கயலுடன் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எடுத்த ஃபோட்டோக்கள் இருக்கு. சுமார்100க்கு மேல் தேறும். அவற்றில் சிலதை மட்டும் இங்கே பகிர்கிறேன் :)
இது கயல் பிறந்தநாளின் போது எடுத்தது. லாமிக்கிளில்தான். நிறைய பிரபலங்கள் இருக்காங்க. யார்னு சொல்லுங்க பார்ப்போம் :)டாக்டர் காயத்ரி, மில்லர்,ஹுசைனி .
அப்போதே தனித்திரியில் என் அட்ரஸ் கேட்டுக் காலையில் என் வீட்டுக்கே வந்துவிட்டாள் கயல் என்னைப் பார்க்க. மறக்கமுடியாத நாள். :) 13. 5. 2020.
அன்பு அணைப்போடு( நடனமாடும் பெண் சிலை ஒன்று) அன்புப் பரிசும் :)
அதே க்ரீமி இன்னில் வசுவுடனும் கயலுடனும் :)
2016 இல் என் பிறந்தநாளை நம்மவீடு வஸந்தபவனில் கொண்டாடியபோது :)
செல்வா கொண்டுவந்த கேக் :)
விளையாட்டாய் ஒரு ஷாட் :)
அன்றுமுதல் இன்றுவரை பிரியாதிருக்கிறோம். உணர்வால் எண்ணங்களால்.
இது 2016 இல் கே கே நகர் க்ரீமி இன்னில் :) இன்னும் நிறையப் புகைப்படங்கள் இருக்கு. அதுவும் கயலுடனும் வசுவுடனும் அநேக புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டதாக இருக்கும். கயலுடன் நிறையப் பள்ளிகளுக்குப் பேசவும் போயிருக்கேன். நிறைய நிகழ்வுகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கிட்டு இருக்கோம். அதெல்லாம் இன்னொரு இடுகையில்.
நான் சிலசமயம் அப்செட்டாய் இருந்தாலும் அதை எல்லாம் ஒரிரு வார்த்தைகளில் காணாமல் போகச் செய்யும் வல்லமை படைத்தவள் கயல். என்றென்றும் புத்துணர்ச்சியைத் தருவாள். இனிமையாய்த் தொடரும் இந்த உறவு என்றென்றும் நீடித்திருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)