எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 7 டிசம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர். திருமதி நவாஸ். கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு.

வலை உலகில் அடியெடுத்த வைத்த 2009 ஆம் ஆண்டு முகநூலில் தாக்கம் அவ்வளவாக இல்லை . அப்போது எல்லாம் வலை உலகம் மட்டுமே முழு உலகமும். 


அந்த வகையில் எல்லா வலைத்தளங்களும் படிப்பது வழக்கம். அப்படிப் படிக்கும்போது இரு கவிதைகள் வலை உலக சகோ நவாஸ் அவர்களின் தளத்தில் என்னைக் கவர்ந்தன. வெளிநாடு வாழ் சகோதரர்கள் வீட்டைக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்கும்போது எழுதும் கவிதைகள் ஏற்படுத்தும் உணர்வுகள் வலிமையானவை.

உணர்ந்து எழுதியதாலோ என்னவோ மனதை அசைக்கும் சக்தி கொண்டவை. அப்படி  பசலை பற்றிய ஒரு கவிதையும் , வாநீர் வாசனையோடு மகன் தூங்கும் கவிதையும் இவரது தளத்தில் என்னை அசைத்தவை.  

அவரிடம் நம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி.

////உங்க மனைவிக்கு பிடிச்ச கலர் எது. அத எப்ப கண்டு பிடிச்சீங்க ////

 என் மனைவிக்கு ரொம்பப் பிடிச்ச கலர் லைட் பிங்க் கலர்தான்.

எங்களோட எங்கேஜ்மெண்டுக்கு 2 நாள் முன்னாடிதான் முதல் முறையா அவங்ககிட்ட பேசினேன்.  அவர் இந்தியாவில். அதுவும் என்னை அவங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேக்கிறதுக்காக போன் செய்தேன்.

ஏன்னா நான் அவங்கள நேரில் பார்த்ததுகூடக் கிடையாது. ஆனால் என்னை அவர்கள் பார்த்திருப்பதாகவும், என்னைப் பற்றி அவங்களுக்கு தெரியும் என்பதையும் அறிந்திருந்தேன். 

இன்னும் 2 நாள்தான் இருக்கு, தப்பிக்கணும்னா தப்பிச்சுகோங்கன்னு சொன்னேன். !!! அவங்க ஒரே வார்த்தையில முடியாதுன்னு சொல்லிட்டாங்க.!!!

அப்பத்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச கலர் பிங்க். அதோட இப்ப கருப்பும் பிடிக்கும்னு சொன்னாங்க. !

 நானும் அவங்களுக்காக பரிதாபப்பட்டுக்கொண்டே ஒரு லைட் பிங் கலர்ல காஸ்ட்லி புடவைல கருப்பு பார்டர் போட்ட மாதிரி சூப்பர் சாரி ஒண்ணு எடுத்து அனுப்பினேன்.

ஒரு வருடம் கழித்து திருமணத்தில் நான் எடுத்த பட்டுப்புடவையை மாற்றுக்கு வைத்துவிட்டு பிங்க் புடவைதான் கட்டினார். அன்று விழுந்தவன் எழ மனமில்லாமல் கிடக்கிறேன் இன்னும்..

---- அஹா இந்த பிங்க் & கருப்புக் கலர் பின்னாடி ஒரு அழகான காதல் கதையே இருக்குதே. நெகிழ வைச்சுட்டீங்க நவாஸ். உங்களுக்கும் உங்க திருமதிக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் :)


4 கருத்துகள்:

  1. ரசித்தேன்... நவாஸ் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. சாட்டர்டே ஜாலி கார்னரில் நவாஸ் அவர்களின் பிங்கும் கருப்பும் அருமை...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நவாஸ் அவர்களின் பதில் எனக்கு பிடிச்சிருக்கு.
    உங்க பதிவும் எனக்கு பிடிச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபால் சகோ

    நன்றி குமார்

    நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...