் செயல்முடிவாய்
    ஜெகம் ஜெயிக்கும் சக்தி கொடு.

    சுயம் எனும் சக்தியாய் வரிகள் அனைத்தும் மிளிர்கின்றன் ... அருமையான ஆக்கம் ..பாராட்டுக்கள்..

    இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு

  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  4. நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி ராஜி

    நன்றி அவர்கள் உண்மைகள்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...