வீட்டில் பெண்களே சமைக்கிறார்கள்.. ஒரு மாறுதலுக்கு ஆண்கள் சமைத்தால் என்ன? வாயில் வைக்க முடியுமா என்கிறீர்களா.. இந்த ஷோவை பார்த்தா அப்பிடி சொல்ல மாட்டீங்க.. நீங்களும் சின்ன பொண்ணா இருந்தப்ப இப்படித்தானே நிறைய பொருளை கெடுத்து கத்துக்கிட்டு இருப்பீங்க.. உங்களை சொல்லச் சொன்னா லிஸ்ட் போட்டு கூட சொல்வீங்க.. உங்க மலரும் நினைவுகளை..
பொதுவா நான் ஆண்கள் கல்யாணக்கூடங்களில் சமைத்து பார்த்திருக்கிறேன். டி வி ஷோக்களில் கூட சமைத்துப் பார்த்திருக்கிறேன்.. சமைத்துப் பார் என புத்தகம் கூட எழுதி இருக்காங்க.. ஆண்கள்.. ஆனா சமையலை இஷ்டப்படியும் செய்யமுடியும்னு ஒரு ஷோ பார்த்தேன்.. நான் அதன் ரசிகை.. அதில் சமைப்பவர் சாதாரண ஆள் இல்லீங்க.. உலகளாவிய கராத்தே மாஸ்டர் ., சிறந்த ஓவியர் வில் வித்தை பயிற்சியாளர்., இசையார்வம் உள்ளவர்,, பன்முகத்திறமையாளர்., ஹூசைனிதான் அவர். எதையும் வித்யாசமா செய்யக்கூடியவர். இந்த ஷோவை அவர் நடத்தும் விதம் உங்களுக்கு எந்த மனநிலை இருந்தாலும் சிரிக்க வைத்துவிடும்.
ஒரு ப்ரெட்டை எடுத்து டோஸ்ட் போட சொல்லிக் கொடுப்பார்.. அது எப்பிடின்னா ஒரு பார் ப்ரெட்டை எடுத்து டேபிள்ல வச்சு டக்., டக்குன்னு வெட்டுவார்.. அதில் கடைசி துண்டுகள் கீழே விழும்.. அப்புறம் அடுப்பைப் பத்தவைக்காமல் தோசைக்கல்லை அதில் வைத்து ப்ரெட் இன்னும் வேகலையே., நாம அடுப்பையே பத்தவைக்கலை என்பார்.. அப்புறம் ஒரு ஷோவில் ஒரு சமையலுக்கு தண்ணீர் தேவைப்படும் . தண்ணீர் ஜாடி காலியாக இருக்கும். பக்கத்தில் ஒரு பைப் இருக்கும். அதை திருகி காண்பித்துவிட்டு இது செட் பைப் . தண்ணீர் வராது என்பார். பின் ஏதோ தண்ணீரை ஊத்தி சமைப்பார்.. இன்று காலை கூட ஒரு மாவை பிசைந்தார்.. பாருங்க.. பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.. என்னது சமைத்தது டேபிளுக்கு வந்துச்சான்னு கேக்குறீங்களா.. அது எதுக்கு .. இந்த சிரிப்பே ஒரு சந்தோஷ உணவுதானே..
அவரிடம் ஒரு பேட்டி எடுத்தேன் .. எப்பிடி உங்களுக்கு இப்படி ஒரு வித்யாசமான ஷோவை செய்யவேண்டும் என்று தோன்றியது என்று. அவர் சொன்னார்.. சன் டிவியில் ஒரு சமையல் ஷோ செய்ய வேண்டும் என அணுகினார்கள். எனக்கு ஆக்சுவலா கராத்தே தெரியும். பெயிண்டிங் தெரியும்.. ஆனா சமையல் தெரியாது. I DONT KNOW SAMAIYAL.
சன் டிவி ஆரம்பித்த பிரியட் ரமேஷ் பிரபா விஐபி கிச்சன் என்ற ஒரு ஷோவை நடத்த விரும்பினார். அதுக்காக பிரபல சினிமா ஹீரோக்களின் மனைவிகள் சமைக்கும் ஷோவும் அதில் (பெரிய பெரிய ஆக்டர்ஸ் )ஆண் ஹீரோக்களும் மனைவியுடன் சமைக்கும் ஷோவுக்கு( MALE VIP) அணுகினார்கள். அதுக்கு எந்த ஹீரோவும் ஒப்புக் கொள்ளவில்லை.. அதுனால என்கிட்ட வந்தாங்க..
நான் சொன்னேன் எனக்கும் சமைக்க தெரியாதேன்னு.. அதுக்கு நாங்க கத்துத்தரோம் அதப்பார்த்து நீங்க சமைங்கன்னு சொன்னாங்க. இது ஒரு அரைமணி நேர நிகழ்ச்சி. இத விஜயலெட்சுமி ரமேஷ் நடத்துனாங்க.. பாச்சிலர்ஸ் சமையல்னு பேரு. ஒரு நாள் ஒரு வெஜிடபிள் பர்கர் செய்து காண்பித்தேன்.. செய்து முடித்து டிஸ்ப்ளே செய்திருந்தேன்..

ஒரு முறை நான் காரில் செங்கல்பட்டு வழியாக செல்லும்போது ஒரு குரங்குக்குட்டி அடிபட்டு ரோட்டில் காயத்துடன் கிடந்தது.. அதை என்னுடன் எடுத்து வந்து சிகிச்சையளித்து என் வீட்டில் வளர்த்து வந்தேன்.. NAICHANCHIC னு பேரு .
சமைக்கும்போது எனக்கு என்ன பழக்கம் என்றால் நிறைய மிஸ்டேக்ஸ் செய்வேன்.. பேசிக்கிட்டே சமைப்பேன் . அப்புறம் எடுத்ததை எல்லாம் அதத்தூக்கி இங்க போட்டு இதத் தூக்கி அங்கே போடுவேன். சரியா வேக வைக்க மாட்டேன். இந்த வெஜிடபிள் பர்கர் செய்து முடித்ததும் என்ன ஆச்சுன்னா அதை நாம் சாப்பிட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லி ஷோவை முடிக்கணும். அப்ப நான் எடுத்து சாப்பிட்டு ,” சூப்பர்” அப்பிடின்னு சொன்னேன், சொன்ன மறு நிமிடம் அந்த குரங்குக்குட்டி வந்து என் கையில் இருந்த பர்கரை பறித்து தின்றுவிட்டு முகத்தை ஒரு மாதிரி அஷ்ட கோணலாக்கியது.. இஞ்சி தின்ன குரங்குன்னு கேள்விப்பட்டிருப்பீங்க அதை எல்லாரும் அன்னைக்கு பார்த்தோம். பர்கரை கையிலிருந்து தூக்கிப்போட்டுவிட்டு ஓடியது பாருங்கள்.. அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். காமிரா எல்லாவற்றையும் படம் பிடித்துக் கொண்டிருந்தது..
அது வித்யாசமா இருந்ததால் அதை அப்படியே டிவியில் ஒளிபரப்பினார்கள். அந்த ஒரு எபிசோடுக்கு மட்டும் ஒரே நாளில் 200 கடிதங்கள். திரும்ப ரீடெலிகாஸ்ட் பண்ண சொல்லி அதுக்கும் ரொம்ப ரெஸ்பான்ஸ்.

அப்புறம் அரைமணிநேரம் என்னால் தொடர்ந்து நேரம் ஒதுக்க முடியவில்லை. பேசிக்கலி எனக்கு கராத்தே., பெயிண்டிங்ஸில்தான் ஆர்வம் அதிகம். அதுக்கே நேரம் பத்தவில்லை. மேலும் கராத்தே ., பெயிண்டிங்க விட குக் என்ற பேர் பெரிசாயிருச்சு. எனவே நான் அதை ஸ்டாப் பண்ணேன். எனவே அந்த ஷோ நின்னு போச்சு..
அப்புறம் மெகா டிவியில் என்னை திரும்ப இந்த ஷோ பண்ணும்படி திருமதி தங்கபாலு கேட்டாங்க.. எனக்கு அரைமணி நேரம் ஒதுக்க முடியாததால ஷார்ட்டா பண்ணித்தரும்படி கேட்டாங்க.. 20 ஷோ.. 3 நிமிடம் வர்ற மாதிரி எடுப்பாங்க.. எனக்கும் கொஞ்ச நேரம் ஷூட்டிங்குக்கு ஒதுக்கினா போதும். எனவே ஒப்புக் கொண்டேன்.
இதப் பார்த்துட்டு நிறைய வீடுகள்ல பெண்கள் ஆண்கள் கிட்ட பாருங்க ஹுசைனியே சமைக்கிறார்.. நீங்களும் கத்துக்குங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. இந்த ஷோவை பெண்கள் ., ஆண்கள் என்ற வித்யாசமில்லாம அனைவரும் ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க..
ஆண்கள் சமைப்பது தப்பில்லைன்னு உணரனும்..

3 மாதமா ஒரு நாளைக்கு 3 ஷோ வருது காலையில 9 மணிக்கு., மதியம் 1 மணிக்கு., அப்புறம் மாலை 7 மணிக்குன்னு. இது ஃபன்னி ப்ரோக்ராம் . இதைப் போட்டு உடைப்பேன்., அதைப்போட்டு உடைப்பேன். முதல்ல எல்லாரும் க்ரிட்டிசைஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.. இப்ப எல்லாரும் ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அதுனால ரொம்ப பாப்புலர் ஆகிருச்சு இந்த நிகழ்ச்சி.
ரோடு நடுவில ஒரு ஞானியும் வருவான் ஒரு பைத்தியக்காரனும் வருவான். கிறுக்குத்தனமா ., பையித்தியக்காரத்தனமா செய்யிறத உடைக்கிறத ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க மக்கள்.. ஹுசைனி செய்யிற மாதிரி செய்ங்க அப்பின்னு வேற வீட்டுல சொல்ற அளவுக்கு ரெஃபரன்ஸ் ஆகிப்போச்சு அந்த ஷோ..
என்ன நல்லா சமைக்கக் கத்துக்கிட்டனான்னு கேக்கிறீங்களா.. நான் நல்லா சமைக்கக் கத்துகிட்டா அது சாதாரண விஷயம் ஆகிரும்.. அதுனால இதே அதிரடி சமையல்தான். ப்ராப்பரா சமைச்சு கொடுக்குறத விட இப்படி சிரிக்க வைக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு. சோ அதிரடி சரவெடிதான்.. என்ஜாய் பண்ணுங்க..

நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குoஒரு புக் விடறதில்லை போல.. ஹா ஹா உங்க கணவர் ஃபோன் நெம்பர் குடுங்க, போட்டுகுடுக்கறேன் ஹா ஹா
பதிலளிநீக்குஎன் மகன் (4 1/2 வயது) இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகன். அது என்னவோ அவன் எந்த சமையல் நிகழ்ச்சியையும் விடுவதில்லை (Cartoon நிகழ்ச்சிகளைக் கூட தியாகம்(!!!!) செய்வான்).
பதிலளிநீக்குநல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎங்க ஊர்ல ஒரு முக்கியமான தெரு முனையில் ஒரு சிலையின் முன் XXXX அலை என்று ஒன்று செய்தார் பாருங்கள். சிலை திறப்பு செய்த உடனேயே சிலையை மூடினார்கள். அந்த அலையை எடுத்து அழகான ஒரு அமைப்பினை அமைக்க. இவர் ஏன் தனக்கு தெரியாத விஷயங்களில் நுழைகிறார்?
பதிலளிநீக்குஅவரின் வேடிக்கையான சமையலைவிட அதை நீங்கள் எழுதியது இன்னும் சுவைபடவே நேரில் பார்த்தது போலவே திருப்தியாக உள்ளது. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.
ஹை..கோதைங்கறதும் நீங்கதானா?வெரி குட்.
பதிலளிநீக்குஹூசைன் சார் சமையலை குரங்கு தின்றுவிட்டு ஓடியதை படிக்கும் போதே சிரிப்பை அடக்க முடியவில்லை காணொளியில் பார்த்தவர்கள் கதி..கண்டிப்பாக வயிறு புண்ணாயிருக்கும்... அந்த சகலகலா வீரருக்கும், இந்த பகிர்வுக்கும் நன்றி சகோதரி
பதிலளிநீக்குநன்றி குமார்., சிபி., வேங்கடஸ்ரீனிவாசன்., ரத்னவேல் ஐயா., மாலதி., ரூஃபினா., கோபால் சார்., ஸாதிகா., மாய உலகம்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!