எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 செப்டம்பர், 2020

ஸோலிங்கன் டு இம்ஷ்லிங். SOLINGEN TO IM SCHLENK

எத்தனை முறை போஸ்ட் செய்தாலும் இம்ஷ்லிங்கில் இருந்து ஸோலிங்கனுக்குப் போகாமல் ஸோலிங்கனில் இருந்து இம்ஷ்லிங் வரையே அப்லோட் ஆகின்றன ஃபோட்டோக்கள். என்ன தலைகீழ் விகிதமோ. 

சரிவாங்க கௌசியின் வீட்டில் விருந்தை சுவைச்சிட்டு ஸோலிங்கனில் இருந்து இம்ஷ்லிங் போவோம். கிட்டத்தட்ட 36 கிமீ தூரம். 

ஸோலிங்கன் சென்றதும் தோழி கௌசியின் ( சிவகௌரி சிவபாலன் ) வீட்டில் சாப்பிட்ட உணவு வகைகள் இவை. நல்ல வெள்ளை வெளேரென்ற பொன்னி அரிசிச் சாதத்தோடு பரங்கிக்காய் கூட்டு, பருப்பு, கத்திரிக்காய் பால்கறி, வேப்பம்பூ வடை, பாகற்காய் சாலட், ஊறுகாய், ரசம், அப்பளம். 


கௌசியின் வீட்டருகில் உள்ள பஸ் ஸ்டாப். நாங்கள் கௌசியின் கணவரின் வருகைக்காகக் காத்திருந்தபோது எடுத்தது. மழையில் நனைந்த சாலைகள் துல்லியமான சுத்தத்தோடு திகழ்ந்தன. 


பேஹன்ஹாஃப் என்றால் முக்கிய பேருந்து நிறுத்தம் என நினைக்கிறேன். 

ரயில்வே ஸ்டேஷன்ல் இருந்து மேம்பாலம் ஏறியபோது அங்கே நின்ற புறாக்கள். 

கவனத்தைக் கவர்ந்து கெக் கெக் என ஒலித்துக் கொண்டிருந்தன இப்புறாக்கள். 

ரயிலிலும் வாசிக்கும் ஜெர்மனி மக்கள்.

யாரிடமிருந்தோ யாருக்காகவோ பயணிக்கும் பூக்கள். 

ரயில்வே ட்ராக்குகள். 

தூரத்தே மைதானம். ஆனால் பச்சைப் புல்வெளியாய்த் திகழ்ந்தது. விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் சிலர். 

இம்ஷ்லிங் டு சோலிங்கனுக்கு நாம் செல்ல சோலிங்கனிலிருந்து இம்ஷ்லிங்குக்கு ஒரு ட்ரெயின் அந்தப்புறம் கடந்து சென்றது. 

நேர்த்தியான கட்டிடங்கள். ஜெர்மனியில் நான் பார்த்த கோபுர அமைப்பில்லாத முதல் கட்டிடம் இது. 

டூயிஸ்பர்க் இம்ஷ்லிங்க் ஸ்டேஷன்.

இம்ஷ்லிங் ஸ்டேஷனுக்குச் செல்லும் வழி. மேலே ரயில் மேம்பாலம். 

மகன் வீட்டில் இருந்து இம்ஷ்லிங்க் ஸ்டேஷனுக்கு நடந்து வந்தோம். ஐந்து நிமிட நடைதான். டூயிஸ்பர்க்கில் வீட்டருகிலேயே ஒரு ஸ்டேஷன் உண்டு. 

டூயிஸ்பர்க் வீட்டருகில் உள்ள ஸ்டேஷனைக் கடந்ததும் வரும் வீடுகள். 

இங்கேயிருந்து நீங்க எல்லாரும் திரும்ப மேலே படிச்சிக்கிட்டே போய் கௌசியின் வீட்டில் உணவருந்திவிட்டு வாங்கப்பா. :) இந்த புது ப்லாகர் டேஷ்போர்டை மாத்தினாலும் மாத்தினாங்க. அநேக சமயம் ஃபோட்டோக்கள் எல்லாம் இப்படித் தாறுமாறு கீழிருந்து மேலா அப்லோட் ஆகுது. எனவே என்னைப் போலவே நீங்களும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் படிச்சிக்கோங்க :) 

1 கருத்து:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...