ஒக்கூரில் இருக்கும் ஸ்ரீ சசிவர்ண விநாயகர் திருக்கோயிலிலேயே சிவன் பார்வதியும் இருப்பதால் ஊரின் நகரச்சிவன் கோவிலும் இதுதான். கிட்டத்தட்ட 328 ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் இது.
மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கிழக்குப் பார்த்து அமைந்த கோவில் இது.இவருடைய இக்கோயில் குடமுழுக்கு விழா மலரில் நானும் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். ஆகையால் இவரைப் பார்க்க விழைந்தேன்.
விநாயகருக்கு முன்னே ஒரு கொடிமரம்.
நான் பார்த்த விநாயகர் கோவில்களிலேயே மிகப் பெரிய கோயில் இதுதான்.
வசந்த மண்டபம் என்னும் சுற்றுப் பிரகாரத்தில் பைரவர் திருக்காட்சி.
சுற்றுப் பிரகாரத்தில் கெஜலெட்சுமிஅடுத்து சிவனும் அம்பாளும் அதன் பின் சுப்ரமணியர் வள்ளி தெய்வானை சந்நிதி.
இக்கோயின் விசேஷம் அதில் உள்ள ஓவியங்கள்.
விநாயகரைப் பூஜிக்கும் பக்தர்களும் ஓவியமாகி இருக்கிறார்கள்.
எழிலுடன் காட்சி அளித்த நவக்ரஹ நாயகர்கள்.
சிவன் சந்நிதியின் எதிரே நந்தி.முற்றோதல் முடிந்து சிவனுக்குத் தீபம் ஆச்சு.
திருவாசக புத்தகங்கள். மலர் தூவி வழிபாடு. விளக்குகளால் ஆன சிவன். விடையேறு பாகனும் விசாலாக்ஷியும் ஒரு பொன்னூஞ்சலில் விநாயகனும் இன்னொரு பொன்னூஞ்சலில். வேலன் படி அரிசியில் வேலாக வைக்கப்பட்டுள்ளான். திருப்பொன்னூஞ்சல் பாடும்போது ஆட்டிப் பாடுவது வழக்கம்.
இதிகாச புராணங்கள் எல்லாம் ஓவியமாக அழகுற வரையப்பட்டுள்ளன. தந்தையும் தனயனும் கைலாயலும் கங்கையும்.
ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர். இருபக்கமும் சாமரம் வீசும் பெண்கள்.
தன் தம்பி முருகன் வள்ளியை மணம் முடிக்க யானையாகத் தோன்றிய விநாயகப் பெருமான்.
வேத வியாசர் கூறக் கொம்பை ஒடித்து மகாபாரதம் எழுதியது மேலே ஓவியமாக உள்ளது.
கஜலெக்ஷ்மிக்கு முன் கன்னிமூல விநாயகர்.
காசி விசுவநாதர் விசாலாக்ஷி சந்நிதி. முற்றோதல் முடிந்து தீபாராதனை.
எழில்மிகு சசிவர்ணரின் கருவறைத் தரிசனம்.
ஸ்ரீ விநாயகர், அகஸ்தியர், காவிரி.
நாரதர் அளித்த மாங்கனியை அம்மையப்பனைச் சுற்றி வந்து பெற்ற விநாயகர்.
செல்வவளம் நல்கும் ஸ்ரீ லெக்ஷ்மி கணபதி.
கோயிலின் உள்ளே ஜொலிக்கும் துவஜஸ்தம்பம்.சந்திரன் சந்நிதி
சூரியன் சந்நிதி.
சோபன மண்டபத்தின் விதானத்தில் சசிவர்ண விநாயகர். அங்கே புளிசாதமும் பிரசாதங்களும் கொடுத்தார்கள். மேலும் ஒக்கூர் நகரத்தார் பக்கத்தில் உள்ள உணவகத்தில் அருமையான மதியச் சாப்பாடு அளித்தார்கள். காரைக்குடியில் இருந்து வந்துள்ளோம் என்று தெரிந்ததும் காளாஞ்சி கொடுத்துக் கௌரவித்தார்கள். வாழ்க ஒக்கூர் நகரத்தார் ! வளர்க சசிவர்ண விநாயகரின் புகழ் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)