எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

சோகி சிவா சொல்வழக்கு - 9.

 15.

ஆத்து ஆத்துப் போய் - அழுது அழுது மனம் இற்றுப் போய்

தூக்குச் சட்டி - சொருகு சட்டி, தூக்குப் பாத்திரம்.

கசாப்புக் கொழம்பு - மட்டன் குழம்பு.

மொளக்கமாத்துக் குச்சி - விளக்குமாற்றுக் குச்சி, பெருக்குமாறு, துடைப்பக் குச்சி.

துண்ணூத்து மடல் - திருநீற்று மடல், விபூதி கொட்டிவைக்கும் மரத்தாலான மடல்.

அரச விட்டு - ஆண்பிள்ளையை அரசு என்பார்கள்.

 

16.

ஒக்கிட - ரிப்பேர் செய்ய ,பழுது நீக்க, சரி செய்ய., மராமத்து செய்தல்

காரை பூசுதல் - அந்தக்காலத்தில் முட்டை வெண்கரு, கருப்பட்டி, சிப்பி எல்லாம் சேர்த்து அரைத்துச் சுவர் பூசுவார்கள்.

மராமத்து - ரிப்பேர் செய்து பராமரித்தல்

ஈவுச்சுக்குவோம் - பிரிச்சுக்குவோம். செலவைப் பங்கிட்டுக் கொள்வோம்.

பூச்சி பொட்டுக்கள் - வண்டு தேனீ குளவி  பாம்பு பூரான் போன்ற பூச்சிகள்

நடையன் - செருப்பு

முழுக்குத் துணி - தீட்டுக் காலங்களில் உடுத்தி இருக்கும் துணி.

சுண்டக் கொழம்பு - சுண்ட வைத்த பழங்குழம்பு.

குடிவண்ணார் கூலி - வருடா வருடம் சலவைத்தொழிலாளிகளுக்கு வழங்கும் ஆண்டுக் கூலி.

தீட்டுத் துணி - இரத்தப் போக்கின் போது பெண்கள் பயன்படுத்தும் துணி.

தேங்கொழல் - தேன் குழல், முறுக்குப் போல சுடும் பலகாரம்.

துத்தநாகத் தகரம் - சிங்க் எனப்படும் மூடி போட்ட தாமிரத் தகர டின்.

ஒறை ஊத்திப்பிட்டு - தயிராக உறை ஊற்றுதல்.

மேரி ரொட்டி - மேரி பிஸ்கட்

மே வீடு - மாடி, மேல் வீடு, மச்சு,

டைவர் - ட்ரைவர்.

விபூதி பூசிக் கும்பிடுதல் - சாதம் வடித்தவுடன் நிமிர்த்தி வைத்து விபூதியைக் குழைத்து மூன்று பக்கமும் பூசி அன்னத்தை சிவனாக வணங்குதல் மரபு.

கட்டுத்துறை - மாடு கன்னுகள் கட்டிக் கிடக்கும் இடம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...