எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 அக்டோபர், 2012

அளவுகோல்..

வெளியூர் சென்றுவந்தபின்
உறவினரைப் பார்த்துவந்தபின்
அலுவலகப்பெண்களைப் பார்க்கும்போதும்
அந்நியப்பெண்களைப் பார்க்கும்போதும்
அவர் கையில்
அளவுகோல் முளைத்துவிடுகிறது.

அதற்குள் அடங்கும்படி
அவர் அவளை வற்புறுத்துகிறார்.
உடலைக் குறுக்கி அவள்
நிற்பதை ரசித்தபடி அளக்கிறார்.
அடங்காமல் நீட்டி இருப்பதை
வலுவோடு அடக்க முயல்கிறார்.
அளவுக்கதிகமானவற்றை
வெட்டக்கூடத் தயங்குவதில்லை..
அவள் வலி தாளாமல் முனகினால்
எதிர்த்துப் பேசாதே என்கிறார்.
எல்லா அளவுகோல்களினாலும்
அவளை அளக்கும் அவர்
அவளுடைய அளவுகோலால் மட்டும்
கடைசிவரையிலும்
அவளை அளப்பதேயில்லை.

 டிஸ்கி:- இந்தக் கவிதை நவம்பர் 2011 சமுதாய நண்பனில் வெளிவந்தது.

8 கருத்துகள்:

  1. ஜூப்பரு தேனக்கா, அவள் கையிலிருக்கும் அளவுகோலால் அவரையும் அளக்க ஆரம்பித்தால் என்னாகும் என்பதை நிறையப்பேர் சிந்திப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சாரல்

    நன்றி குணா

    நன்றி தனபால்

    நன்றி மதுரை சரவணன்

    நன்றி அமல்ராஜ்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...