எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 செப்டம்பர், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 10

 **பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா எனப்

புல்லரிக்கும் கணவர்கள் போல
ஃப்ரெண்டு பிரிஞ்சு போயிட்டாலும்
ஃபுல் அடிச்சுக் கொண்டாடுறாங்க.

 

**காதலின் தேடலைக்
காலம்கடந்து தெரிவிக்கிறது
சுற்றியலைந்து
கூடு திரும்பும் புறாத்தூது.




**கண்களை மறைத்துக்
கன்னங்களை நனைக்கும்
மழையைப் பிடிக்கிறது
தனிமையில் உதிரும்
உப்புநீர்ப்பூக்களைச்
சரமாகத் தொடுப்பதால்.


**எது வெருட்டுகிறது உன்னை
காதலா காமமா
முதுமையா பிணியா இறப்பா
எல்லோருக்கும் நிகழ்ந்ததுதானே
உனக்கும் காத்திருக்கிறது.
மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ் :)


**நெகிழ்ந்த மனதை விட்டுத் தொலை
என்னை நானே மீட்டுக் கொள்வேன்.

 

**எப்போதும் அங்கீகாரத்துக்காக
ஏங்கித் தொலைவதைத் தவிர
உருப்படியாக ஏதும் செய்து தொலைக்கலாம்.


**பறவைச் சத்தங்கள்
இல்லாமலும் புரிகிறது
ஆலத்தின் மௌனமொழி.


**தேடித் தேடித்
தேய்ந்துவிடுகின்றன விழிகள்.
சூன்யத்தில் உருப்பெறுகிறது
உன் உருவம்.


**இது தனிமையும் இல்லை
வெறுமையும்  இல்லை
அடியெடுத்து வரப்போகும்
முதுமையின் ஒரு அங்கம்.


**தேவதைகளுக்குத் தென்றல் என்று பெயர்.
அதிதேவதைகளுக்கு அடைமழை  என்று பெயர்.
பிரத்யதி தேவதைகளுக்குப் புயல் என்று பெயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)