எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 ஆகஸ்ட், 2011

வீடென்பது..

வீடென்பது...
********************
இறக்கைகள்
அடுக்கியபடி
எனக்கான பறவை
காத்திருந்தது..

நீல வானம்
மஞ்சள் வெய்யில்
அந்திச் சிவப்பு
மழை வானவில்


எல்லா இடமும்
என்னை தூக்கிச்
சென்றலைந்து
களிப்பாக்கியது..

தொடர்ந்த
சிறகடிப்பில்
தொய்ந்த அது
ஒற்றைக் கிளையில்
ஓய்ந்தமர்ந்தது..

கண் மலர்த்தி
கிடந்தபடியே
களைப்போடு
பார்த்தேன் ..அது
எனதான வீடு

எங்கு மலர்ந்தாலும்
இங்கு பூத்துக் கிடப்பது
இன்பமாய் இருந்தது..
இறக்கைக்கான
வேலையும்., தேவையும் இன்றி

டிஸ்கி:- 21.3.2011 உயிரோசையில் வெளிவந்தது.:)

18 கருத்துகள்:

  1. எங்கு மலர்ந்தாலும்
    இங்கு பூத்துக் கிடப்பது
    இன்பமாய் இருந்தது..

    அருமை

    பதிலளிநீக்கு
  2. வழமைபோலவே அருமையான கவிதை அக்கா

    பதிலளிநீக்கு
  3. //தொடர்ந்த
    சிறகடிப்பில்
    தொய்ந்த அது //

    //எங்கு மலர்ந்தாலும்
    இங்கு பூத்துக் கிடப்பது
    இன்பமாய் இருந்தது..
    இறக்கைக்கான
    வேலையும்., தேவையும் இன்றி//

    அருமையோ அருமையான கவிதை.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    பதிலளிநீக்கு
  4. கவிதை நன்றாகவுள்ளது

    உயிரோசையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான கவிதை ..
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. நன்றி சரவணன்., சாந்தி., கீதா., ரத்னவேல் ஐயா., அமல்ராஜ்., கோபால் சார்., குணா., ரமேஷ்., அரசன்.

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. //எங்கு மலர்ந்தாலும்
    இங்கு பூத்துக் கிடப்பது
    இன்பமாய் இருந்தது..//

    இந்த வரியை படித்ததும், சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல வருமா பாடல் ஞாபகத்துக்கு வந்தது. அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  9. எங்கு மலர்ந்தாலும்
    இங்கு பூத்துக் கிடப்பது
    இன்பமாய் இருந்தது..
    இறக்கைக்கான
    வேலையும்., தேவையும் இன்றி

    எனக்கான பறவை தொடர்ந்து சிறகடிக்கட்டும்.. இதே போல அழகாய்.. அருமையாய்.

    பதிலளிநீக்கு
  10. அழகு - அருமை. அக்கா, அசத்துறீங்க.

    பதிலளிநீக்கு
  11. அழகான கவிதை. வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  12. கவிதை...அழகு...வாழ்த்துக்கள்...
    என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  13. மனதை இதமாக வருடும் அற்புதமான கவிதை.அருமையான படைப்பு.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...