எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 அக்டோபர், 2012

தொலைந்த ஒன்று

தொலைத்தது எங்கே
எனத் தெரியவில்லை
தேடுவது எங்கே எனவும்
பிடிபடாததாக.

இருட்டிலும் வெளிச்சத்திலும்
துழாவிக் கொண்டிருந்தேன்
தொலைத்த இடம் என
நம்பப்பட்ட இடத்தில்..

அது என்னுடையதாகத்தான்
இருந்ததாகத் தோன்றியது
வேறொன்றுடையதாகவும்
இருந்திருக்கலாம்.


என்னுடைய உணர்வில்
அது என்னுடையதாக மட்டும்.,,..
அதனுடைய் உணர்வில்
எப்படி என அறியமுடியவில்லை

வைத்திருந்த தடம்
உறுத்துகிறது அவ்வப்போது.
விட்டுவிட்ட தடமும்.

ஜந்துவும் ஜடமுமாய்
இல்லாமல் அது
முழு ஜீவனோடிருந்தது.

தொலைக்காமல்
இருந்திருந்தால்
தேடும் கஷ்டமும்
இருந்திருக்காது.

மோகம் அழியவும்.,
விரக்தி தொலையவும்.
ஞானம் முகிழ்க்கவும்
தொலைத்தது போதுமானதாயில்லை.

தொலைக்காமலே
இருந்திருக்கலாம்
எதற்கும் ஆகாமல் தொலைத்த
நான் என்ற அந்த ஒன்றை.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 12 செப்டம்பர் 2011 திண்ணையில் வெளியானது.


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...