நெல்லிமரத்துப் பிள்ளையாரப்பா.,பிள்ளையார்பட்டி பிள்ளையாரப்பா., குன்றக்குடி முருகா., ஊனையூர் கருப்பா., மாத்தூர் மகிழமரத்தடி முனிஸ்வரா.. ............. என்ன பார்க்குறீங்க.. எல்லா நல்ல கார்யம் ஆரம்பிக்கும் போதும் தெய்வத்துணையை நாடுவது நம்ம பழக்கமாச்சே..
நம்ம தமிழ் உதயமும்., தங்கமணியும் என்னை லாங் லாங் அகோ., சோ லாங் அகோ.... ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.. அதை முடிச்சே ஆகணும் .. ஏன்னா நம்ம ஸாதிகா அடுத்த கானாமிர்தம் பதிவுக்கு அழைச்சிட்டாங்க.. இப்ப அசைன்மெண்ட்ஸ் அதிகமா போச்சா.. முடிக்காட்டி டிஸொபிடியண்ட் ஆகிருவோம்.. சோ சுறுசுறுப்பு..
“எப்ப பார்த்தாலும் சிதர் தேங்காய் பெண்டிங்ல இருக்கு ” இது பிள்ளையார்..
“ரொம்ப சோம்பேறி ஆகிட்டே.. இந்த வருஷம் நடக்கலையா..” முருகன்..
“ முருகனுக்குன்னா முணுக்குன்னு ஓடிப் போய் முடி இறக்கிக்கிறே.. எத்தனை வருஷம் ஆச்சு முடி காணிக்கை செலுத்துறேன்னு.. பார்க்கக்கூட வர மாட்டேங்குறே..” பெருமாள்..
”பால்குடத்துக்கு வர்றேன்னு இந்த வருஷம் வரல..” இது காரைக்குடி முத்துமாரி..
இப்படிப் பல வேண்டுதல்களைப் பெண்டிங்க்ல வைக்கிறதே நம்ம பழக்கம்.. நம்மளைப் போயி கேட்டாங்களே எழுத சொல்லி.. அர்த்தமுள்ள இந்து மதம் மாதிரி 10 பதிப்பு போடலாம்.. அவ்வளவு உள்ள இருக்கு.. ( அடடா.. சும்மா சொன்னேன்.. ஓட வேண்டாம் மக்காஸ்.. இந்த இடுகையோட முடிச்சிருவேன்) .
”எப்பப் பாரு .. உன் பசங்க வண்டியை எடுத்தாலும் சரி.. வீட்டை விட்டு யார் காலடி எடுத்து வெளிய வைச்சாலும் சரி., நீ பூட்டிக்கிட்டு போனாலும் சரி .. எங்களை எல்லாம் காவலுக்கு கூப்பிட்டு தொல்லை பண்ணுறதே உன்னோட ரோதனையா போச்சு “ .. கிட்டத்தட்ட 25 சாமிகள் புகார்..
”அம்மா என்னது இது காலையில ., சாயங்காலத்துல விளக்கேத்தி ஒரு மணி நேரம் மொணமொணன்னு ஏதோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. அவருக்கே உங்க ஃபாஸ்டான பாட்டு ., ஸ்லோகம் எல்லாம் புரியலையாம்.. ஒரு வேளை திட்டுறீங்களா..”
பத்தும் பத்தாததுக்கு வேளாங்கண்ணி., நாகூர்., குருத்வாரா., லோட்டஸ் (பஹாய்) டெம்பிள் ., எல்லாம் போறது உண்டு..
மார்கழித்திங்கள்.. என்ற திருப்பாவையைக் கேட்டாலே வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களோடு கண்ணனும்., தலையில் கொண்டையோடும்., கரங்களில் மாலையோடும் ஆண்டாளும்., ( இளம் பருவத்தில் ஆண்டாளாகவே நினைத்த காலம் உண்டு.. ராமநாராயணன் தேனாண்டாள் ஃப்லிம்ஸ் என்று நிறுவனத்துக்கு பெயர் சூட்டி இருப்பது கூட பார்த்தவுடன் ஆச்சர்யமாக இருந்தது..) பித்தா பிறை சூடி என்ற திருவெம்பாவையைக் கேட்டாலே விரிசடை விபூதி தரித்த., புலித்தோல் பாம்பு., சூடி நெற்றிக் கண் எரிக்கும் சிவனும் .. இன்னும் ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு படர் நினைவுகளும் விரி நினைவுகளும் உண்டு..
பிறந்த இனம்., குடும்பம் கற்றுக் கொடுத்த பழக்கமும்., படித்த கல்விக்கூடமும் ( நற்கருணை வீரன்.. ) ., தோழியர் (சிராஜுதீன்) சொல்லும் சில குரான் வாக்கியங்களும்., செதுக்கி இருக்கிறது..
உருவ வழிபாடு., அருவ வழிபாடு என்பதெல்லாம் மீறி கடவுள் என்னைக் கடந்து உள் செல்பவராகவும்.., என்னுள்ளே உறைபவராகவும்., என்னை எடுத்துச் செல்பவராகவும்., என்னை மீறி எதுவும் நடக்கும் போது என் நம்பிக்கை ஒளியாகவும்., என் துக்கமெல்லாம் பகிரும் தோழனாகவும்., சந்தோஷத்தில் என் எல்லாமாகவும் இருக்கிறார்..
என் அறிவை மீறிய ஒரு பால்வீதிக்கு., அதன் ஆரம்பம்., முடிவுக்கு., என்னால் கடக்க முடியாத இன்னல்களின் போது., கடவுள் அல்லது ஒரு சக்தி இருப்பதை உணருகிறேன்.
நகரத்தார் இல்லங்களில் சாமி அறையில் ஒரு கண்ணாடி இருக்கும்.. அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் இருக்கிறது என்பதன் குறியீடாய்.. இறைவன் உள்ளே உறைகிறான் என்பதன் குறீயீடாய்..
வெற்றித் தெய்வம் கொற்றவை என் ஆதர்சம்.. தைர்யலெக்ஷ்மி..!!!
பூசை ., படைப்பு., பொங்கல் என்ற சமூகம் சார்ந்த விசேஷங்கள் போக., மாமனார் சிவ பூஜை செய்ததும்., அம்மா அப்பா திருவாசகம் முற்றோதல் (ஒரு நாள் முழுவதும்) தங்கள் குழுவோடு உலகம் பூரா சென்று ஓதுவதும் ., நகரச் சிவன் கோயில் என்றே எல்லா ஊர்களிலும் இருப்பதும்,., சிவனே ஜீவன்., சிவனற்றது சவம் என்ற நம்பிக்கை உண்டு..
ஆசாமிகளை ஒரு போதும் சாமிகளாக எண்ணத் தோன்றவில்லை.. ஒரு உறவினர் சொன்னதால் பத்தாவது அவதாரமாய் இந்துக்கள் கருதும் ஒரு ஆசிரமத்துக்கும்., அதன் ஒரு வகுப்புக்கும் சென்று வந்த அனுபவம் உண்டு.. ஆனால் ஏனோ எதன் மீதும் பிடிப்பு., நம்பிக்கை ஏற்படவில்லை..
”கடவுளே.. நீ என்னோடு எப்போதும் இருப்பதாக உணர்கிறேன்.. நான் செல்லும் பாதையில் இரண்டு காலடித்தடங்கள் பார்க்கிறேன்.. ஆனால் நான் நோயாலோ., மற்றவற்றாலோ துயருற்ற போது நான் ஒரு காலடித்தடத்தையே பார்க்கிறேன்.. அப்போது நீ என்னருகில் இல்லையா.. ” எனக் கேட்டால் அவர் சொன்னார்.. “ என் அன்பிற்குரியவளே.. நீ எப்போதெல்லாம் துயருருகிறாயோ அப்போதெல்லாம் உன்னால் நடக்கவே முடியவில்லை.. நான் தான் உன்னை சுமந்து சென்றேன்.. என் காலடித்தடம்தான் அது ..” என்றார்..
இதுதான் கடவுளும் நானும்...

/என் அன்பிற்குரியவளே.. நீ எப்போதெல்லாம் துயருருகிறாயோ அப்போதெல்லாம் உன்னால் நடக்கவே முடியவில்லை.. நான் தான் உன்னை சுமந்து சென்றேன்.. என் காலடித்தடம்தான் அது ..” என்றார்..//
பதிலளிநீக்குஅதுதான் உண்மை
"Footprints in the sand" - தத்துவம் சொல்லி நன்றாக இருக்கிறது, அக்கா.
பதிலளிநீக்கு//நான் தான் உன்னை சுமந்து சென்றேன்.. என் காலடித்தடம்தான் அது .."//
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு தேனம்மை.
//“ என் அன்பிற்குரியவளே.. நீ எப்போதெல்லாம் துயருருகிறாயோ அப்போதெல்லாம் உன்னால் நடக்கவே முடியவில்லை.. நான் தான் உன்னை சுமந்து சென்றேன்.. என் காலடித்தடம்தான் அது /
பதிலளிநீக்குகடவுளின் அருகான்மையை உணர முடிகிறது...
//தேனாண்டாள்//
பதிலளிநீக்குஅழகான தமிழ் வார்த்தை..
நல்ல பதிவு, நன்றிகள்..
அருமை. எவ்வளவு அழகாக முடித்துள்ளீர்கள்.
பதிலளிநீக்கு//இதுதான் கடவுளும் நானும்...
பதிலளிநீக்கு//
அருமை
finishing touch...சூப்பருங்க...
பதிலளிநீக்குகட்டுரை இலக்கியம் கைகூடி வந்துள்ளது..கலக்குங்கள் தேனம்மை..
பதிலளிநீக்கு“இது தான் கடவுளும் நானும்”
அருமையான் வாக்கியம் கவிதை மாதிரி
//“ என் அன்பிற்குரியவளே.. நீ எப்போதெல்லாம் துயருருகிறாயோ அப்போதெல்லாம் உன்னால் நடக்கவே முடியவில்லை.. நான் தான் உன்னை சுமந்து சென்றேன்.. என் காலடித்தடம்தான் அது //
பதிலளிநீக்குகடவுளின் அருகாமையை அழகாய் உணரவைக்கிறது அக்கா.
//அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் இருக்கிறது என்பதன் குறியீடாய்.. இறைவன் உள்ளே உறைகிறான் என்பதன் குறீயீடாய்..//
பதிலளிநீக்குஅருமை !
பகிர்வு அருமை தேனக்கா..
பதிலளிநீக்குகதையை உங்கள் எழுத்துக்களால் சுமந்து வந்த நீங்களும் உங்கள் கைரேகையைப் பதித்துச் சென்றிருக்கிறீர்கள்! :-)
பதிலளிநீக்குஅருமையான முடிவு.
பதிலளிநீக்குமுடித்த பந்தியே போதும் முழுப்பதிவுக்கும் !
பதிலளிநீக்கு“எப்ப பார்த்தாலும் சிதர் தேங்காய் பெண்டிங்ல இருக்கு ” இது பிள்ளையார்..
பதிலளிநீக்கு“ரொம்ப சோம்பேறி ஆகிட்டே.. இந்த வருஷம் நடக்கலையா..” முருகன்..
“ முருகனுக்குன்னா முணுக்குன்னு ஓடிப் போய் முடி இறக்கிக்கிறே.. எத்தனை வருஷம் ஆச்சு முடி காணிக்கை செலுத்துறேன்னு.. பார்க்கக்கூட வர மாட்டேங்குறே..” பெருமாள்..
”பால்குடத்துக்கு வர்றேன்னு இந்த வருஷம் வரல..” இது காரைக்குடி முத்துமாரி.."
அடக் கடவுளே!
நம்ம சாமிங்களும் நம்மளைப் போலத் தானா?
//எப்போதெல்லாம் துயருருகிறாயோ அப்போதெல்லாம் உன்னால் நடக்கவே முடியவில்லை.. நான் தான் உன்னை சுமந்து சென்றேன்.. //
பதிலளிநீக்குஅருமை!
//லாங் லாங் அகோ., சோ லாங் அகோ.... ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.. அதை முடிச்சே ஆகணும் .. ஏன்னா நம்ம ஸாதிகா அடுத்த கானாமிர்தம் பதிவுக்கு அழைச்சிட்டாங்க.. இப்ப அசைன்மெண்ட்ஸ் அதிகமா போச்சா.. முடிக்காட்டி டிஸொபிடியண்ட் ஆகிருவோம்.. சோ சுறுசுறுப்பு..///
பதிலளிநீக்குஅக்கா பதிவு சூப்பர்..
அதிலும்.. இந்த தொடர் பதிவு எப்படி சுறுசுறுப்பா எழுதொனும்னு சொன்னிங்க.. பாருங்க.. உண்மையில் செம..... ;-))
//எங்களை எல்லாம் காவலுக்கு கூப்பிட்டு தொல்லை பண்ணுறதே உன்னோட ரோதனையா போச்சு “ .. கிட்டத்தட்ட 25 சாமிகள் புகார்..//
பதிலளிநீக்குரொம்ப டைட் செக்யூரிட்டி போல!! ;-)))
உங்க கருத்தும், சொல்லியிருக்கும் விதமும் அருமை தேனக்கா.
மொத்தமும் அருமை.
பதிலளிநீக்கு'என்னை மீறி எதுவும் நடக்கும் போது என் நம்பிக்கை ஒளியாகவும்','என் காலடித்தடம்தான் அது' அசைக்க முடியாத உண்மை. மருமகளே
பதிலளிநீக்குபதிவு சூப்பர்.. thanks for writing...
பதிலளிநீக்கு//உருவ வழிபாடு., அருவ வழிபாடு என்பதெல்லாம் மீறி கடவுள் என்னைக் கடந்து உள் செல்பவராகவும்.., என்னுள்ளே உறைபவராகவும்., என்னை எடுத்துச் செல்பவராகவும்., என்னை மீறி எதுவும் நடக்கும் போது என் நம்பிக்கை ஒளியாகவும்., என் துக்கமெல்லாம் பகிரும் தோழனாகவும்., சந்தோஷத்தில் என் எல்லாமாகவும் இருக்கிறார்..//
பதிலளிநீக்குதேனக்கா,
இங்கே நானும் இருக்கிறேன்.
நானும் தான்.
பதிலளிநீக்குநன்றி கார்த்திக்., சித்து., ராமலெக்ஷ்மி., பாரதி., ரமேஷ்., டி வி ஆர்., கலாநேசன்., வெற்றி., குமார்.,வசந்த்., ஸ்டார்ஜன்., ப்ரபு., அக்பர்., ஹேமா., ஆர் ஆர் ஆர்., மோகன் ஜி., ஆனந்தி., ஹுசைனம்மா., ஸ்ரீராம்., ராமு மாமா., தங்கமணி., சத்ரியன்., ஆத்தா....
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
”கடவுளே.. நீ என்னோடு எப்போதும் இருப்பதாக உணர்கிறேன்.. நான் செல்லும் பாதையில் இரண்டு காலடித்தடங்கள் பார்க்கிறேன்.. ஆனால் நான் நோயாலோ., மற்றவற்றாலோ துயருற்ற போது நான் ஒரு காலடித்தடத்தையே பார்க்கிறேன்.. அப்போது நீ என்னருகில் இல்லையா.. ” எனக் கேட்டால் அவர் சொன்னார்.. “ என் அன்பிற்குரியவளே.. நீ எப்போதெல்லாம் துயருருகிறாயோ அப்போதெல்லாம் உன்னால் நடக்கவே முடியவில்லை.. நான் தான் உன்னை சுமந்து சென்றேன்.. என் காலடித்தடம்தான் அது ..” என்றார்...................................................................................................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பதிலளிநீக்குஅனுபவித்து படிக்க வேண்டிய முடிவுரை
என் அன்பிற்குரியவளே.. நீ எப்போதெல்லாம் துயருருகிறாயோ அப்போதெல்லாம் உன்னால் நடக்கவே முடியவில்லை.. நான் தான் உன்னை சுமந்து சென்றேன்.. என் காலடித்தடம்தான் அது ..” என்றார்..//
பதிலளிநீக்குfantastic