///எல்லாரும் எதிலிருந்தாவது விடுதலை பெறவேண்டும் என்னும் நினைப்பில் கொஞ்சமாவது ஆழ்ந்துதான்போகிறோம் என்பது
எனது கருத்து. சில தத்துவார்த்தமான பொழுதுகளில் துறவறச் சிந்தனை மேலோங்கி குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்வோமா
என்னும் நினைப்பு தோன்றுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன./// இது விடுதலை என்ற தலைப்பில் ஒரு போட்டிக்கு தேன்கூடு
.காமுக்கு அனுப்பச் சொன்னபோது நான் ஆசாத்ஜி எனக் குறிப்பிடும் திரு. அபுல் கலாம் ஆசாத் சொல்லியது.
என்னுடைய சகோதரனின் நண்பரான இவருக்கு நான் வலைத்தளம் ஆரம்பித்தவுடன் என் சகோதரன் என் அக்காவும் ப்லாக் எழுத ஆரம்பிச்சுட்டா. அதுல சிறப்பான ( அவனைப் பொறுத்த வரை) கவிதைகள் எழுதி இருக்கா என்று தன் நண்பர், அன்பர், அனைவருக்கும் அதை மெயிலில் அனுப்பி வைத்திருந்தான். அப்போது அவன் நண்பர்கள் பலரும் பாராட்டி இருக்க அபுல் கலாம் ஆசாத் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்ததோடு தன்னுடைய வலைப்பதிவையும் அனுப்பி இருந்தார். ( முக்கியமா நான் என் கவிதை ஒன்றில் பெரு நெருப்பு என்பதை பெருனெருப்பு என எழுதி இருந்ததைக் குறிப்பிட்டு இருந்தார். :)
வார்த்தைப் பிழைகள் என்பதையோ இலக்கணப் பிழைகள் என்பதையோ மன்னிக்க முடிந்ததில்லை இவரால். அதே சமயம் அங்கே நாங்கள் சென்றிருந்தபோது என் அம்மாவின் மரபுக் கவிதைகளைப் படித்துவிட்டு மிகவும் சிலாகித்துப் பாராட்டினார். (அட.. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டத்திற்காக நானும் பல நாளாகக் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் சரியா எழுதணும் போல தெரியுது..)
இவர் வலைத்தளம் சென்று படித்ததும் திகைத்து விட்டேன். இன்று வரை திகைப்பிலிருந்து மீளவில்லை. ஒரு போஸ்ட் போட்டால் அதில் எல்லா விவரங்களும் நுணுக்கங்களும் நிறைந்ததாக பூரணமானதாக இருக்கும் தளம் அவருடையது. அதில் பல விக்கிபீடியாவிலும் இடம் பெற்றுள்ளன. அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. எடுத்துக்காட்டாக கத்தி என்ற கட்டுரை பற்றி சொல்லலாம்.
இவர் வலைப்பதிவில் ராயர் கிளப், மரத்தடி . காம். பற்றி எல்லாம் சுவாரசியமாகவும், விவரமாகவும் பகிர்ந்திருப்பார். அமீரக வலைப்பதிவர்கள் பற்றிய அறிமுகங்கள் அருமை. இவருடைய வலைத்தளம் மூலம் அனைவரின் பரிச்சயமும் கிடைத்தது. ஆசிஃப் மீரான், ஜெசீலா, சுந்தர்ஜி, இன்னும் பலர்.
அமீரகம் சென்ற போது நான் இவரை சந்திக்க மிகவும் ஆசைப்பட்டேன். ஏனெனில் அவ்வளவு வலிமையான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். திரைச்சீலை என்ற கவிதைக் கதை போட்டிக்காக இவர் எழுதி இருந்ததைப் படித்தபோது நாமே திரைச்சீலையாகும் அதிசயம் நிகழ்ந்தது.
முதன் முதலில் கானா பற்றி புத்தகம் வெளியிட்டவர் இவரே. இவரது இரண்டாவது நூல் கஜல் பற்றியது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது, அரபி ஆகிய மொழிகளில் சரளமான பரிச்சயம் உண்டு. இவரின் பல இடுகைகளில் அது பற்றிய விவரணைகள் காணக் கிடைக்கும். ஹிந்திப் படப்பாடல்கள், கஜல் பாடல்களில் உருது அரபிச் சொற்கள் பற்றிய விளக்கங்கள் அதிகம் கிடைக்கும். நடிகை ரேகா பற்றியும் அதிகம் காணலாம். :)
சினிமாக்களில் சண்டைக்காட்சிகள் பற்றி உன்னிப்பாகப் பார்த்துப் பகிர்வார். சிலம்பம் பற்றி, கர்லாக்கட்டை சுற்றுதல் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார். முக்கியமாக எம்ஜியார் படத்தின் சண்டைக்காட்சிகள் பற்றி சொல்லலாம். சென்னையின் தெருக்கள் பற்றியும் விவரணைகள் கிடைக்கும்.
வண்டிகளுக்கு வெண்பா எழுதியிருக்கிறார். பைக், ஸ்பெலெண்டர், ஸ்கூட்டி, பெப், ஆகிய வண்டிகள் பற்றிய வெண்பா. மேலும் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இதிலெல்லாம் மரபுப் பாடல்கள். மேலும் தமிழ்ப்படங்கள் பற்றிய விமர்சனம், புத்தகங்கள் பற்றிய விமர்சனம் நிறைய எழுதி இருக்கிறார். நன்கு ஆழ்ந்து படிப்பவர்களுக்கான முழுமையான தளம் இது. பஷ்தூனியர்கள் பற்றிப் படித்துவிட்டு சிலாகிக்கத் தோன்றியது அடிமை இல்லாத வாழ்வு வாழ்ந்தவர்கள் என்று. இன்னும் பர்தா பற்றி கஜல், பற்றி கஜல் பாடகர்கள் பற்றி சிறப்பாக எழுதி இருக்கிறார். ( அக்பர் இலாஹி), ஒரு சிறுகதைக்குப் பரிசு கிடைத்திருக்கிறது.
தற்போது அதிகம் எழுதாத வலைப்பதிவர்களில் இவரும் ஒருவர். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பிருந்தே ( அப்போதெல்லாம் இப்போது இருப்பதுபோல ப்லாகில் இடுகையிடுவது எளிமையானதில்லை என்பதை அமீரகம் சென்றிந்தபோது விலாவாரியாகப் பகிர்ந்து கொண்டார்.) வலைத்தளத்தில் எழுதி வரும் இவர் இன்னும் தொடர்ந்து தன் எண்ணங்களைப் பகிரவேண்டுமென்பதே என் எண்ணம்.
ஆங் .. சொல்ல மறந்துட்டேன்.. திர்லிக்கேணி பிரியாணி, ஷார்ஜாவில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட ஏலக்காய் அதிகம் போட்டு செய்யப்பட்ட கோழிக்கறி பற்றிய இடுகை மற்றும் புத்தகத் திருவிழாக்கள், அமீரக ரோடுகள் பற்றிய படங்களை இவர் தளத்தில் மிஸ் பண்ணிடாதீங்க..
முக்கியமா இதுவும் கடந்து போகும் என்பது போல இவர் அடிக்கடி உபயோகித்திருக்கும் வார்த்தை.. சல்தா ஹை.. ஆமாம்.. அதையும் அடிக்கடி நீங்க கடப்பீங்க.. இந்தத் தளத்தில். ..

எனது இனிய நண்பர் ஆசாத்ஜீயைப் பற்றிய உங்களது இடுகையை வாசித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅவர் வலைத்தளத்தின் சுட்டி தந்தால் படித்து ரசிக்க வசதியாக இருக்கும்.
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு. சகோ. அபுல்கலாம் ஆசாத் குறித்து அறிந்துக் கொண்டேன். அவரின் வலைத்தளத்தின் சுட்டியை இட்டு இருந்தால் மேலும் பயன்மிக்கதாய் இருந்திருக்கும் அல்லவோ !
பதிலளிநீக்குநன்றிகள் .
Hussainamma avarudaiya blog id http://ennam.blogspot.com
பதிலளிநீக்குhttp://ennam.blogspot.in/
பதிலளிநீக்குஇனிய சகோதரி,
நன்றி.
அன்புடன்
ஆசாத்
நன்றி சேட்டைக்காரன்
பதிலளிநீக்குநன்றி ஹுசைனம்மா
நன்றி இக்பால் செல்வன்
நன்றி அபுல் கலாம் ஆசாத்ஜி.
அறிமுகத்துக்கு நன்றி.
பதிலளிநீக்கு