தீட்டு:-
***********
பாத்ரூம் போனால்
காவலாய் சத்தகம்..
படுக்கை பக்கம்
தடுப்பாய் உலக்கை..
தலைக்குக் குளித்தாலும்
மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி
தனித்தட்டு., தனி டம்ளர்..
தனி நாடு கேக்காத
எனக்குத் தனியிடம்..
துண்டு நிலம்...
தோல் தலையணை..
கிணறு வற்றிவிடும்..
செடி பட்டுவிடும்..
ஊறுகாய் கெட்டுவிடும்..
கருப்பை சூல் சுமக்க
மகரந்தம் பக்குவமாக்கும்
பருவத்தின் சுழற்சி இது..
சாமி படைத்த என்னை
மறைக்க சாமிக்கு
ஏன் திரைச்சீலை..
பின் குழந்தைகளோடு
இருக்கும் கடவுளர்கள் மட்டும்
எப்படி தீட்டுகளற்று...
*************************************************
மழை:-
**************
* பெயிண்ட் அடிப்பவனைப் போல்
ஈரவண்ணம் அடித்துக்
கொண்டிருந்தது மழை..
* மதியம் புகுந்து
மஞ்சள் வண்ணமடித்துக்
கொண்டிருந்தது வெய்யில்..
* இரண்டும் கோர்த்துப்
பாலமாக்கி ஏழுவர்ணம் அடித்துக்
கொண்டிருந்தது வானம்..
***************************************
மழை தொல்லை தாங்கலை
புலம்பிக் கொண்டிருந்தார்கள் இளைஞர்கள்
மெசேஜ் மழை பொழியும் காதலி பார்த்து..
************************************************
குடையோடு நடந்து
கொண்டிருந்தார்கள் மனிதர்கள்..
மழையும் நடந்து
கொண்டிருந்தது அவர்களோடு..
************************************************
பால்கனியிலிருந்து சிதறிய
அவள் கூந்தல் ரோஜாக்கள்
மழை நதியில் பாய்மரக் கப்பலாய்
மிதந்து வந்து கொண்டிருந்தது
என் வீடு நோக்கி..
********************************************
கல்யாண முருங்கை..
*********************************
கோலமாவில் தோய்ந்த முஷ்டிகளால்
உன் பாதங்கள் வரைகிறேன்..
சீடைகள் செய்யத் தெரியாததால்
வெண்ணை கடைந்து வைத்திருக்கிறேன்..
நீ பிடிப்பிடியாய் உண்ணும் அவலும் கூட..
விஷம் கக்கும் பூதனை ., காளிங்கன்
இல்லை இங்கு..
அன்பைக் கக்கும் நான் மட்டுமே..
வருடம் ஒரு முறை
வருகிறாய் வீட்டுக்குள்..
என் வயிற்றில் ஒரு முறையாவது வாயேன்..
உறை பனியிலிருந்து
குழாய் வழிப் பயணத்திலோ.,
தொட்டிலில் இருந்து தத்தாகவோ..
***************************************************
நசிகேதன் அக்னி:-
**************************
முன்னையிட்டதும்.,
பின்னையிட்டதும்.,
அன்னையிட்டதும்.,
என்னையிட்டதும்..
மண்ணில் பிறந்ததும்.,
மண்ணைப் பேர்த்ததும்.,
தீக்குள் நுழைந்ததும்.,
மண்ணில் புதைந்ததும்..
எந்தன் செயலல்ல..
மந்தன் செயலதோ..
சந்தேகங்களை
தேகம் சுமப்பதோ..
மண்ணை ஆளவும்.,
விண்ணை ஆளவும்..
அஸ்வமேத யாகப்
பெண் பொம்மை போதுமே..
உந்தன் யாகத்தீ..
என்னை ஆ(க்)கு தீ..
நீ நிறை சொர்க்கம் ஏக
நான் நசிகேதன் அக்னி..
டிஸ்கி 1. :- தீட்டு., மழை., கல்யாண முருங்கை., நசிகேதன் அக்னி என்ற நான்கு கவிதைகளும் டிசம்பர் 5., 2010 திண்ணையில் தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. நன்றி திண்ணை..:))
டிஸ்கி 2.:- தீட்டு என்ற கவிதை 6. 12. 2010 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிர்மை..:))
டிஸ்கி:- நசிகேதன் அக்னி., தீட்டு என்ற இரு கவிதைகளும் 10.12. 2010 வார்ப்பில் வெளிவந்துள்ளன.
***********
பாத்ரூம் போனால்
காவலாய் சத்தகம்..
படுக்கை பக்கம்
தடுப்பாய் உலக்கை..
தலைக்குக் குளித்தாலும்
மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி
தனித்தட்டு., தனி டம்ளர்..
தனி நாடு கேக்காத
எனக்குத் தனியிடம்..
துண்டு நிலம்...
தோல் தலையணை..
கிணறு வற்றிவிடும்..
செடி பட்டுவிடும்..
ஊறுகாய் கெட்டுவிடும்..
கருப்பை சூல் சுமக்க
மகரந்தம் பக்குவமாக்கும்
பருவத்தின் சுழற்சி இது..
சாமி படைத்த என்னை
மறைக்க சாமிக்கு
ஏன் திரைச்சீலை..
பின் குழந்தைகளோடு
இருக்கும் கடவுளர்கள் மட்டும்
எப்படி தீட்டுகளற்று...
*************************************************
மழை:-
**************
* பெயிண்ட் அடிப்பவனைப் போல்
ஈரவண்ணம் அடித்துக்
கொண்டிருந்தது மழை..
* மதியம் புகுந்து
மஞ்சள் வண்ணமடித்துக்
கொண்டிருந்தது வெய்யில்..
* இரண்டும் கோர்த்துப்
பாலமாக்கி ஏழுவர்ணம் அடித்துக்
கொண்டிருந்தது வானம்..
***************************************
மழை தொல்லை தாங்கலை
புலம்பிக் கொண்டிருந்தார்கள் இளைஞர்கள்
மெசேஜ் மழை பொழியும் காதலி பார்த்து..
************************************************
குடையோடு நடந்து
கொண்டிருந்தார்கள் மனிதர்கள்..
மழையும் நடந்து
கொண்டிருந்தது அவர்களோடு..
************************************************
பால்கனியிலிருந்து சிதறிய
அவள் கூந்தல் ரோஜாக்கள்
மழை நதியில் பாய்மரக் கப்பலாய்
மிதந்து வந்து கொண்டிருந்தது
என் வீடு நோக்கி..
********************************************
கல்யாண முருங்கை..
*********************************
கோலமாவில் தோய்ந்த முஷ்டிகளால்
உன் பாதங்கள் வரைகிறேன்..
சீடைகள் செய்யத் தெரியாததால்
வெண்ணை கடைந்து வைத்திருக்கிறேன்..
நீ பிடிப்பிடியாய் உண்ணும் அவலும் கூட..
விஷம் கக்கும் பூதனை ., காளிங்கன்
இல்லை இங்கு..
அன்பைக் கக்கும் நான் மட்டுமே..
வருடம் ஒரு முறை
வருகிறாய் வீட்டுக்குள்..
என் வயிற்றில் ஒரு முறையாவது வாயேன்..
உறை பனியிலிருந்து
குழாய் வழிப் பயணத்திலோ.,
தொட்டிலில் இருந்து தத்தாகவோ..
***************************************************
நசிகேதன் அக்னி:-
**************************
முன்னையிட்டதும்.,
பின்னையிட்டதும்.,
அன்னையிட்டதும்.,
என்னையிட்டதும்..
மண்ணில் பிறந்ததும்.,
மண்ணைப் பேர்த்ததும்.,
தீக்குள் நுழைந்ததும்.,
மண்ணில் புதைந்ததும்..
எந்தன் செயலல்ல..
மந்தன் செயலதோ..
சந்தேகங்களை
தேகம் சுமப்பதோ..
மண்ணை ஆளவும்.,
விண்ணை ஆளவும்..
அஸ்வமேத யாகப்
பெண் பொம்மை போதுமே..
உந்தன் யாகத்தீ..
என்னை ஆ(க்)கு தீ..
நீ நிறை சொர்க்கம் ஏக
நான் நசிகேதன் அக்னி..
டிஸ்கி 1. :- தீட்டு., மழை., கல்யாண முருங்கை., நசிகேதன் அக்னி என்ற நான்கு கவிதைகளும் டிசம்பர் 5., 2010 திண்ணையில் தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. நன்றி திண்ணை..:))
டிஸ்கி 2.:- தீட்டு என்ற கவிதை 6. 12. 2010 உயிரோசையில் வெளிவந்துள்ளது.. நன்றி உயிர்மை..:))
டிஸ்கி:- நசிகேதன் அக்னி., தீட்டு என்ற இரு கவிதைகளும் 10.12. 2010 வார்ப்பில் வெளிவந்துள்ளன.
மூன்றுமே அருமை அதுவும் அந்த தீட்டு கவிதையின் கரு வெகு நாட்களாய் என் மனதில் இருந்தது நீங்கள் அதை அழகாய் செதுக்கிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் தேனம்மை!!!
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை
பதிலளிநீக்குகவிதை அருமை அக்கா..
பதிலளிநீக்குவாசித்து வாசித்து சுவாசித்துச்செல்கிறேன்.. அசத்தலா இருக்கு :-)
பதிலளிநீக்குதிண்ணையிலேயே வாசித்தேன்.
பதிலளிநீக்குதீட்டு கவிதையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அக்கா, உங்கள் கவிதை களஞ்சியம் - ஒவ்வொரு நாளும் மெருகேறி கொண்டே வருகிறது. பாராட்டுக்கள், அக்கா!
பதிலளிநீக்குதீட்டு கவிதை....வாசித்து யோசித்தேன்.உண்மைதான்.
பதிலளிநீக்குமூடநம்பிக்கைகள் என்று சொன்னாலும் சாமியைச் சொல்லியே எங்களை வழிநடத்தியிருக்கிறார்கள் எம் முன்னோர்கள் !
//கருப்பை சூல் சுமக்க
பதிலளிநீக்குமகரந்தம் பக்குவமாக்கும்
பருவத்தின் சுழற்சி இது.//
//சாமி படைத்த என்னை
மறைக்க சாமிக்கு
ஏன் திரைச்சீலை..//
அருமைங்கம்மா பெண்மையின் உணர்வுகளை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
தொடரட்டும் உங்கள் பணி
//மழை தொல்லை தாங்கலை
பதிலளிநீக்குபுலம்பிக் கொண்டிருந்தார்கள் இளைஞர்கள்
மெசேஜ் மழை பொழியும் காதலி பார்த்து..//
//குடையோடு நடந்து
கொண்டிருந்தார்கள் மனிதர்கள்..
மழையும் நடந்து
கொண்டிருந்தது அவர்களோடு..//
சூப்பர் தொடருங்கள்......
பிரசுரங்களுக்கு பாராட்டுக்கள்..........
பதிலளிநீக்குவழக்கம் போல எல்லாமே அருமை
பதிலளிநீக்குஅசத்தல்
பதிலளிநீக்குஎல்லாமே ரொம்ப அருமையா இருக்கு அக்கா!
பதிலளிநீக்குகிணறு வற்றிவிடும்..
பதிலளிநீக்குசெடி பட்டுவிடும்..
ஊறுகாய் கெட்டுவிடும்..//
இதில கருவேப்பிலை செடி பக்கம் போகவே கூடாது.
இதுக்கெல்லாம் ஏதாவது scientific ரீசன் இருக்கலாமோ?
கவிதைகள் அருமை தேனம்மை. எங்க அம்மாவுடன் ஒரு பேட்டி போட்டு இருக்கிறேன். பாருங்கள் . u may like it
இப்போ எல்லாம் டபுள்ஷாட் ட்ரிபிள் ஷாட் தானா!!
பதிலளிநீக்குபின்னுறீங்க அக்கா.... மூன்றிலுமே உங்கள் கைவண்ணம் மின்னுகிறது...
"தீட்டு" தேனக்காவின் தேர்ந்தெடுத்த கவிதைகளில் இடம்பிடிக்கும் :-)
அத்தனையும் நன்று.
பதிலளிநீக்குகூட நடக்கும் மழை அழகு.
nice
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குதலைக்குக் குளித்தாலும்
மூன்றுநாள் தீண்டத்தகாதவளாகி
தனித்தட்டு., தனி டம்ளர்..
தனி நாடு கேக்காத
எனக்குத் தனியிடம்..
துண்டு நிலம்...
தோல் தலையணை..
கிணறு வற்றிவிடும்..
செடி பட்டுவிடும்..
ஊறுகாய் கெட்டுவிடும்..
// இந்தக்காலத்திலும் இப்படியா தேனம்மை?
அருமை
பதிலளிநீக்குமாதமும் விடாய்... இது பெண்
பதிலளிநீக்குமழையும் விடாய்... இது இயற்கை
மதமும் விடாய்... இது உலகம்
கவிதை அருமை அக்கா..
பதிலளிநீக்குஅனைத்தும் நன்று :)
பதிலளிநீக்குமழை நடந்தது... மிகவும் பிடிச்சுயிருந்தது... முதலும் கூட
பதிலளிநீக்குதீட்டு முற்போக்கு கவிதையாய் தீட்டியிறுக்கிரீர்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா
விஜய்
அனைத்தும் அருமை. திண்ணை, உயிரோசை என்று கலக்குகிறீர்கள்.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை.வாழ்த்துக்களும்
பதிலளிநீக்குநன்றி சக்தி., கார்த்திக்., வினோ., அமைதிச் சாரல்., ரமேஷ்., சித்து., ஹேமா., மாணவன்., வழிப்போக்கன்., கோபி., கண்ணன்., பாலாஜி., ரூஃபினா., பிரபு., ராமலெக்ஷ்மி., ராம்ஜி., ஸாதிகா.,சசிகுமார்., யுவா., குமார்., அஷோக்., விஜய்., ஸ்ரீராம்., செல்வராஜ்.
பதிலளிநீக்கு