ஒவ்வொரு நூல் வெளியீட்டின் போதும் எத்தனையோ பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சிவப்புப் பட்டுக்கயிறுநூலைச் செம்மையாகக் கொண்டு வந்த சகோதரர் டிஸ்கவரி புக்பேலஸ் அதிபர் வேடியப்பனுக்கும் இந்நூலைச் செம்மையாகச் சீர்திருத்தித் தந்த திரு. கிருஷ்ணப்ரபுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
புத்தகக் கண்காட்சியில் இந்நூலை வெளியிட்டுப் பத்துப் பிரதிகள் வாங்கிய நண்பர் இளங்கோவுக்கும் தங்கை கீதாவுக்கும் மனமார்ந்த பிரியங்கள். முதலில் 200 பிரதிகள் அச்சடித்து அடுத்தும் 200 பிரதிகள் அச்சடித்ததாகக் கூறினார் வேடியப்பன். என் உறவினர்களும் நண்பர்களும் கூட இந்நூலைத்தான் என் முகவரியாகக் கூறுகின்றார்கள். :) ராசியான கரங்களுக்குச் சொந்தக்காரரான இளங்கோ மச்சிக்கும் கீத்ஸுக்கும் நன்றி.
தோழி கீதா வெளியிட முதல் பிரதி பெற்றுக் கொண்டவர் அன்புத்தங்கை புவனா. இரண்டாம் பிரதியை நண்பர் இளங்கோவிடமிருந்து நண்பர் செல்வா பெற்றுக் கொள்கிறார்.அங்கே வந்து ஒரு பிரதி வாங்கி என் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டார் முகநூல் நண்பர் நண்பர் வெங்கட்.
புத்தக வெளியீட்டாளர் வேடியப்பன் ஏதோ சொல்ல அனைவரும் புன்னகைக்கிறோம். அங்கேயே பிரித்துப் படிக்கிறார் நண்பர் இளங்கோ.
இந்தப் புத்தகவெளியீட்டைக் கௌரவப்படுத்திய இன்னொரு முக்கிய பிரமுகர் நம்ம சூரியாசிவா (என்னும் சுப்புத்தாத்தா.) சார். கால் டாக்ஸி புக் செய்து சரியான நேரத்துக்கு வந்திருந்தார். பரபரப்பில் அவருக்கு ஒரு புத்தகம் கொடுக்க மறந்துபோய்விட்டது.
இளைய தோழிகள் கமலியும் நாச்சியாள் சுகந்தியும்.
ஒரு செல்ஃபி :)
நட்புகள் - இளங்கோ, கீதா, லதா, பாரு, புவனா, இளமதி, உமா, சுப்பு சார், நான், எனது கணவர் லெக்ஷ்மணன் அவர்கள், செல்வா.
அதே நேரத்தில் அங்கே வந்த நமது நண்பர் விஜய் மகேந்திரன் இன்னொருமுறை நூல் வெளியீடு செய்ய தோழிகள் உமா மோகனும், கவிதா ரவீந்திரனும், லதா அருணாச்சலமும் பெற்று கௌரவித்தார்கள்.
இந்தப் புகைப்படத்தையே தோழி கவிதா ரவீந்திரன் தன் முகநூலில் முகப்புப் படமாக நான்கு ஆண்டுகளாக வைத்துள்ளது மனதுக்கு மகிழ்வளித்த விஷயம்.
11, 2016 அன்று புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியீடும், ஜூலை 14 அன்று டிஸ்கவரியில் நூல் அறிமுகக் கூட்டமும் நடைபெற்றது.
அழகான புன்னகையுடன் என்றும் என் துணை நிற்கும் எனது கணவர் திரு. லெக்ஷ்மணன் அவர்கள்.
அறிமுக உரை.
இன்னும் சிலரையும் நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏனெனில் இவர்களும் என்றும் என் உடன் நிற்பவர்களே. சாஸ்த்ரிபவன் யூனியன் லீடர் மணிமேகலை அவர்கள், அன்புத்தங்கை கயல், மதிப்பிற்குரிய இளங்கோ சார், பத்மா மேம் இவர்களுடன் கோகுலம் ஆசிரியர் லதானந்த் சார்.
மணிமேகலை மேடத்தின் உரை.
இளங்கோ சாரின் உரை
லதானந்த் சாரின் உரை.வெளியீட்டாளர், பதிப்பாளர் வேடியப்பனின் முன்னுரை.
கலந்துகொண்டு சிறப்பித்த கண்மணிகள் லெக்ஷ்மி, மணி மேம், கயல், பாரு, புவனா, இளமதி, பத்மா மேம்.
கயலின் கணவர் மோகன் அவர்கள்.
ஏற்புரை
நன்றியுரை.
பதிப்பாளரைக் கௌரவித்த சிறப்பு விருந்தினர் மணிமேகலை மேடம்.
புத்தகம் வெளியிட்ட எங்களுக்கும் ஒரு பொன்னாடை.
சொல்ல மறந்துவிட்டேன். இந்த நூல் அறிமுகமும் வெளியீடு போல நடைபெற்றது. எனது மதிப்பிற்குரிய மாமா திரு நாகப்பன் அவர்கள் வெளியிட பத்மா மேம் பெற்றுக் கொண்டார்கள்
மணிமேம் வெளியிட தங்கை லெக்ஷ்மி பெற்றுக் கொண்டாள்.
வந்திருந்து வாழ்த்தி வெளியிட்ட அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி. இனியும் நாவல், சிறுகதைத் தொகுப்பு எல்லாம் ரெடி. ஆனால் என்று கொரோனா காலம் முடிந்து நிலைமை சீராகும். புத்தகத் திருவிழா எல்லாம் நடக்கும் எனத் தெரியவில்லை. எனவே புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு மகிழ்கிறேன்.
வாழ்த்துகளும் பாராட்டுகளும் - இன்னும் பல நூல்கள் வெளிவரட்டும்!
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!