பிலடெலி என்று ஸ்டாம்ப்ஸ் கலெக்ஷன் பற்றி முன்பே போட்டிருந்தேன். இப்போது என் தாயாரும், என் சின்ன மகனும் மற்றும் நானும் சேகரித்த நாணயங்களைப் பற்றிப் பகிர்கிறேன். உலகளாவிய அளவில் இது ஒரு காலத்தில் பெரும் பொழுது போக்காவும் அரிய சேமிப்பாகவும் இருந்திருக்கிறது. செல்லாமல் போன இந்திய/அந்நிய நோட்டுக்களை எண்ணிப் பார்த்தால் அதுவே லட்ச ரூபாய்களை எட்டும்.
இதில் இந்திய நாணயங்களையும் ரூபாய் நோட்டுக்களையும் பகிர்ந்துள்ளேன்.
வரவு எட்டணா,செலவு பத்தணா என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு அணா என்பது ஆறு காசு.
நாலணா என்றால் 24 காசு. ஆனால் 25 காசை நாம் நாலணா என்றும் 50 காசை எட்டணா என்று கூறி வருகிறோம். ( 48 காசுதான் எட்டணா ). ஒரு ரூபாய்க்குப் பதினாறணா. 96 காசுகள்.
அப்போதெல்லாம் டவுன்பஸ்ஸில் எட்டணா டிக்கெட்டில் பயணிக்கலாம்.
அப்போது என்பது ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு.
தேசிய விலங்கான புலியைப் பாதுகாப்பது குறித்து, மீனவர் நலன்குறித்து, இந்திராகாந்தி அம்மையார், ஜவஹர்லால் நேருஜியின் படங்கள், தண்டி யாத்திரை, இந்தியா மேப், (விவசாயத்தின் நெற்கதிர்களின் செழிப்பு), பசுமைப் புரட்சி, சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் கடந்ததைக் கொண்டாடும் விதமாக என காசுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
ஒரு ரூபாய்.
இண்டர்நேஷனல் யூத் இயர், காமன்வெல்த் பார்லிமெண்டரி கான்ஃபரன்ஸ், ஜவஹர்லால் நேரு, சார்க் மாநாடு, இண்டர்நேஷனல் இயர் ஆஃப் த ஃபேமிலி, உலகத் தமிழ் மாநாடு, திருவள்ளுவர் தினம், ஃபுட் ஃபார் த ஃப்யூச்சர், டூரிஸம் , அம்பேத்கார், அம்பேத்கார், ராஜிவ் காந்தி, 15 இயர்ஸ் ஆஃப் ஐ எஸ் சி டி, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சிறு விவசாயிகள், போர்ட் ப்ளேர் செல்லுலார் ஜெயில், மழைநீர் விவசாயம், ஐசிடிஎஸ்ஸின் பதினைந்தாவது வருடம் ஆகியன சித்தரிக்கப்பட்டுள்ளன.
இதில்ஜவஹர்லால் நேரு அதிகம் சித்தரிக்கப்பட்டுள்ளார். இதில் சுதந்திரத்துக்கு முன்னான காலமும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாவது ஏஷியன் கேம்ஸ், சர்தார் வல்லபாய் படேல், ஸ்ரீ அரவிந்தர், அக்ரி எக்ஸ்போ 95, சுபாஷ் சந்திர போஸ், லூயிஸ் ப்ரெய்லி, டாகர் ஷியாமா ப்ரகாஷ் முகர்ஜி, வேர்ல்ட் ஃபுட் டே, திருவள்ளுவர், சத்ரபதி சிவாஜி, நீதித் துறை, தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், சிறு குடும்பம் சீரான குடும்பம், எனத் தற்போது வரையுள்ள நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இவை புது ஒரு ரூபாய் நாணயங்கள்.
ஐந்து ரூபாய் நாணயங்களில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம், ஓ என் ஜி சி, தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆனதைச் சிறப்பிக்கும் நாணயம், பகத் சிங், மகாத்மா பசவேஸ்வரர், ஜகத்குரு ஸ்ரீ நாராயண குருதேவ், ஐ நா சபையின் 50 ஆவது வருடம், விவசாயம், அரவிந்தர், ரபீந்த்ரநாத் தாகூர், செயிண்ட் அல்ஃபோன்ஸா,திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா, தாயின் உடல்நலமே குழந்தையின் உடல்நலம், காமராஜர், விவேகானந்தர், இந்தியன் மெடிக்கல் ரிசர்ச், பகவான் மகாவீர், தாதாபாய் நௌரோஜி, வைஷ்ணோதேவி, தஞ்சைப் பெரிய கோவிலும் மன்னர் ராஜராஜ சோழனும், வைஷ்ணோதேவி இந்திரா காந்தி அம்மையார், ஜவஹர்லால் நேரு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பத்து ரூபாய் நாணயங்களில் வைஷ்ணோ தேவி பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பு. மற்றவற்றில் அசோகச் சின்னம் மட்டுமே.
ஆங்கிலேயர் காலத்தில் வெளியிடப்பட்ட பத்து ரூபாய்த்தாள். ஒன்பது மொழிகளில் தமிழும் இடம்பெற்றிருப்பது வெகு சிறப்பு.
மகாத்மாவின் சேவையை நினைவுறுத்தும் வண்ணம் அச்சடிக்கப்பட்ட ஐந்து ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், இருநூறு ரூபாய் நோட்டுக்கள்.
Nice collectio
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு