எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 10 செப்டம்பர், 2020

நடந்தாய் வாழி காவேரி - 1

ஆடி பதினெட்டை ஒட்டிக் காவிரியைக் கடக்க நேர்ந்தது. 

யாருமில்லாமல் காவிரி ஓடியது அன்றுதான் பார்த்தேன். 

ஆதிமந்தி ஆட்டனத்திதான் என் நினைவுக்கு வருவார்கள் ஆதி பதினெட்டென்றால். கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பாதி தூரம்  கூடவே ஓடிவருகிறது காவிரி. இராமகிருஷ்ணா மடம், பள்ளிகள் எனத் தொடர்ந்து காவிரியின் அரசாட்சிதான். 

திட்டுத் திட்டாகப் புதர்கள் முளைத்திருக்க அவற்றைச் சுற்றிச் சுழித்துக் கொண்டு ஓடியது காவிரி. 


இந்த முறையும் தலைகீழ்ப் பாடமாக பதிவேறியுள்ளன புகைப்படங்கள். 

காவிரியைப் பார்க்கத் திருச்சியிலிருந்து கரூர் வந்தாலென்ன. கரூரில் இருந்து திருச்சி வந்தாலென்ன எல்லாம் ஒண்ணுதானே. :) 


ஏதோ ஒரு படித்துறை. டோம் அமைப்பில். 

பைபாஸ் வழியாகவே வந்துவிடுவதால் நகருக்குள் அதிகம் செல்ல வேண்டாம். 


கண்ணெட்டிய தூரம் வரை காவிரி குளுமையாய். 


தூரத்தே தெரிவது மலைக்கோட்டைப் பிள்ளையார் & தாயுமான சுவாமி கோவில் 

அங்கே மட்டும்தான் நகருக்குள் புகுந்தோம். திரும்ப காவிரி பாலம். அடுத்து முக்கொம்பு. 


பாலம் லாங்க் ஷாட்டில் :) 



கொள்ளை அழகு கொட்டிக் கிடக்குது விண்ணிலும் மண்ணிலும். 




விட்டுப் போகவே மனமில்லை.எனவே ஆங்காங்கே படம் பிடித்துக் கொண்டே சென்றேன். 





இப்படிக் கண்நிறையக் கண்டதில்லை காவிரியை எங்கும். 




ஆடி பதினெட்டைப்போல என்றும் ஓடினால் எவ்வளவு நன்றாக இருக்கும். 


காவிரியைப் பார்த்துக் கொண்டு வந்ததில் வெய்யில் கூட உறைக்கவில்லை. பக்கம் காவிரி இருந்ததால் கொஞ்சம் தண்ணென்று காற்றும் வீசியது. 


இனிக்க இனிக்கத் திகட்டாமல் இதுவரை கூடவே ஓடிவந்துக் கொண்டிருந்தாள் காவிரி. இது திருச்சி கரூர் சாலை. 

அமைதியாகவே ஓடி வந்தாய் அதனால் நடந்தாய் வாழி காவேரி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...