21. தனியே தன்னந்தனியே.
ரிதமில் வரும் இந்தப் பாட்டு சொல்லொணா சோகத்தைக் கிளப்பும். மீனா தனியாக தன் மகனோடு ஒரு வைபவத்துக்கு வரும்போது இந்தப் பாடல் இடம் பெறும். இதில் நடனம் சிறப்பாக இருக்கும். அருமையான லிரிக்ஸ்க்காகவும் பிடிக்கும்.
22. பூமாலையில் ஓர் மல்லிகை
சிவாஜி கே ஆர் விஜயா. நம்ம ஃபேவரைட் ஜோடியின் பாடல். கணவன் மனைவி போல மிகப் பாந்தமாக இருக்கும் இந்த ஜோடி. பாடலும் இணைவும் இழைவும் குழைவும் அப்படியே. விஜயாம்மாவின் சிரிப்புக்கு நான் அடிமை. அந்த மச்சத்துக்கும்.
23. my bro Naveen Kbb' film song..நெல்லை சந்திப்பு-- இதுதானே எங்கள் வீடு. சந்தோஷம் பொங்கும் கூடு. தாய்தந்தை அன்பில் வாழும் ஜீவன் நாங்களே..
சகோதரர் நவீன் கிருஷ்ணாவின் படப்பாடல். மத்தியதரக் குடும்பத்தின் உறவுகளும் நெகிழ்வுகளுமாக மிக அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும்.
24. ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க
ஜெமினி கணேசன் பாடும் பாடல். அடிக்கடி முணுமுணுக்கத் தோன்றும் பாடலும் கூட.
25. இருபது கோடி நிலவுகள் கூடி
வரி விடாமல் கிறங்கடிக்கும் பாடல். நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாருமில்லையே.. என்ற வரிகளுக்காக சொத்தையே எழுதித் தரலாம். :) விஜய் & சிம்ரன் ஜோடி. சிம்ரன் எனக்குப்பிடித்த அழகான நடிகை.
26. திறக்காத காட்டுக்குள்ளே..
அரவிந்த்சாமி இஷா கோபிகர் பாடும் பாடல். காட்சியமைப்பும் இருவரின் கம்பீரமும் காதலும் நளினமும் இளமையும் அழகு.
27. காதல் ரோஜாவே.
அரவிந்த் சாமி மனைவி மதுபாலாவை நினைத்துப் பாடும் பாடல். தனிமை , சோகம் அதன் கூடவே மெல்லியதாகத் துளிர்விடும் இனிமையும் கூட.
28. என்ன விலை அழகே.
குணால், சோனாலி பிந்த்ரே பாடும் பாடல். உலக அழகை எல்லாம் கொட்டிக் குவித்தாற்போல இருக்கும் காட்சியமைப்புகளுக்கு நடுவில் ஹீரோ ஹீரோயின் இருவரும் போனஸ் அழகு.
29. மாலையில் யாரோ..
பானுப்பிரியா பாடும் இந்தப் பாடல் ஒரு மாலை நேரத்தின் நிம்மதி இன்மையையும் தனிமையையும் கொஞ்சம் ஏக்கத்தையும் சுமந்து ஏதோ ஒரு சின்ன இனிமையையும் வெளிப்படுத்தும். சோகத்துலயும் ஒரு சுகம்டா என்பது போல.
30.என்னோடு காதல் என்று.
கமல் சிம்ரன் ஜோடியின் சூப்பர் பாடல். என்று கேட்டாலும் இனிமை ததும்பும் குறும்புப் பாடல். ஒரு சின்ன ஃப்ளைட் ஹை ஜாக்கில் சந்திப்பவர்கள் அடுத்தடுத்துக் காதல் வயப்படுவதும் அதில் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளைக் கோர்த்தே ரொம்ப நாள் பந்தம் போல பாடல் பாடுவதும் தலைக்கே வாய்த்த கலை. :)

அனைத்தும் ரசிக்கும் பாடல்கள்...
பதிலளிநீக்குஒவ்வொன்றின் ரசனையும் அருமை சகோதரி...
ரசிக்கும் பாடல்கள்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி அக்கா....
பூமாலையில் ஓர் மல்லிகை, திறக்காத காட்டுக்குள்ளே..மற்றும் மாலையில் யாரோ........சப்தமற்ற இரவில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சகோ
பதிலளிநீக்குநன்றி குமார்
நன்றி மாடிப்படி மாது
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!