எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 மார்ச், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். ராஜும்(ஜ்சிவாசுந்தரும்) ரஜனியும்.


என் முகநூல் சகோதரர்களில் குறிப்பிடத்தக்கவர் சகோ ராஜ் சிவா சுந்தர். முதன் முதலாக ”ங்கா ” கவிதைத்தொகுதியை வெளியிட்டுக்கு ஈரோட்டுக்கு அண்ணன் தாமோதர் சந்துரு அவர்களின் மகன் அருண் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது பக்கத்தில் இருந்த வலம்புரி விநாயகர் கோயிலுக்குத் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று விநாயகர் பாதத்தில் வைத்து ஆசீர்வாதம் வாங்கியபின் வெளியீட்டுக்கு அழைத்து வந்தார்.

முகநூல் தவிர ( அதிலும் ரஜனி படம்தான் ப்ரொஃபைலாக பல காலம் வைத்திருந்தார் அப்போது  ) வேறெங்கும் பார்த்தறியாத அவரை முதன் முதலாக அங்கேதான் பார்த்தேன். சொந்த சகோதரி போல அந்தத் தருணத்திலிருந்தே அன்பும் பாசமும் செலுத்தி வருகிறார். தினமும் இவர் ஸ்டேடஸ் ஒன்றையாவது ஹோம்பேஜில் கட்டாயம் பார்ப்பேன். எல்லாமே அன்பும் , நேர்மையும், நற்குணங்களைப் போதிப்பதாகவும் இருக்கும். ரஜனிமேல் அபரிமித பாசம். எளிமையும் அன்பும் பண்பும் கலந்த சகோதரரிடம் நம் வலைத்தளத்துக்காக ஒரு கேள்வி அவருக்கும் நமக்கும் பிடித்த ரஜனி பற்றி. :)

//// நீங்க ரஜனியைப் பார்த்த ( படத்துலதான் ) முதல் தருணம் எது. எப்போலேருந்து அவரோட தீவிர விசிறியானீங்க..///

 ரஜினி..



மந்திர சொல் தாம்..என்னைப்பொருத்தவரை..

ரஜினியை..முதலில்..நான் பார்த்தது..பைரவி படத்தில்..கதை உங்கள் எல்லாத்துக்குமே தெரியும்..அதன் பின்..முள்ளும் மலரும்..தர்ம யுத்தம்..ன்னு பார்த்த படங்கள்..எல்லாமே..எனக்கு பிடித்ததற்கு காரணம்..என்னோட தங்கைகள்..எனக்கு நாலு தங்கைகள்..

ரஜினியின் அனைத்து படங்களிலும்..நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டுள்ளேன்..அண்ணனாக ..பாசமான மகனாக பாசமான கணவனாக ..எல்லா படத்திலும்..பாசிடிவ் ஆன அனைத்து விஷயங்களும்..எனது மண்டையில் ஏறிய காரணம்..தான்.. நான் இன்றிருக்கும்..நிலை..

ரஜினி படங்களில் மூலம்..மறை முகமாக சொன்ன அனைத்து நல்ல விஷயங்களும்..என் தலையில்..அப்புறம்..அவரோட ஸ்டைல்..மேனரிசம் என்று அனைத்தும்..

ஜோதிகா எப்படி சந்திர முகியா மாறினதா படத்தில் சொல்லப்பட்டதோ..அது போலவே..நானும் மாறி விட்டேன்..கிட்டத்தட்ட.. அவரோட..படங்களில்..

எனது ஆல் டைம் பேவரைட் மூவி என்றால்..அது எங்கேயோ கேட்ட குரல் தாம்..என்ன ஒரு அமைதியான நடிப்பு..பெரியவர்களை மதிக்கும் பண்பு..மனைவியிடம்..அன்பு..மனைவியின் துரோகம் கண்டு அமைதியாக பொங்குவது..பெற்ற பெண்ணின் மீது பாசம்..இரண்டாவது மனைவியிடம் அன்னியோன்யம்..கோபம் காட்டும் இடத்தில் கோபம்..முதல் மனைவியை மன்னிக்கும் பாங்கு அவளை வெறுக்காத மனது..அவளிடம் கொடுத்த வார்த்தைக்காக அவளுக்கு ஊரே எதிர்த்தும்..இறுதி சடங்கு செய்வது..ன்னு..படமா அது..ரஜினி வாழ்ந்திருப்பார்..

இன்று ரஜினியின்..(26. 2.2014 )கல்யாண நாள்..அவர்..இன்று போல என்றும் வாழ என் மனதார இறைவனை வேண்டுகிறேன்..///


////எனக்கு.கடவுள் நம்பிக்கை உண்டு கண்டிப்பா.. அவனன்றி அணுவும் அசையாது என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன்.. 

அதேசமயம்..கடவுளை..நம்பாதவரை..வெறுப்பதில்லை..ஆனால்..கடவுளை நம்புவர்களை..கிண்டல் செய்பவர்களை..கண்டிப்பாக வெறுப்பேன்..விலகி விடுவேன்..விலக்கியும் விடுவேன்....சக மனிதர்களை வெறுப்பவர்களை என்ன தான்.. செய்ய முடியும்..பிறகு..? நிறைய பிரச்னைகள் எனக்கும் உண்டு..ஆனால்..அந்த பிரச்னைகளை இங்கு கொண்டு வராம.....இங்கே ..முக நூலில் நண்பர்களிடம் பேசுவதன் மூலம் அந்த பிரச்னைகளை மறக்க நினைக்கவே இங்கு வருகிறேன்..இங்கேயும் அந்த பிரச்னை இந்த பிரச்னை ன்னு கொண்டு வருபவர்களை கொஞ்சம் தவிர்க்கத்தான் நினைக்கிறேன்..

பணம் சம்பாதிப்பது நம்ம கையில் இல்லை என்பதில் நம்பிக்கை உள்ளவன்..அது வருவதும் போவதும் என்னமோ நம்ம கையில் தான் இருக்கு என்ற கொள்கை எனக்கு கிடையாது..திறமை உள்ளவர் கஷ்டப் படுவதையும்..இல்லாதவர் சந்தோசமா இருப்பதையும் பார்க்கத்தானே செய்கிறோம்..மிக நல்லவர்கள் கஷ்டப் படுவதும்..மோசமானவர்கள் வாழ்க்கையை நன்கு அனுபவிப்பது கூட முன் வினை பயன்கள் என்று நினைப்பவன் நான்..

அடுத்த பிறவி உங்களுக்கு கிடையாது..என்றால்..  நல்லது..இருந்தால்..அந்த பிறவியில் நன்கு வாழ..இந்த பிறவியில்..நல்லதே செய்யுங்கள்.. அப்புறம்..ரஜினி..பிடிக்கும்..சினிமா பிடிக்கும்..எல்லாரும் இன்பமாக வாழ்வது எனக்கு பிடிக்கும்..ஆனாலும்..என் சக்திகேற்ற அளவில் தான் நான் வாழ முடியும்..மற்றவர்க்கு உதவி செய்ய முடியும்..என்னால்..முடிந்த அணில் போன்ற மிக சிறு உதவிகளை என் நண்பர்கள் சுற்றத்தார்..க்கு செய்கிறேன்..

வாழ்க்கையின் அடி மட்டம் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்களோ..அந்த இடத்திலிருந்து வந்து..சுமாரான நடுத்தர வாழ்க்கை வாழ்கிறேன்..ஆனால்..எல்லா நிலையிலும்..என் நிலைமை குறித்து சந்தோசமாகவே இருந்திருக்கிறேன்..அதனால்..எப்போதும் வருத்தப்பட்டோ சோர்ந்தோ உட்கார்ந்ததே கிடையாது..நம் ப்ரச்னை களை கூட தீர்க்க முடியாமல் ..நாம என்ன தான் உலகத்தில் சாதிக்கப் போறோம்..?..

முடிந்த அளவு..எல்லாரும் உழைத்து பிறர் கையை எதிர் பாரா வண்ணம் வாழ வேண்டும்..சிலர்..இவ்வுலகில்..உதவி பெறுவதையே தொழிலாக வைத்திருக்கின்றனர்..மீன் பிடிக்க உதவி பெறலாம்..(அதாவது கற்றுக்கொள்ள )தப்பில்லை..ஆனால்..மீன்களையே எப்போதும் உதவியாக எதிர் பார்த்து..நிற்பவர்கள்..சோம்பேறிகளே ..என்னை பொறுத்த வரையில்....////

 

 /////முக நூல் வந்து என்னோட பெர்சானாலிட்டி ...

கூடியிருக்கு என நான் நம்புகிறேன்..

அழகில் ...
வருவதற்கு முன்பு இருந்த அதே முகம் தான்..ஆனாலும்..ஏதோ ஒரு தேஜஸ் கூடினார் போல எனக்கு ஒரு பீலிங் இருக்கு..

அப்புறம்..அறிவில்..
நிறைய தெரிஞ்சிக்கிறேன்..நண்பர்களின் ஸ்டேடஸ் வாயிலாக........நானுமென் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்..அதில் வரும் கிராஸ் கொஸ்டின் களினால்..மேலும் அனுபவம் கூடுது..இன்னும்நிறைய தெரிஞ்சிக்கிறேன்..

குணத்தில்..
இது உண்மையிலேயே சூப்பர் ஆக இம்ப்ரூவ் ஆகியிருக்குன்னு திடமா நம்புகிறேன்..என்னைப் பற்றிய கொஞ்சம் நஞ்ச தாழ்வு மனப் பான்மை போயே
போச்சுது ..அப்புறம்..நிறைய அட்வைஸ் மழை பொழிகிறேன்..அறிவுரைகளை விட நான் மேலும் ஒழுங்காக இருக்கணும் ன்னு நினைப்பதால்..தன்னாலேயே நான் ஒழுங்காக இருக்கிறேன்..

நன்றி..முக நூல்..மற்றும் முக நூல் நண்பர்களுக்கு..///
 

மிக்க நன்றி ராஜ் சகோ . நானும் கூட பைரவி பார்த்து அசந்திருக்கிறேன். இன்னும் ஆறிலிருந்து அறுபது வரையும் முள்ளும் மலரும் தான் என் ஃபேவரைட் படங்கள். உலக அழகியோடு நடித்ததால் எந்திரனும் பிடித்தமாயிற்று. நன்றி பகிர்வுக்கு. அவருக்கு எங்களது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்கூட. 


3 கருத்துகள்:

  1. முகநூலில் "தூள்" கிளப்பும் ராஜ் சிவா சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...