****************
காய்கறிகளைக் கழுவும்
வீட்டுக்காரி கையிலிருந்து
விடுபட்டு செம்மண்ணில்
வீழ்கிறது பொடிக்கருணை.
ஆடிக்காற்றில்
மூடிவைத்ததுபோல்
வேர்பிடித்துக்
கிளைவிட்டு
எட்டிப் பார்க்கின்றன
சில இலைகள்.
தண்டு தடித்து
இலைகள் கைகள் போல
பெருகுகின்றன.
பூவில்லை,
காயில்லை,
கனியில்லை.
கார்த்திகைவரை
கழனித் தண்ணீரைக்
குடித்தபடி கிடந்தது.
வெற்று இலைகள் பார்த்து
வெகுண்ட வீட்டுக்காரி
மடியும் மஞ்சள் இலையோடு
கொத்தாய்ப் பிடித்து
வலுவோடு பிடுங்குகிறாள்.
கிளைகிளையாய்
கிழங்காய்ப் பல்கி
அவள் கைகொள்ளாமல்
கிடந்தது., கேட்காமலே
வீழ்ந்த கருணை.
அருமையான கவிதை, தேனம்மை.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நல்லாயிருக்கு தேனக்கா..
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
அருமையான கவிதை, தேனம்மை.
பதிலளிநீக்குநன்றி ராமலெக்ஷ்மி :)
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சகோ
நன்றி சாந்தி
நன்றி கோமதி மேடம்