எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 21 டிசம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர், ரவி தங்கதுரை வீட்டில் சக்தியா, சிவமா .. யார் ஆட்சி.

முகநூலில் ஜாலியாக நிலைத்தகவல்களைப் பகிர்வது சகோ ரவி தங்கதுரையின் வழக்கம். ஒரு புகைப்படமும் அதை ஒட்டிய கவிதை அல்லது நகைச்சுவையான பகிர்வு நம்மைப் புன்னகைக்க வைக்கும்.. பெண்களை அதிக அளவில் கிண்டல் செய்யும் பகிர்வுகள் அவருடையவை. அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி.

////உங்க வீட்ல சக்தியா சிவமா. யார் ஆட்சி. ?////

என்னோட வீட்ல சக்தியா சிவமா. யார் ஆட்சி. ?


எனக்கும் இந்த சந்தேகம் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.. தினமும் காலையில் எழுந்ததும் நான் கண் விழிப்பது அவள் முகத்தில்தான்.. (வேற வழி... என்னை எழுப்பதறதே அவள்தான்..!) 


தினமும் தான் பல் துலக்கி கொண்டு இருக்கிறோமே... இன்று ஒரு நாளாவது பல் துலக்காமல் இருக்கலாம் என்றால்... விட மாட்டாள்.. தொந்தரவு செய்து பல்லை பளிச்சிட (?!) செய்து விடுவாள்.. 

ஞாயிற்றுக் கிழமைக் கூட, பாவம் பரிதாபம் பார்க்காமல் குளிக்க உத்தரவு போட்டு விடுவாள்... அலுவலகம் செல்ல தயாராகும் போது விளக்குமாறுடன் வந்து வழி அனுப்புவதில் அவளுக்கு நிகர் அவளேதான்... அந்த விளக்குமாறிடமும் அவளிடமும் விடைப் பெற்றுக் கொண்டு அலுவலகம் வந்த ஓரிரு நிமிடங்களிலேயே என் அலைபேசி செல்லமாக சிணுங்கும்.. 

சிணுங்கும் அலைபேசியில் அவளிடமிருந்து கடுமையாக உத்தரவுகள் என் காதிற்கு சாமரம் வீச ஆரம்பித்து விடும்..(இன்னிக்கு பொண்ணுக்கு பணம் அனுப்பனும்..பையனுக்கு இந்த மாச பீஸ் கட்டனும். மறந்துடாதீங்க.. அப்படியே கொஞ்ச நேரமாவது வேலையை பாருங்க.... எப்போ பார்த்தாலும் பேஸ் புக்கிலேயே முழ்கி கிடக்காதீங்க...!)

மதியம் 2 மணியானால் மீண்டும் செல்பேசி சிணுங்கும்.. எடுத்தால் வழக்கமான பல்லவிதான்.. (இன்னும் சாப்பிடாமல் தான் இருப்பீங்க.. சீக்கிரம் சாப்பிடுங்க..ரொம்ப நேரமாச்சுனா சாதம் கேட்டு போய்டும்.. அப்புறம் என்னை திட்டக்கூடாது...!) 

மாலை 5 மணிக்கு மீண்டும் அழைப்பாள் .. ''வாக்கிங் போற நேரமாச்சு. இன்னும் கிளமபலையா..? வாக்கிங் போகும் போது ரோடை மட்டும் பாத்துட்டு போங்க..!'' 

இரவு 9 மணிக்கு ஆசையோடு அழைக்கும் செல்பேசியில் வருவாள்.. 'டைம் ஆச்சே... எப்போ வீட்டுக்கு வருவீங்க...?' ''இதோ 10 நிமிஷத்துல வந்துட்டேன் என்று வீட்டிற்கு போனால்.. வழக்கம் போல தூங்கி கொண்டு இருப்பாள்...(காலையில் 5 மணிக்கே எழுந்து விடுவதால் இரவு 9 மணிக்கு எல்லாம் தூங்க ஆரம்பித்து விடுவாள்..)

நான் வந்தது தெரிந்ததும் தன்னோட தூக்கத்தை கொஞ்ச நேரம் தள்ளி வைத்து விட்டு, அவசர அவசரமாக எழுந்து சாப்பாடு போட்டு விட்டு மீண்டும் தூங்க போய் விடுவாள்... 

இப்படி போய்க் கொண்டு இருக்கும் என்னோட வாழ்க்கையில, நீங்க கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று என் மனைவியிடம் தான் கேட்டுதான் சொல்ல வேண்டும்.. 

ஏனென்றால் இந்த மாதிரி கஷ்டமான கேள்விக்கெல்லாம் பதில் சொல்லலாமா.. வேண்டாமா..ன்னு அவள்தான் முடிவு செய்ய வேண்டும்.. ((நானாக ஏதாவது சொல்லப் போக....நமக்கு எதுக்கு வம்பு..?!)

-- ஹாஹா எத்தனை நாள்தான் நீங்க மத்தவங்களை கலாய்ப்பீங்க. உங்களை மாட்டி விடத்தான் அப்பிடி ஒரு கேள்வி கேட்டேன். இப்பவும் மாட்டினீங்களா இல்லையான்னு சரியா தெரியல. எதுக்கும் வீட்டம்மாவிடம் இந்த பதிவைக் காட்டி அபிப்ராயம் கேட்டு எழுதுனீங்கன்னா எங்க எல்லாருக்கும் நெம்ப சந்தோஷமா இருக்கும் ரவி.. :)

6 கருத்துகள்:

  1. நான்தான் ஏற்கனவே மாட்டிக்கொண்டு விட்டேனே..!

    பதிலளிநீக்கு
  2. நான்தான் ஏற்கனவே மாட்டிக்கொண்டு விட்டேனே..!

    பதிலளிநீக்கு
  3. நன்றி குமார்

    நன்றி திண்டுக்கல் தனபாலன் சகோ

    நன்றி பாஸ் ???!!!

    பதிலளிநீக்கு
  4. எங்க வீட்டுல சக்திதான்னு கடைசி வரைக்கும் சொல்ல மாட்டேங்கிறாரு. ஆனாலும் கட்டுரை வெளிப்படுத்திடுச்சு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...