கோமாதாக்கள் கூட்டுறவு
சங்கங்களுக்கு பால் கறக்கின்றன.
கோவர்த்தனகிரிகள் கூறாகி
கிரைண்டர் கல்லும்., தரையுமாய்.
யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில்
கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு.
வெண்ணை தின்னும் ஒபீஸ்
கண்ணன்கள் கான்வெண்ட் பார்க்குகளில்
கோபர்களும் கோபிகைகளும்
கணினி மையங்களில் கருகும் கடலையில்.
கலியுகக் கண்ணன் முகநூல் ராதையுடன்
நட்புத் தேடி ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்டில்.
டிஸ்கி. 1. :- இந்தக் கவிதை செப்டம்பர் 2011 குங்குமத்தில் வெளியானது.
டிஸ்கி 2. :- இந்தக் கவிதை 12 செப்டம்பர் 2011 திண்ணையில் வெளியானது.
சங்கங்களுக்கு பால் கறக்கின்றன.
கோவர்த்தனகிரிகள் கூறாகி
கிரைண்டர் கல்லும்., தரையுமாய்.
யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில்
கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு.
வெண்ணை தின்னும் ஒபீஸ்
கண்ணன்கள் கான்வெண்ட் பார்க்குகளில்
கோபர்களும் கோபிகைகளும்
கணினி மையங்களில் கருகும் கடலையில்.
கலியுகக் கண்ணன் முகநூல் ராதையுடன்
நட்புத் தேடி ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்டில்.
டிஸ்கி. 1. :- இந்தக் கவிதை செப்டம்பர் 2011 குங்குமத்தில் வெளியானது.
டிஸ்கி 2. :- இந்தக் கவிதை 12 செப்டம்பர் 2011 திண்ணையில் வெளியானது.
அபாரமான கவிதை...!!
பதிலளிநீக்குகிரானைட் பிரச்னை வருவதற்கு முன்னரே எழுதியிருக்கிறீர்கள். அதுதான்..
கலைஞர்கள் , கவிஞர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறுகிறார்கள்.
நல்ல கவிதை...பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ஒவ்வொரு வரியும் வெவ்வேறு சிந்தனைகள்... அருமை...
பதிலளிநீக்குநன்றி சுரேகா.. உண்மை..:)
பதிலளிநீக்குநன்றி பிரியா
நன்றி தனபால்