சில மாதங்களுக்கு முன் ஷிர்டி சாய் பாபாவைத் தரிசிக்கச் சென்றிருந்தோம்.
சென்னை டு ஷிர்டி, ஷிர்டி டு பெங்களூர், பெங்களூர் டு திருச்சி இண்டிகோவில் வந்து திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு வந்து சேர்ந்தோம்.
ஸ்ரத்தா, சபூரி என்ற இரு உபதேசங்களை அங்கே அவரின் மந்திரிலும் அவருடைய சமாதி இருக்குமிடம் பார்த்தோம்.
சாய்பாபா சங்ஸ்தான் ட்ரஸ்டில் தங்கினோம்.
அங்கே கோவிலில் பெருங்கூட்டம்.எனவே தங்கியிருந்த சங்ஸ்தானிலேயே டிவியில் ஹாரத்தி பார்த்தோம்.மாலையில் சாவடி உத்ஸவுக்கு மகனும் மருமகளும் சென்று வந்தார்கள்.
இந்தியன் டாய்லெட்தான் உள்ளது . இது த்வாராவதி என்ற பெயர் உள்ள கட்டிடம்.
ஷிர்டி ஏர்போர்ட்டில்
சென்ற சமயம் முழுவதும் ஒரே மழை. கீழே டீக்கடை. எதிரே பார்க். எனவே கூட்டத்துக்குப் பஞ்சமில்லை. சின்ன நிகழ்வுகளை இந்தப் பார்க்கிலேயே உறவினர் சூழ நடத்தினார்கள்.ஆன்லைனில் ஹோட்டல் புக் செய்தோம்.
ஆனாலும் நிம்மதியாக க்யூவில் சென்று தரிசித்தோம், அவ்வளவு கூட்டம். அவரின் சமாதிக்கருகில் கதகதப்பும் தாயின் மடி போன்ற ஒரு மனநிம்மதியும் கிடைத்தது.
தரிசனத்துக்கு மற்றும் பிரசாதத்துக்கு என்று மூவாயிரம் ரூபாய் கொடுத்துச் சென்றோம். ஆனால் வெறுமனே க்யூவில் சென்று கூட தரிசித்து இருக்கலாம் போல.
பொருட்கள் வைக்க ஸ்லாப் மேடை.
மூன்று படுக்கைகள் கொண்ட விசாலமான அறை.
வரிசையாக விரிந்து செல்லும் கட்டிடங்களும் அறைகளும்.
மூன்று, நான்கு கட்டிடங்களுக்கு உட்பக்கமாகவே செல்லலாம்.
மும்பையில் மழை, ஷிர்டியில் மழை , பெங்களூரு & திருச்சியிலும் கூட மழை.
பகவான் ஸ்ரீ சத்ய சாயியின் கருணை மழையிலும் நன்கு நனைந்து சிலிர்த்து வந்தோம்.
1790.ஸ்ரீ சாய்நாத் கி ஹாரத்தி l ஷிர்டி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=qhvWmnTaCBo
#ஸ்ரீசாய்நாத், #ஷிர்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SAIBABA, #SHIRDI, #THENAMMAILAKSHMANAN,
பாபாவின் கதையைப் (சாய் சத்சரித்ரா) படித்து நான் எழுதிய பாடல்.
151.ஓம் சாயி சரணம் l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=SMa_FKvKnbE
#ஓம்சாயிசரணம் #தேனம்மைலெக்ஷ்மணன்
#OMSAISARANAM #THENAMMAILAKSHMANAN
149.அச்சுதம் கேசவம் சாய்தாமோதரம் l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=4F68UUu9jxQ
#அச்சுதம்கேசவம் #சாய்தாமோதரம் #தேனம்மைலெக்ஷ்மணன்
#ACHUTHAMKESAVAM #SAIDAMODHARAM #THENAMMAILAKSHMANAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)