அரும்பாக்கம் மிடில் ஸ்கூலில் அம்பேத்கார் பிறந்தநாளில் உரையாற்ற தோழி மணிமேகலை அழைப்பு விடுத்திருந்தார். இவர் சாஸ்திரிபவன் பெண்கள் & தலித் பெண்கள் நலச் சங்கத் தலைவி. பொதுத்தொண்டில் ஈடுபாடு உள்ள இவர் பள்ளிகளுக்குத் தேவையான உதவிகள் செய்து வருகிறார். கோடைகாலங்களில் பறவைகளுக்கு நீரும் உணவும் அளிக்கும் திட்டத்தைப் பள்ளி கல்லூரிகளில் செயல்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சாஸ்த்ரி பவனில் அம்பேத்கார் சிலை அமையப் பெரும்பாடு பட்டு அதை நிகழ்த்தியும் உள்ளார். பெண்கள் உடல் மன நலன்களுக்காகப் பல்வேறு பெண் பிரபலங்களை சாஸ்திரி பவனில் உரையாற்ற அழைத்துள்ளார். உடல் நலனுக்குப் பல்வேறு முகாம்களும் ஏற்படுத்தி எல்லாப் பெண்களுக்கும் உற்ற தோழியாக விளங்கி வருகிறார். பெயரைப் போலவே பொதுமக்கள் தொண்டாற்றிவரும் அவர் வாழ்க பல்லாண்டு. வாழ்க அவர்தம் புகழ்.
அரும்பாக்கம் பள்ளியில் கலந்து கொண்டது பற்றி முன்பே எழுதி உள்ளேன்.விழா ஆரம்பம்.
திருமதி மணிமேகலை உரை.
குழந்தைகள் நிகழ்த்திய விழிப்புணர்வு நாடகம். ( தொலைக்காட்சி நாடகம் பற்றிய விழிப்புணர்வு )
ஒவ்வொரு ஆசிரியையும் தம் மாணாக்கருக்கு ஒரு ரோல் மாடல் போல. பல்வேறு ஆசிரியப் பெருந்தகைகளை முகநூல் முழுவதும் தற்போது ( ருக்கு ஜெய், சரஸ்வதி காயத்ரி, பரமேஸ்வரி, கலைவாணி, உமா மகேஸ்வரி, தென்றல் சாய், லெக்ஷ்மி, ஸ்வேதா, ஜோதி ) பார்த்து வியந்து வருகிறேன்.
மாணாக்கருக்குக் கல்வியின் அவசியம் பற்றியும் அம்பேத்கார் பற்றியும் கூறினேன்.
தலைமை ஆசிரியை எனக்குப் பொன்னாடை அணிவிக்க அவர்களின் தன்னலம் கருதா சேவை மனப்பான்மை பற்றிப் பாராட்டி நானும் அவருக்கு அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாகப் பொன்னாடை போர்த்தினேன்.
தலைமை ஆசிரியை லூர்து ராணி பல்வேறு உடல்நலக் குறைவுகளால் அவதியுற்று ஹாஸ்பிட்டலைஸ் ஆனபோதும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்துள்ளார். ஆசிரியர் தினத்தில் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றுள்ளார். இன்னும் பல்வேறு விருதுகளும் சிறப்புகளும் பெற்றுள்ளார்.
அட்சயா ஃபவுண்டேஷனை திருமதி மணிமேகலை நடத்தி வருகிறார். இதன்மூலம் சென்னையில் பல பள்ளிகளில் மாணாக்கருக்குப் போட்டிகள் வைத்துப் பரிசு வழங்கி வருகிறார். பள்ளிக்குத் தேவையான சீரமைப்பு வேலைகளையும் தன் அமைப்பின் மூலம் பெற்றுத் தருகிறார். வாழ்க தலைமை ஆசிரியை லூர்து ராணியின் தொண்டும் மணிமேகலை அவர்களின் தொண்டும்.
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி... வாழ்த்துகள் சகோதரி...
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!