என் முகநூல் சகோதரர்களில் குறிப்பிடத்தக்கவர் சகோ ராஜ் சிவா சுந்தர். முதன் முதலாக ”ங்கா ” கவிதைத்தொகுதியை வெளியிட்டுக்கு ஈரோட்டுக்கு அண்ணன் தாமோதர் சந்துரு அவர்களின் மகன் அருண் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது பக்கத்தில் இருந்த வலம்புரி விநாயகர் கோயிலுக்குத் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று விநாயகர் பாதத்தில் வைத்து ஆசீர்வாதம் வாங்கியபின் வெளியீட்டுக்கு அழைத்து வந்தார்.
முகநூல் தவிர ( அதிலும் ரஜனி படம்தான் ப்ரொஃபைலாக பல காலம் வைத்திருந்தார் அப்போது ) வேறெங்கும் பார்த்தறியாத அவரை முதன் முதலாக அங்கேதான் பார்த்தேன். சொந்த சகோதரி போல அந்தத் தருணத்திலிருந்தே அன்பும் பாசமும் செலுத்தி வருகிறார். தினமும் இவர் ஸ்டேடஸ் ஒன்றையாவது ஹோம்பேஜில் கட்டாயம் பார்ப்பேன். எல்லாமே அன்பும் , நேர்மையும், நற்குணங்களைப் போதிப்பதாகவும் இருக்கும். ரஜனிமேல் அபரிமித பாசம். எளிமையும் அன்பும் பண்பும் கலந்த சகோதரரிடம் நம் வலைத்தளத்துக்காக ஒரு கேள்வி அவருக்கும் நமக்கும் பிடித்த ரஜனி பற்றி. :)
//// நீங்க ரஜனியைப் பார்த்த ( படத்துலதான் ) முதல் தருணம் எது. எப்போலேருந்து அவரோட தீவிர விசிறியானீங்க..///
ரஜினி..
