எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 14 செப்டம்பர், 2024

எனது படைப்புகள் பற்றி யுவகிருஷ்ணா & வல்லிம்மாவின் பார்வை 2015 இல்.

 சிவப்பு பட்டுக்கயிறு :- பொதுவாக யாரும் கையில் எடுக்காத நல்ல களம். சிறுகதையில் நிகழ்வுகள் present tenseல் அவசியம். இக்கதையில் பெரும்பாலும் past சம்பவங்கள். எழுத்தாளரின் எழுத்து வன்மை வெளிப்படுகிறதே தவிர, கதாபாத்திரத்தின் மனசு வாசகனுக்கு நேரடியாக கொண்டுச் செல்லப்படவில்லை என்பது இக்கதையின் பலவீனம்.


இரண்டு கோப்பை காபி :- முந்தைய கதையின் பலவீனம் இக்கதையில் இல்லை. பிரச்சினை என்னவென்றால் இக்கதையில் கதையென்று எதுவுமே இல்லை.

 கருணையாய் ஒரு வாழ்வு :- அருமையான வடிவ முயற்சி. யுவன் சந்திரசேகர் இம்மாதிரி கேள்வி நடையில் ஒரு நாவலே தற்போது எழுதியிருக்கிறார். ஆனால் இந்த கேள்வி-பதிலில் புத்திசாலித்தனம் மிளிர்கிறதே தவிர, இது சிறுகதையாக முழுமை பெறவில்லை.

கத்தி கப்பல் : - மிக நல்ல தீம். இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம். கதாபாத்திரங்கள் பேசுவதை காட்டிலும், கதையாசிரியர் நிரம்பப் பேசுகிறார். இது தவறல்ல. ஆனாலும் வெகுஜன ரசனையில் கதைமாந்தர்கள் ஊடாக கதாசிரியர் பேசும் கதைகளே அதிகம் பெயர் பெறும்.

பட்டாம் பூச்சிகளும் பூக்களும் :- இந்த கதையில் உருவகங்கள் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் குமுதத்தின் ஒரு பக்க கதை அளவே இருக்கும் கதையை பிடித்து இழுத்தி பெருசாக்கியிருப்பது போன்ற உணர்வு.

செம்மாதுளை சாறு :- வசனங்களே இல்லாமல் எப்படி உங்களால் கதை எழுத முடிகிறது?

நான் மிஸ்டர் எக்ஸ் :- நன்றாக இருக்கிறது. ஆனால் கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறீர்கள். ரீ-எடிட் செய்தால்தான் சரிவரும்.

கல்யாண முருங்கை :- ஏனோ தெரியவில்லை. பிரபஞ்சனின் ‘பிரும்மம்’ கதை நினைவுக்கு வருகிறது. ஏற்கனவே முந்தைய கதைகளுக்கு சொன்ன விமர்சனம்தான். கதாபாத்திரங்கள் பேசுவதேயில்லை. கதையாசிரியர்தான் பேசுகிறார்.

சொர்க்கத்தின் எல்லை நகரம் :- விவரணைகள் நன்று. ஆனால் இதில் கதை எங்கேவென்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

அப்பத்தாள் : கதை நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கூர்மையாக எடிட் செய்யலாம். நீளம் பிரச்சினை.

அடையாளம் :- மன்னிக்கவும். இதுவும் கதையாக தேறவில்லை.

ரக்‌ஷா பந்தன் :- ஓக்கே

பிள்ளை கறி :- முடிவு நன்றாக இருக்கிறது. நடை ரொம்ப பழச

எரு முட்டை :- கட்டுரை மாதிரி இருக்கிறது. கதையாக வரவில்லை.

தீப லெட்சுமி : இதுவும் கட்டுரைதான். கதை இல்லை.

ஒட்டுமொத்தமாக சொன்னால், இந்த தொகுப்பை பதிப்பிப்பதற்கு நீங்கள் நிறைய யோசிக்க வேண்டும். இந்த கதைகளை மீண்டும் மீண்டும் திருத்தி சிறப்பாக மெருகேற்றினால் ஓக்கே. இப்படியே அச்சுக்கு கொண்டுவந்தால் ரொம்ப சுமாராகதான் இருக்கும். கறாரான விமர்சனத்துக்கு மன்னிக்கவும். அன்புடன் யுவகிருஷ்ணா

******************

ஆமாம். தேன். வேலைக்குப் போகாட்டா  என்ன கண்ணா. உன் அருமை எல்லோருக்கும் தெரியும்.  இப்பொழுது எழுதும் எழுத்து ஒரு வேலை இல்லையா. இத்தனை பேரைக் கட்டியாளுவது ஒரு திறமை இல்லையா.         தேனுவுக்கு ஒரு குறையும் இல்லை. நிறைகுடமே. குடும்பமும் ஒரு வேலைதான். அதைப் பேணிப் பாதுகாத்து நிறைவு காணுவது வேலைதான். எல்லாக் கதையையும் படித்துவிட்டேன். ஒவ்வொன்றாக அலசி எழுதுகிறேன்.     மனதை உலுக்கும் நடை உங்களது. சரண்யா அரவிந்தன்.நந்தினி டாக்டர்,விபூதி படைக்கும் தந்தை எவனோட குழந்தையையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொள்ளும் அழகு, சிதறுண்ட மனம் ராதாக் குட்டி,  வேலை செய்து பிழைத்து அடிவாங்கியும் துளி சந்தோஷப் படும் குட்டி, ரக்ஷா பந்தனால் இணைந்த ஹரீஷ்  எல்லோரும் வளைய வந்து கொண்டிருக்கிறார்கள் மனதில்.

நன்றி யுவா & வல்லிம்மா. இது 2015 இல் . இப்போது என் எழுத்து எப்படி என்று சொல்ல வேண்டும். :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...